என்னாது.. கொரோனா பாதித்தவர்களுக்கு நீரிழிவு நோய் ஏற்பட சான்ஸ் அதிகமா.. டாக்டர் சொல்வதை பாருங்க
கோவை: கொரோனா பாதிப்புக்கு பின் சர்க்கரை நோய் வரலாம் என்று எச்சரிக்கிறார், மருத்துவர் செந்தில் குமார்.
Recommended Video
அவினாசி சாலையில் உள்ள ஹிந்துஸ்தான் மருத்துவமனையில் சிறப்பு சர்க்கரை நோய் மையத்தை ஹிந்துஸ்தான் குழுமத்தின் தலைவர் கண்ணையன் இன்று திறந்து வைத்தார்.
இதனை தொடர்ந்து சர்க்கரை நோய் மருத்துவ நிபுணர் செந்தில்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு கண் பார்வை குறைபாடு, சிறுநீரக பாதிப்பு உள்ளிட்டவை ஏற்படலாம். சர்க்கரை நோய் இல்லாமல் இருப்பவர்களுக்கும் கால் எரிச்சல் உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்படலாம்.

சர்க்கரை அளவு
இந்த சிறப்பு சிகிச்சை மையத்தின் மூலம் ஒருவர் உடலில் சர்க்கரை அளவு எவ்வளவு உள்ளது என்பதை துல்லியமாக கண்டறிந்து, அதற்கேற்ற சிகிச்சை வழங்கி நோயாளியின் ஆயுளை நீட்டிக்க முடியும். சர்க்கரை நோயாளிகள் உடல் உறுப்புகள் சரியாக இயங்குகிறதா? சிகிச்சை தேவையா? புதிய மருந்துகள் தேவையா? உள்ளிட்டவற்றை கண்டறிந்து சிகிச்சை வழங்க முடியும்.

பேறு காலம்
பிரசவ காலத்தில் பெண்களுக்கு சர்க்கரை நோய் வரலாம். அதன்பின் சர்க்கரை நோய் குணமாகும். இருந்த போதிலும் 5 அல்லது 7 வருடங்களுக்கு பிறகு மீண்டும் சர்க்கரை நோய் வரலாம். எனவே பெண்கள் தங்களது பி.எம்.ஐ-ஐ சரியாக வைத்து, உணவு பழக்கத்தை சரியாக வைக்க வேண்டும். இந்தியா சர்க்கரை நோயின் தலைமையிடமாக மாறி வருகிறது.

நீரிழிவு காரணங்கள்
கோவையிலும் சர்க்கரை நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. உடல் பருமன், உடற்பயிற்சி செய்யாமல் இருத்தல், மன அழுத்தம், மாவு சத்து அதிகம் எடுப்பது உள்ளிட்டவை சர்க்கரை நோய்க்கான காரணிகளாகும். இதனை முன்கூட்டியே அறிந்துகொண்டால், கால்களை இழப்பது, கண் பார்வையை இழப்பது உள்ளிட்டவற்றை தடுக்கலாம்.

கொரோனா
கொரோனா பாதித்தால் சர்க்கரை நோய் அதிகமாகிறது. கொரோனா வந்த பிறகு சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்பும் உள்ளது. இந்த வைரசானது இன்சுலின் சுரக்கும் பீட்டா செல்கள் தாக்கி, அழிக்கிறது. இதனால் இன்சுலின் குறைபாடு ஏற்பட்டு சர்க்கரை நோய் வரலாம். எனவே வரும்முன் காப்போம். இவ்வாறு டாக்டர் செந்தில்குமார் தெரிவித்தார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications