கோவையில் முக்கிய சாலைகள் அடியோடு மாறுது.. வாகன ஓட்டிகளுக்கு இது நல்ல செய்தி

Subscribe to Oneindia Tamil

கோவை: கோவை மாநகரில் வாகனங்களின் எண்ணிக்கை கடந்த 15 ஆண்டுகளில் ஒப்பிடும் போது, கற்பனைக்கும் எட்டாத அளவிற்கு வளர்ந்துள்ளது. ஒரு வீட்டிற்கு ஒரு இரு சக்கர வாகனம், ஒரு தெருவிலேயே பல கார்கள் என்கிற அளவில் வாகன நெருக்கம் அதிகமாக உள்ளது. இதனால் கோவையில் எல்லா சாலைகளிலும் நெரிசல் அதிகமாக உள்ளது. இதனால் கோவை மாநகராட்சி சார்பில், முக்கிய சாலைகளில் ரூ.5 கோடியில் ரவுண்டானா மற்றும் போக்குவரத்து சீரமைப்பு வசதிகள் செய்யப்படுகிறது.

கோவை மாநகரம் தமிழ்நாட்டில் சென்னைக்கு அடுத்தபடியாக பெரிய நகரமாக வளர்ந்துள்ளது. வாகனங்களின் எண்ணிக்கை நகரில் பெரிய அளவில் அதிகரித்துள்ளது. இதனால் பல்வேறு சாலைகல் விபத்துகளின் எண்ணிக்கையும் அதிகாகவே உள்ளத. இதனால் கோவை மாநகர போலீசார் நெரிசலை குறைக்க யூடர்ன் முறையை அறிமுகம் செய்தனர். ஆனால் அது பெரிய அளவில் கை கொடுக்கவில்லை.

Decision to set up roundabouts on major roads in Coimbatore Corporation good news

மேம்பாலங்கள்

மேம்பாலங்களே தேவைப்பட்டன. ஓரளவு மேம்பாலங்களும் கட்டப்பட்டுள்ளன. எனினும் இன்னும் பல சிக்னலில் நெரிசல் ஏற்படுகிறது. எனவே கோவை மாநகராட்சி சார்பில் போக்குவரத்து சீரமைப்பு திட்டம் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் படி கோவை மாநகரின் முக்கிய சாலைகளில் ரவுண்டானாக்கள் மற்றும் சிறிய பூங்கா, போக்குவரத்து விழிப்புணர்வு தகவல் பலகைகள் உள்ளிட்டவை வரப்போகின்றன.

இந்த போக்குவரத்து ரவுண்டானாக்கள், பசுமை வசதிகள், சிலைகளுடன் சாலை பாதுகாப்பை மேம்படுத்துதல் மற்றும் நகர்ப்புற வடிவமைப்பிற்கு பங்களிக்கப்படுகிறது. ரவுண்டானா கட்டுவதற்கு முன்பு, போலீஸ் துறையுடன் ஒருங்கிணைந்து சோதனை ஓட்டங்கள் உட்பட போக்குவரத்து முறைகள் குறித்து ஆய்வு செய்யவும் அதிகாரிகள் தெரிவித்தனர். அத்துடன் போக்குவரத்து தேவைகளின் அடிப்படையில், மாநகராட்சியின் அனைத்து மண்டலங்களிலும் முக்கிய இடங்களில் போக்குவரத்து ரவுண்டானாக்கள் அமைக்கப்பட உள்ளது.

சங்கனூர் பிரதான சாலை

கோவை மத்திய மண்டலத்தில், 32-வது வார்டு சங்கனூர் பிரதான சாலை மற்றும் கண்ணப்பா நகர் சந்திப்பு, 49-வது வார்டு புதிய திட்டம் சாலை மற்றும் பாரதியார் சாலை சந்திப்பு ஆகிய இடங்களில் ரவுண்டானா அமைக்கப்பட உள்ளது. அதேபோல் கிழக்கு மண்டலத்தில், 24-வது வார்டு தண்ணீர் பந்தல் சாலையில் உள்ள எஸ்-வளைவு பகுதிகளில் அமைக்கப்பட உள்ளன.

கோவை மாநகரம் மேற்கு மண்டலத்தில், 35-வது வார்டில் இடையர் பாளையத்தில் உள்ள சந்திப்பு அடையாளம் காணப்பட்டுள்ளது. கோவை மாநகரம் வடக்கு மண்டலத்தில் 19-வது வார்டு சத்தி சாலை, பழைய சத்தி சாலை சந்திப்பு, 12-வது வார்டு தாகூர் தெரு மற்றும் அத்திபாளையம் சந்திப்பு, 20-வது வார்டு விளாங்குறிச்சி சாலையில் உள்ள புதிய எம்.எஸ்.ஆர். சந்திப்பு ஆகிய இடங்களில் ரவுண்டா அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

பேரூர் சாலை செல்வபுரம் சந்திப்பு

கோவை மாநகரம் தெற்கு மண்டலத்தின் பொள்ளாச்சி மெயின் ரோட்டின் முக்கிய சந்திப்புகள், சாரதா மில் சாலை சந்திப்பு, பேரூர் சாலை செல்வபுரம் சந்திப்பு, மற்றும் புட்டுவிக்கி சாலை, பேரூர் சாலை சந்திப்பு ஆகிய இடங்களில் அமைக்கப்பட உள்ளது. அதேபோல் கோவையின்
முக்கிய சந்திப்புகளில் உயர் கோபுர மின் விளக்குகளை நிறுவுவதற்கான திட்டமும் உள்ளது. ரூ.5 கோடி மதிப்பீட்டில் மொத்தம் 58 இடங்கள் அடையாளம் காணப்பட்டிருக்கிறது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+