கோடைகாலத்தில் மின் விநியோகத்தில் எந்த பாதிப்பும் இருக்காது.. ‘ஸ்வீட்’ நியூஸ் சொன்ன செந்தில் பாலாஜி!
வரும் கோடை காலத்தில் மின் விநியோகத்தில் பாதிப்பு இருக்காது என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
கோவை : ஏப்ரல், மே தொடங்கினாலே வெயில் வாட்டும் என்பதையும் தாண்டி மின் வெட்டு அதிகரிக்குமோ என்ற அச்சம் தான் பொதுமக்களிடையே அதிகமாக ஏற்படும். இந்நிலையில், வரும் கோடைக் காலத்த்தில் மின் விநியோகத்தில் எந்தவிதமான பாதிப்புகளும் இருக்காது என்று தமிழ்நாடு மின்சாரத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.
4200 மெகாவாட்டுக்கு மேல் கூடுதலாக கோடைக் காலத்தை சமாளிப்பதற்கு மின் விநியோகம் தேவைப்பட்டிருக்கிறது. இதற்காக டெண்டர் கோரப்பட்டு இறுதி செய்யப்பட்டுள்ளது என அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.
கோவையில் தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அமைச்சர் செந்தில்பாலாஜி
அப்போது அவரிடம் கோடைகாலம் தொடங்கவுள்ளதால், மின் விநியோகம் தொடர்பாக எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அமைச்சர் செந்தில்பாலாஜி, "வரக்கூடிய ஏப்ரல், மே மாதங்களுக்கான மின் விநியோகம், கோடைக் காலத்தில் கூடுதலாக ஏற்படுகிற தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக, டெண்டர் கோரப்பட்டு இறுதி செய்யப்பட்டுள்ளது. 4200 மெகாவாட்டுக்கு மேல் கூடுதலாக கோடைகாலத்தை சமாளிப்பதற்கு மின் விநியோகம் தேவைப்பட்டிருக்கிறது. இதற்காக டெண்டர் கோரப்பட்டு இறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த பாதிப்பும் இருக்காது
இந்தக் கோடை காலத்தைப் பொறுத்தவரை மின் விநியோகத்தில் எந்தவிதமான பாதிப்புகளும் இருக்காது. தேவையான அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் இதுதொடர்பாக தெடர்ந்து ஆய்வு செய்து, முன்னேற்பாடுகளை மேற்கொள்ள அறிவுறுத்தியிருக்கிறார், அதன்படி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன" எனத் தெரிவித்தார்.

சோலார் பிளாண்ட்
மேலும், புதிதாக சூரிய மின் சக்தி பிளாண்ட் ஏதாவது அமைப்படுமா என்ற கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் செந்தில்பாலாஜி, "ஏற்கெனவே 6 ஆயிரம் மெகாவாட் அளவில் சோலார் உற்பத்தி பூங்கா அமைப்பதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதற்கான டெண்டர் இப்போதுதான் கோரப் போகிறோம். டெண்டர் முடிந்தபிறகு, முதல்வர் மூலம் அடிக்கல் நாட்டும் பணிகள் தொடங்கும்" எனத் தெரிவித்தார்.

மின் இணைப்பு + ஆதார்
மேலும், "மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியில் எந்த தொய்வும் இல்லை. எந்தச் சிக்கலும் இல்லை. ஏறத்தாழ 99.7 சதவீதம் பேர் இணைத்துவிட்டனர். இன்னும் 0.3 சதவீதம் பேர் மட்டுமே ஆதார் எண்ணுடன் மின் இணைப்பு எண்ணை இணைக்காமல் இருக்கின்றர். அந்தப் பணிகளும் இன்னும் இரண்டொரு நாட்களில் முடியும்" எனத் தெரிவித்தார்.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications