ரீ-என்ட்ரி கொடுத்த சேனாதிபதி மகள்: இளம் பெண் கவுன்சிலர் நிவேதா கோவை மாமன்ற உறுப்பினராக தொடர ஒப்புதல்
கோவை: தகுதி நீக்கம் செய்யப்பட்ட கோவை மாநகராட்சியின் இளம் பெண் கவுன்சிலரான நிவேதா சேனாதிபதி மீண்டும் மாகநராட்சி கவுன்சிலராக தொடர மாநகர கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது.
கோவை மாநகராட்சி 97வது வார்டு மாமன்ற உறுப்பினராக இருப்பவர் நிவேதா. கோவை மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்களிலேயே இளம் பெண் கவுன்சிலர் நிவேதா தான். 22 வயது கல்லூரி மாணவியாக தேர்தல் களத்தைச் சந்தித்து வெற்றி பெற்று மாமன்ற உறுப்பினர் ஆனார் நிவேதா.

நிவேதா சேனாதிபதி: நிவேதா, திமுக கோவை கிழக்கு மாவட்ட முன்னாள் செயலாளர் மருதமலை சேனாதிபதியின் மகள் ஆவார். நிவேதா தேர்தலில் களமிறங்கும்போதே மேயர் பதவிக்கு வருவார் என்ற பேச்சுகள் எழுந்தன. கோவை மாநகராட்சி தேர்தலில் திமுக 100க்கு 96 இடங்களில் வென்ற நிலையில், திமுக சார்பில் கல்பனா கோவை மாநகராட்சி மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதையடுத்து இளம் கவுன்சிலரான நிவேதா சேனாதிபதி, மாநகராட்சி கூட்டங்களில் பங்கேற்பதை தவிர்த்து வந்தார். கடந்த 3 மாநகராட்சி கூட்டங்களில் தொடர்ந்து பங்கேற்காததால் கவுன்சிலர் தகுதியை இழக்கும் சூழல் ஏற்பட்டது. தொடர்ந்து 3 மாமன்ற கூட்டங்களில் பங்கேற்கவில்லை எனில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டம் 1998 பிரிவு 32(1)இன் படி பதவி பறிபோகும்.
தகுதி இழப்பு: அந்தவகையில், கோவை மாநகராட்சியில் 97வது வார்டு திமுக பெண் கவுன்சிலரான நிவேதா சேனாதிபதி கடந்த ஜனவரி, மார்ச், மே ஆகிய மூன்று மாதங்களில் நடைபெற்ற மாமன்றக் கூட்டங்களில் தொடர்ந்து பங்கேற்காததை தொடர்ந்து நிவேதா, மாமன்ற உறுப்பினர் தகுதியை இழக்கிறார் என அறிவிக்கப்பட்டது.
அதேசமயம், கூட்டங்களில் பங்கேற்காதது குறித்து விளக்கம் ஏதாவது தெரிவித்து இருந்தால் மாநகராட்சி ஆணையாளர் அதனை வெளியிடுவார். அக்காரணத்தை தொடர்ந்து தகுதி இழந்தவர்கள் மீண்டும் தொடர்வது குறித்து மாமன்ற கூட்டம் முடிவு செய்யும்.
மீண்டும் என்ட்ரி: அந்தவகையில், நிவேதா சேனாதிபதியிடம் விளக்கம் கேட்கப்பட்டது. அவர் மாமன்ற கூட்டங்களில் பங்கேற்காததற்கு தனக்கு உடல்நிலை சரியில்லாததே காரணம் என விளக்கம் அளித்து, தன்னை மாநகர கவுன்சிலராக தொடர அனுமதிக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார். இதையடுத்து மாநகராட்சி கவுன்சிலில் நிவேதாவின் பதவியை தொடரச் செய்யலாமா என்பது குறித்து மாமன்ற உறுப்பினர்களிடையே விவாதிக்கப்பட்டது.
97வது வார்டு கவுன்சிலராக எஸ்.நிவேதா சேனாதிபதியை மீண்டும் நியமிக்க கோவை மாநகராட்சி கவுன்சில் இன்று ஒருமனதாக ஒப்புக்கொண்டது. இதையடுத்து, மாநகராட்சி கவுன்சிலராக நிவேதா சேனாதிபதி தொடர்கிறார். மாமன்ற கவுன்சிலின் ஒப்புதலுக்குப் பிறகு இன்று நடைபெற்ற கோவை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் நிவேதா பங்கேற்றார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications