Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆர் கே நகர் இடைத்தேர்தலில் பணம் கொடுத்தே தினகரன் வெற்றி.. திவாகரன் பரபரப்பு குற்றச்சாட்டு

Subscribe to Oneindia Tamil

கோவை: ஆர் கே நகர் இடைத்தேர்தலில் தினகரன் பணம் கொடுத்துதான் ஜெயித்தார் என்று அண்ணா திராவிடர் கழக பொதுச் செயலாளர் திவாகரன் தெரிவித்தார்.

ஜெயலலிதாவை அப்பல்லோவில் அனுமதித்தபோது சசிகலா குடும்பத்தை சேர்ந்த 10 பேர் மட்டுமே இருந்தனர். அப்பல்லோவில் உணவுக் கட்டணத்துக்காக சசிகலா மீது குறை கூறுபவர்கள் அப்போது சசிகலாவின் காலில் விழுந்தவர்கள்.

ஜெயலலிதா மரணம் தொடர்பாக நடைபெற்று வரும் விசாரணை ஆணையத்தில் நான் ஆஜராகி ஆணையம் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தேன். அவர்கள் குறிப்பிட்ட கேள்விகளை மட்டுமே கேட்டுக் கொண்டனர்.

தனிக்கட்சி

தனிக்கட்சி

ஜெயலலிதாவிடம் எந்த மாதிரியான அறிமுகம் ஏற்பட்டது என்பது குறித்து தான் கேள்வி கேட்டனர். நான் தற்போது சசிகலா குடும்பத்தை விட்டு ஒட்டு மொத்தமாக வெளியே வந்து விட்டேன். தனிக்கட்சி ஆரம்பித்து 4 மாதம் ஆகி விட்டது.

பதவி கொடுத்தவர்கள்

பதவி கொடுத்தவர்கள்

மாவட்ட செயலாளர், நகர செயலாளர், பூத் கமிட்டி அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறேன். கட்சியை வலுப்படுத்தி வருகிறேன். டிடிவி தினகரன் ஜாதிக்கட்சி நடத்துகிறார். குடும்பத்தில் உள்ளவர்களுக்கு தான் கட்சி பதவி வழங்கி உள்ளார். அவர் பதவி கொடுத்தவர்கள் அனைவரும் எங்கள் உறவினர்கள். அவர்கள் எங்கு கூட்டம் போட்டாலும் போய் விடுவார்கள்.

மரணத்தில்

மரணத்தில்

டிடிவி தினகரன் தனது கட்சி அங்கீகாரத்துக்கு பதிவு செய்யவில்லை. எங்கள் கட்சியில் 95 சதவீத வேலைகள் முடிந்து விட்டது. ஜெயலலிதா மரணத்தில் எந்த மர்மமும் இல்லை. அவரை சரியான வழி காட்டுதல் இல்லாமல் மருத்துவமனையில் சேர்த்தது தான் இந்த குழப்பத்திற்கு காரணம்.

20 ரூபாய் நோட்டுக்கள்

20 ரூபாய் நோட்டுக்கள்

தேர்தலில் டிடிவி தினகரன் தனக்கு பெரிய வெற்றி கிடைக்கும் என நினைக்கிறார். அவர் ஆர்.கே. நகர் தேர்தலில் பணம் கொடுத்து தான் ஜெயித்தார். 20 ரூபாய் நோட்டுக்களை கொடுக்கவில்லை என்றால் அவர் ஜெயித்திருக்க மாட்டார்.

அமைச்சர்கள்

அமைச்சர்கள்

நாடாளுமன்ற தேர்தலுக்கு முன் அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்து சென்றவர்கள் இணைய வாய்ப்பு உள்ளது. இதனை கட்சி, ஆட்சியில் இருப்பவர்கள் தான் சொல்ல வேண்டும். ஆனால் அமைச்சர்கள் தான் யார் வந்தாலும் சேர்த்து கொள்வோம் என கூறி வருகிறார்கள்.

வரட்டும்

வரட்டும்

இதில் யார் நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அவர்கள் தான் உணர்வுபூர்வமாக நடவடிக்கை எடுக்க வேண்டும். முறைப்படி அழைப்பு வந்தால் நாங்கள் பேச்சு நடத்த தயாராக உள்ளோம். எங்கள் கட்சிக்கு வருபவர்கள் வரட்டும் என்று தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+