குட்டையில் கிடந்த முதலை மாயம்.. தண்ணீரை வெளியேற்றி தேடும் பணியில் வனத்துறை.. கோவை அருகே பரபரப்பு
கோவை: கோவை மேட்டுப்பாளையம் அருகே மக்கள் பயன்படுத்தும் குட்டையில் தென்பட்ட முதலை திடீரென மாயம் ஆனதால் முதலையை மீட்பதற்காக குட்டையில் உள்ள நீரை வெளியேற்றும் பணியில் வனத்துறை ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
வடகிழக்கு பருவமழை கடந்த ஆண்டை விட இந்த முறை கூடுதலாகவே பெய்துள்ளது. குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, குமரி விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் நல்ல மழை பெய்தது. இதனால் இந்த மாவட்டங்களில் வழக்கத்தை விட அதிகமாக நீர் நிலைகள் நிரம்பி காட்சியளிக்கின்றன.

இதேபோல் கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களிலும் நல்ல மழை பெய்துள்ளது. இதனால் இங்குள்ள ஏரி குளம் உள்ளிட்ட நீர்நிலைகளும் நிரம்பியுள்ளது. அதன்படி, கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்த மோத்தேபாளையத்தில் தண்ணீரை சேமித்து வைப்பதற்காக ஒரு குட்டை உருவாக்கப்பட்டது. மழைக்காலத்தில் இதில் தேங்கும் மழை நீர், வெயில் காலத்தில் மக்கள் பயன்பாட்டுக்கும், விவசாயத்துக்கும் பயன்படுத்தப்பட்டு வந்தது.
தற்போது வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்ததால், இந்த குட்டை முழுவதும் நிரம்பி காட்சியளித்தது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக இந்த குட்டையில் முதலை ஒன்று இருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். மேலும் முதலை அந்த குட்டையில் இருப்பது போன்ற வீடியோவையும் இணையத்தில் வெளியிட்டனர். இதனால் குட்டையில் முதலை கிடக்கும் செய்தி அப்பகுதி முழுவதும் பரவியது.

குட்டையில் முதலை கிடப்பதால் அங்கு செல்ல அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனர். இதையடுத்து மோத்தாபாளையம் மக்கள் இதனை வனத்துறையினரின் கவனத்திற்கு கொண்டு சென்றனர். முதலையை குட்டையில் இருந்து மீட்டுக்குமாறு வனத்துறையினரிடம் மக்கள் வலியுறுத்தினர். அதன்பேரில் அந்த குட்டையில் வந்து வனத்துறை அதிகாரிகள், ஊழியர்கள் ஆய்வு செய்தனர். ஆனால் முதலை தென்படவில்லை.
தொடர்ந்து காத்திருந்து ஆய்வு செய்த போதும் அவர்கள் கண்களுக்கு தென்படவில்லை. ஆனால் அப்பகுதி மக்கள் எடுத்திருந்த வீடியாவில் முதலை கிடப்பது உறுதியானது. எனவே முதலையை மீட்க வேண்டும் என்றால் குட்டையில் உள்ள நீரை வெளியேற்றுவது தான் ஒரே வழி என்று கருதி, குட்டையில் இருந்து நீரை வெளியேற்ற முடிவு செய்தனர். அதன்படி, மோட்டார் பம்ப் மூலமாக நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

முழுவதுமாக நீரை வெளியேற்ற 2 நாட்கள் ஆகும் என்றும், அதற்கு முன்பே முதலை தென்பட்டுவிட்டால் மீட்டுவிடலாம் என்றும் வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வெயில் காலங்களில் நீர் பற்றாக்குறையை இந்த குட்டை நீர் தான் போக்கி வந்தது. இதேபோல் விவசாயத்திற்கும் இந்த நீர் பயன்படுத்தப்பட்டு வந்தது. இவ்வளவு நாட்களாக தண்ணீரின்றி காய்ந்து கிடந்து தற்போது தான் இந்த குட்டை முழுவதும் நிரம்பியுள்ளது. இந்த நிலையில், முதலை அச்சம் காரணமாக தற்போது நீர் வெளியேற்றப்படுவதால் அப்பகுதி மக்கள் கவலையடைந்துள்ளனர்.
-
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா?












Click it and Unblock the Notifications