கோயம்புத்தூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சூலூர் அதிமுக வேட்பாளர் வெல்வார் .. அமைச்சர் வேலுமணி

Google Oneindia Tamil News

கோவை: கோவை சூலூர் தொகுதியில் 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் வெற்றி பெறுவார் என அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கூறியுள்ளார்.

சூலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சின்னியம்பாளையம், மயிலம்பட்டி, முத்துகவுண்டன் புதூர் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி அ.தி.மு.க. வேட்பாளர் வி.பி. கந்தசாமியை ஆதரித்து பிரச்சாரம் செய்தார். அப்போது பேசிய அமைச்சர் வேலுமணி, தேர்தல் நேரத்தில் மட்டும் வந்து மக்களிடம் பொய் வாக்குறுதி அளிக்கும் எதிர்க்கட்சிகளுக்கு பாடம் புகட்டுங்கள் என்றார்

DMK can no longer come to power .. Minister S.P.Velumani campaign

கோவை மாவட்டத்திற்கு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளதாக பட்டியலிட்ட அவர் . குடிநீர் பிரச்சினையை தீர்க்கும் வகையில் மூன்றாவது கூட்டு குடிநீர் திட்டத்திற்கு டெண்டர் விடப்பட்டுள்ளதாக கூறினார். நடுத்தர மக்களும், ஏழைகளும் பயன்படுத்தும் அரசு மருத்துவமனை தற்போது தனியார் மருத்துவமனைக்கு இணையாக மேம்படுத்தப்பட்டுள்ளதாக பேசினார்

முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஒரு விவசாயி என்பதால், 70 ஆண்டுகால விவசாயிகளின் கோரிக்கையான அத்திக்கடவு அவினாசி திட்டத்திற்கு அடிக்கல் நாட்டி பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

ஸ்டாலின் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தபோது தமிழகத்திற்கு நல்ல திட்டங்கள் எதையுமே செயல்படுத்தவில்லை என சாடினார். தி.மு.க. இன்று குறுக்கு வழியில் ஆட்சியைப் பிடிப்பதற்காக கூட்டணி அமைத்து செயல்படுகிறது. இப்போது மட்டுமல்ல எப்போதுமே தி.மு.கவால்ஆட்சியைப் பிடிக்கவே முடியாது.

சூலூர் தொகுதி அதிமுக வேட்பாளர் வி.பி. கந்தசாமி மக்களுக்காக பணியாற்ற கூடியவவர் எனவே பொய் வாக்குறுதிகளை அள்ளி வீசும் எதிர்க்கட்சி வேட்பாளர்களை டெபாசிட் இழக்க செய்யுங்கள் என கூறினார்

English summary
Minister velumani said In the Sulur constituency, the AIADMK candidate will win by 1 lakh votes
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X