ஒரு கண்ணில் வெண்ணெய்.. ஒரு கண்ணில்.. பழனி முருகன் மாநாட்டால் கூட்டணியில் சிக்கல்? திருச்சி சிவா பளீர்
கோவை: தமிழகத்திற்கு நியாயமாக தர வேண்டியதை கூட ஒன்றிய அரசு தர மறுக்கிறார்கள் எனவும், ஒன்றிய அரசு ஒரு கண்ணுக்கு வெண்ணையும், இன்னொரு பெண்ணுக்கு சுண்ணாம்பும் காட்டக் கூடாது எனவும், பழனி முருகன் மாநாடு தொடர்பாக கூட்டணியில் பிரச்சினை இல்லை என மாநிலங்களவை திமுக உறுப்பினர் திருச்சி சிவா கூறியுள்ளார்.
கோவை விமான நிலையத்தில் திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்," திருச்சியில் NIT கல்லூரி கல்லூரி வளாகத்தில் மாணவி பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டுள்ளார்.

உலகில் எந்த மூலையிலும் இது போன்ற பாதகம் ஏற்பட்டாலும் அது கண்டிக்கத்தக்கது. மத்திய, மாநில அரசுகள் இந்த பிரச்சனைக்கு தீர்வு காணும். கல்லூரி விடுதியில் நடைபெற்ற பாலியல் அத்துமீறல் தொடர்பாக தமிழிக அரசு உரிய நடவடிக்கை எடுக்கும்.
தமிழகத்திற்கு நியாயமாக தர வேண்டியதை கூட ஒன்றிய அரசு தர மறுக்கிறார்கள். இதுகுறித்து தமிழக முதல்வர் முக ஸ்டாலின், ஒன்றிய பாஜக அரசுக்கு கடிதம் எழுதினார். எங்களைப் போன்ற எம்பிகளும், தனிப்பட்ட முறையில் ஒன்றிய அமைச்சர்களை நேரில் சந்தித்து தமிழகத்திற்கு தேவையானவற்றை செய்ய வேண்டுமென கோரிக்கை வைக்கிறோம். ஆனால் ஒன்றிய அரசு ஒரு கண்ணுக்கு வெண்ணையும், இன்னொரு பெண்ணுக்கு சுண்ணாம்பையும் காட்டக் கூடாது. தமிழகம் சிறப்பாக செயல்படக் கூடிய மாநிலம். பல துறைகளில் முன்னிலையில் இருக்கிறோம்.
வட மாநிலங்களுடன் ஒப்பிடும் பொழுது பல வகைகளில் தமிழகம் முன்னிலையில் இருக்கிறோம். தமிழகத்தை மாற்று கட்சி ஆளும் மாநிலம் என்ற மன நிலையுடன் ஒன்றிய அரசு பார்க்கிறது. இது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது. கொல்கத்தா மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் ஒன்றிய அரசு அக்கறை கட்டுவதில் தவறில்லை. ஆனால் மணிப்பூரில் நடைபெற்ற வன்முறை சம்பவங்கள், பாலியல் சம்பவங்கள் குறித்து பாஜக கவலைப்படவில்லை. உள்துறை அமைச்சர் இது குறித்து ஒரு அறிக்கை கூட சமர்ப்பிக்கவில்லை. நாட்டு மக்கள் இந்த ஒன்றிய அரசின் செயல்பாடுகளை பார்த்து எடை போட வேண்டும்.
பழனி முருகன் மாநாடு தொடர்பாக திமுக கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு கருத்துக்களை தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகி வருகிறது. தமிழகம் மட்டுமல்ல களத்தில் இருக்கும் ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும் ஒரு கருத்து, கொள்கை இருக்கும். அரசாங்கத்தை நடத்துபவர்களுக்கு சில கடமைகள் இருக்கும். அந்த வகையில் தான் பழனி முருகன் மாநாட்டை பார்க்க வேண்டும். இந்த பிரச்சனையை பெரிதுபடுத்தக் கூடாது.
தமிழகத்தில் சினிமாவில் இருந்து நிறைய பேர் அரசியலுக்கு வந்து கொண்டுள்ளனர். ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம். இவர்கள் வரலாம். இவர்கள் வரக் கூடாது என நினைக்கும் உரிமை யாருக்கும் இல்லை. ஜனநாயக நாட்டில் எல்லோருக்கும் கட்சி ஆரம்பிக்கும் உரிமை உண்டு.
தமிழக அரசு தன் கடமையை சரியாக செய்கிறது, பல குறியீடுகளில் முதலிடத்தில் இருக்கிறோம். உயர்கல்வி சேர்க்கையில் இந்தியாவில் சராசரியை விட அதிக அளவில் உயரத்தில் இருக்கிறோம். தமிழ்நாட்டுக்கு ஒன்றிய அரசுடன் பிரச்சினை இல்லை, கடமைகளை செய்ய உரிமைகளை எதிர்பார்க்கிறோம். போராடுகிறோம்..
ஒன்றிய அரசு நியாயமாக நடந்து கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கிறோம்" என்றார்.












Click it and Unblock the Notifications