தொகுதி பங்கீடு குறித்து எதுவும் பேசவில்லை.. பியூஷ் கோயல் சந்திப்பில் நடந்தது இதுதான் - நயினார்
கோவை: என்.டி.ஏ. கூட்டணியில் ஓ.பன்னீர் செல்வம், டிடிவி தினகரனை இணைக்க பச்சை கொடி காட்டி நீண்ட நாள் பஞ்சாயத்துக்கு எடப்பாடி பழனிசாமி முற்றுப்புள்ளி வைத்துள்ளதாகவும், ஓ.பன்னீர் செல்வத்துக்கு 3 தொகுதிகள், டிடிவி தினகரனுக்கு 6 தொகுதிகள் ஒதுக்க எடப்பாடி பழனிசாமி சம்மதம் தெரிவித்திருப்பதாக தகவல் வெளியாகியிருந்தது. இந்நிலையில், தொகுதி பங்கீடு தொடர்பாக எடப்பாடி பழனிசாமியுடன் பேசவில்லை. திமுக அகற்றப்பட வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். ஒத்த கருத்துடையோர் ஓரணியில் வர வேண்டும். தை பிறந்தால் வழி பிறக்கும் என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது :- தமிழ்நாட்டின் களநிலவரம் எப்படி இருக்கிறது, தேர்தல் கள நிலவரம் எப்படி என்பது குறித்து பேசப்பட்டுள்ளது. தொகுதி பங்கீடு குறித்து நாங்கள் எதுவும் பேசவில்லை. நாங்களும், அதிமுக கூட்டணியும் தயாராக இருக்கிறோம். மக்கள் யாருக்கு ஓட்டளிப்பது என்பது குறித்து இன்னும் தயாராகவில்லை என்று அவரிடம் கூறினோம்.

கடந்த சட்டமன்றத் தேர்தல், பாராளுமன்றத் தேர்தல் எப்படி நடந்தது என்பது குறித்துப் பேசியுள்ளோம். தமிழ்நாட்டில் திமுக அகற்றப்பட வேண்டும் என்பதே எங்களின் நோக்கம். ஒத்த கருத்துடையவர்கள் ஓரணியில் இணைய வேண்டும் என்பதே எங்களுடைய விருப்பம். தொகுதி பங்கீடு தொடர்பாக எடப்பாடி பழனிசாமியுடன் நாங்கள் பேசவில்லை
டிடிவி தினகரன் குறித்த கேள்விக்கு, அரசியலில் நிரந்தர நண்பரும் கிடையாது. நிரந்தர எதிரியும் கிடையாது. விஜய் பற்றி பேசப்பட்டதா என்ற கேள்விக்கு,
விஜய் பற்றி நாங்கள் எதுவும் பேசவில்லை. விஜய் ஸ்பாயிலர் என்று எப்படி சொல்ல முடியும். தேர்தலுக்கு இன்னும் மூன்று மாதங்கள் உள்ளன. நாட்கள் நிறைய இருக்கிறது. யார் யார் பக்கம் இருக்கிறார்கள். யார் கூட்டணியில் இருப்பார்கள் என்பதைப் பொறுத்து தான் சொல்ல முடியும்.
பொங்கல் முடிந்து கூட நல்ல காரியங்கள் நடக்கலாம். தை பிறந்தால் வழி பிறக்கும் வாய்ப்புள்ளது. இப்போது எதைப் பற்றியுமே கருத்து சொல்ல முடியாது. யூடியூபர்கள் 100 பேர் சேனலை வைத்துள்ளனர். இப்போதெல்லாம் எல்லோருமே கருத்துக் கணிப்பை நடத்துகின்றனர். ஒவ்வொருடைய கருத்துகளுமே வேறுபடுகிறது. கன்னியாகுமரியில் நடத்திய கருத்துக் கணிப்பு கும்மிடிப்பூண்டிக்கு பொருந்தாது. ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் விடியக்கூடிய அரசு வரும் என்று கூறினார்.












Click it and Unblock the Notifications