PMFBY.. 173 ரூபாய் செலுத்தினால்.. 16940 ரூபாய் கிடைக்கும்.. விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு
கோவை: வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. இதனால் பயிர்கள் பாதிக்கப்படும் வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. இந்த சூழலில் பயிர்காப்பீடு செய்யும் விவசாயிகள் பாதிப்பில் இருந்து ஓரளவு தப்பிக்க வாய்ப்பு உள்ளது. இதுவரை பயிர் காப்பீடு செய்யாத விவசாயிகள் வரும் டிசம்பர் 16ம் தேதிக்குள் காப்பீடு செய்யுமாறு கோவை மாவட்ட வேளாண் இணை இயக்குநர் தமிழ்ச்செல்வி வலியுறுத்தியுள்ளார்.
விவசாயிகளுக்கு எதிர்பாராத இயற்கை சீற்றங்கள் அல்லது பிற காரணங்களால் ஏற்படும் பாதிப்பின்போது, ஓரளவு பாதுகாப்பை தருவற்காக பயர்காப்பீடு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. பிரதான் மந்திரி ஃபசல் பீமா யோஜனா (PMFBY) திட்டம் நாடு முழுவதும் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தில் விவசாயிகள் செலுத்த வேண்டிய பிரீமியம் விகிதம் மிகக் குறைவு ஆகும். மீதமுள்ள காப்பீட்டுக் கட்டணத் தொகையை மத்திய மற்றும் மாநில அரசுகள் மானியமாகச் செலுத்துகின்றன. விவசாயிகள் தங்கள் பயிர்களுக்கு காப்பீடு செய்ய, நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் (PACS) அல்லது தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் கடன் பெறும்போதே காப்பீடு செய்ய முடியும். அதேநேரம் கடன் பெறாத விவசாயிகள், பொது சேவை மையங்கள் மூலம் பயிர் காப்பீடுக்கு விண்ணப்பிக்க முடியும். அதேபோல் தேசிய பயிர்க் காப்பீட்டு இணையதளம் (www.pmfby.gov.in) மூலமும் நேரடியாகப் பதிவு செய்ய முடியும்.

ஆதார் அட்டை, விவசாய நிலத்தின் ஆவணம் (பட்டா / அடங்கல் / சிட்டா), வங்கிக் கணக்கு விவரங்கள், விதைப்புச் சான்று ஆகிய ஆவணங்களுடன் சென்று விண்ணப்பிக்கலாம். அதேநேரம் பயிர் காப்பீடு செய்வதற்கான காலக்கெடு மற்றும் விதிமுறைகளை பொறுத்தவரை பயிர்களை பொறுத்து மாறுகிறது. இந்நிலையில் கோவை மாவட்ட விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
கோவை மாவட்ட வேளாண் இணை இயக்குனர் தமிழ்ச்செல்வி கூறுகையில், "கோவை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை 146,04 செ.மீ. பதிவாகி உள்ளது. மழையால் மக்காச்சோளம், சோளம். கொண்டைக்கடலை ஆகிய பயிர்களில் மகசூல் இழப்பை தவிர்க்கும் வகையில் இந்த பருவத்தில் காப்பீடு செய்யலாம்.
பயிர் காப்பீடு பிரிமீய தொகை மக்காச்சோளத்துக்கு ரூ.545, கொண்டை கடலைக்கு ரூ.254, சோளத்துக்கு ரூ.173. அந்த தொகையை செலுத்தி உரிய காலக்கெடுவுக்குள் பயிர் காப்பீடு செய்ய வேண்டும். காப்பீடு செய்த மக்காச்சோள பயிருக்கு அதிகபட்ச காப்பீடாக ஒரு ஏக்கருக்கு ரூ.36 ஆயிரத்து 300, சோளப் பயிருக்கு ஒரு ஏக்கருக்கு ரூ.11,503, கொண்டைக்கடலை பயிருக்கு ரூ.16 ஆயிரத்து 940 வழங்கப்படும்.
காப்பீடு செய்ய மக்காச்சோள பயிருக்கு நவம்பர் 30-ந் தேதி, சோளப்பயிருக்கு டிசம்பர் மாதம் 16-ந் தேதி கடைசி நாள். எனவே விவசாயிகளின் சேமிப்பு வங்கி கணக்கு புத்தகம் நகல், பயிர் சாகுபடி அடங்கல், விண்ணப்ப படிவம், முன்மொழிவு படிவம் ஆகிய ஆவணங்களுடன் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், வணிக வங்கிகள் மற்றும் பொதுசேவை மையங்கள் மூலமாக உரிய தொகையை செலுத்தி பயிர் காப்பீடு செய்து கொள்ளலாம். இதன் மூலம் மழையால் மகசூல் பாதிக்கும் பட்சத்தில் உரிய காப்பீடு பெற்று பயன் அடையலாம்" இவ்வாறு கூறியுள்ளார்.

-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர் -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி












Click it and Unblock the Notifications