போஸ்டர் ஒட்டுவதில் பஞ்சாயத்து.. சமரசம் செய்தவருக்கு சரமாரி அடி.. சர்ச்சையில் இந்து அமைப்பினர்

Subscribe to Oneindia Tamil

கோவை: கோவை மாவட்டம், செல்வபுரம் பகுதியில் சுவரொட்டி ஒட்டுவதில் இந்து மக்கள் கட்சி மற்றும் இந்து முன்னணி அமைப்பினர் இடையே பிரச்சனை ஏற்பட்ட நிலையில், சமரசம் செய்ய சென்றவரை தாக்கியதாக இந்து மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் சூர்யா என்பவரை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில், கார்த்திக் நடித்து வெளியானது மெட்ராஸ் படம். இப்படத்தில் ஒரு சுவரை வைத்து எளிய மக்களின் வாழ்வில் அரசியலால் ஏற்படும் பிரச்னைகள் குறித்து தெளிவாக விளக்கப்பட்டிருக்கும். சுவரை யார் கைப்பற்றுவது என்பதில் இரு அரசியல் கட்சியினரிடையே ஏற்படும் மோதல் போக்கையொட்டி படத்தின் கதை அமைக்கப்பட்டிருக்கும்.

diwali poster

பொதுவாக பண்டிகைகள், தேர்தல் வேளைகள் மற்றும் அரசியல் கட்சிகள் தலைவர்களின் வருகையின்போது சம்பந்தப்பட்ட கட்சியினர் சுவரொட்டிகள் ஒட்டி வாழ்த்து தெரிவிப்பது வழக்கம். சில சமயங்களில் இந்த சுவரொட்டி ஒட்டும் சம்பவங்களால் சில தாறுமாறான தகராறுகள் ஏற்படுவதும் வழக்கம்தான்.

அந்த வகையில், கோவையில் தீபாவளி வாழ்த்து தெரிவிப்பதற்காக சுவரொட்டி ஒட்டுவதில் இந்து மக்கள் கட்சி மற்றும் இந்து முன்னணி அமைப்பினர் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அப்போது, சமரசம் செய்ய சென்ற ஆட்டோ ஓட்டுநர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தில், இந்து மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் சூர்யா என்பவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

கோவை மாவட்டம், செல்வபுரம் பகுதியில் இந்து மக்கள் கட்சி மற்றும் இந்து முன்னணி சார்பில் தீபாவளிக்கு வாழ்த்து தெரிவித்து சுவரொட்டிகள் ஒட்டப்பட்டது. இதில்,இந்து முன்னணியினர் ஒட்டிய சுவரொட்டிகளின் மீது இந்து மக்கள் கட்சியினர் சுவரொட்டி ஒட்டியதால் பிரச்சனை ஏற்பட்டது. இது தொடர்பாக இந்து மக்கள் கட்சியைச் சேர்ந்த மாவட்ட செயலாளர் சூர்யா, இந்து முன்னணியினருடன் வாக்குவாதம் செய்து கொண்டிருந்தார்.

வாக்குவாதம் முற்றிய நிலையில் இருதரப்பினர் இடையே மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டது. இதையடுத்து அங்கிருந்த ஆட்டோ ஓட்டுநர் சதீஷ் என்பவர் இரு தரப்பினரையும் சமாதானப்படுத்த முயற்சித்தார். அப்பொழுது இந்து மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் சூர்யா, ஆட்டோ ஓட்டுனர் சதீஷை ஆபாசமாகப் பேசி தாக்கி மிரட்டல் விடுத்தார்.

இது தொடர்பாக ஆட்டோ ஓட்டுநர் சதீஷ் செல்வபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்தப் புகாரின்பேரில், செல்வபுரம் காவல் துறையினர் மூன்று பிரிவுகளில் இந்து மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் சூர்யா மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சூர்யா நீதிபதி இல்லத்தில் ஆஜர் படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

சூர்யா மீது ஏற்கனவே கோவை நகரில் பல்வேறு அடிதடி வழக்குகளும், மோதல் வழக்குகளும் இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்து முன்னணி அமைப்பில் நிர்வாகியாக இருந்த சூர்யா, மோசமான செயல்பாடுகளால் அதில் இருந்து நீக்கப்பட்டார். பின்னர், சூர்யா இந்து மக்கள் கட்சியில் சேர்ந்து மாவட்ட செயலாளராக செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+