கோயம்புத்தூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"என் தம்பி உயிரை காப்பாத்துங்க ப்ளீஸ்".. வீடியோ மூலம் உதவி கோரும் வேடசந்தூர் இளைஞர்..!

பக்கவாதம் வந்த தம்பியை காப்பாற்ற நிதியுதவி கேட்டு அவரது சகோதரர் கோரிக்கை விடுத்துள்ளார்

Google Oneindia Tamil News

கோவை: "என் தம்பி உயிரை காப்பாத்துங்க ப்ளீஸ்.. யாராவது பண உதவி செய்தால் நல்லா இருக்கும்" என்று இளைஞர் ஒருவர் வீடியோ மூலம் பொதுமக்களிடம் உதவி கேட்டுள்ளார்.

Recommended Video

    பக்கவாதம் வந்த தம்பி.. ஆபரேஷனுக்கு உதவி தேவை.. நிதியுதவி கோரும் அண்ணன்!

    திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பகுதியை சேர்ந்தவர் அருண் சங்கர்.. சென்னை ரெட்ஹில்ஸ் பகுதியில் ஒரு ஆய்வகத்தில் லேப்-டெக்னிஷியனாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்த நேரத்தில் ஊரடங்கு பிறப்பிக்கவும், சொந்த ஊருக்கு வந்து சேர்ந்தார்.

    dindigul youth needs medical assistance

    வீட்டுக்கு வந்த ஒரு சில நாட்களில் இவருக்கு கடுமையான தலைவலி இருந்துள்ளது.. மேலும் இடது கை, இடது கால் செயல்படாமல் போயுள்ளது.. அதனால் ஆஸ்பத்திரிக்கு சென்று ஸ்கேன் எடுத்து பார்த்ததில் மூளைக்கு செல்லும் ரத்தகுழாயில் அடைப்பு இருந்தது தெரியவந்துள்ளது.. இதன்பிறகு கோவையில் ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் குடும்பத்தினர் அனுமதித்தனர்.

    அப்போது அருண்சங்கர் பக்கவாதம் நோயினால் பாதித்துள்ளது தெரியவந்துள்ளது. உடனடியாக ஆபரேஷன் செய்ய வேண்டும் சொல்லி, 15 லட்சம் ரூபாய் செலவாகும் என்று டாக்டர்கள் சொன்னார்களாம். இதையடுத்து அருண்சங்கரின் சகோதர் ஐயா சங்கர் என்பவர் பொதுமக்களிடம் நிதிஉதவி கோரி உள்ளார்.. இது சம்பந்தமான ஒரு வீடியோவில் அவர் கண்ணீர் மல்க கூறியதாவது:

    இது சம்பந்தமாக ஒரு வீடியோவையும் அனுப்பி உள்ளார்.. அதில் அவர் சொல்லி உள்ளதாவது: "என் தம்பிக்கு மூளைக்கு போகும் ரத்தக்குழாயில் அடைப்பு இருக்கிறது என டாக்டர்கள் சொல்லி உள்ளனர்.. அந்த அடைப்பை சரி செய்ய ஆபரேஷன் செய்ய வேண்டும், 15 லட்சம் ரூபாய் செலவாகும் என்று சொன்னார்கள்.. எங்களால் அவ்வளவு பணத்தை உடனே ஏற்பாடு செய்ய முடியவில்லை. வசதியும் இல்லை.

    dindigul youth needs medical assistance

    எங்களால் முடிந்தவரை பணத்தை புரட்டி தந்து வருகிறோம்.. அதை வைத்து சிகிச்சை நடந்து வருகிறதே தவிர ஆபரேஷனுக்கு தேவைப்படும் பணம் கிடைக்கவில்லை.. நீங்கள் யாராவது எங்களுக்கு உதவி செய்தால் என் தம்பியின் உயிரை காப்பாற்ற உதவும்.. ப்ளீஸ்"என்று கண்ணீர் மல்க கேட்டுள்ளார். அத்துடன் ஆஸ்பத்திரி ரிப்போர்ட் மற்றும் பில்களையும் இணைத்து அனுப்ப உள்ளார்..

    உதவ நினைப்போர் உதவலாம். இதுதொடர்பாக மேலும் விவரம் அறிய தொடர்பு கொள்ள வேண்டிய செல்போன் எண்: Contact No: 99628 31502

    English summary
    dindigul youth needs medical assistance
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X