காலையில் குடிக்கிறவர்களை குடிகாரர்கள் என சொல்லாதீங்க! பொறுத்துக்கொள்ள முடியாது.. அமைச்சர் முத்துசாமி
கோவை: 90 எம்.எல் விவகாரத்தை பொருத்தவரை காலையில் குடிக்க வேண்டும் என்று எங்களிடம் சொல்கிறார்கள். காலையில் குடிப்பவர்களை பற்றி குடிகாரன் என்று சொன்னால் அதை என்னால் பொறுத்துக் கொள்ள முடியாது என கோவையில் அமைச்சர் முத்துசாமி பேசினார்.
கோவையில் அமைச்சர் முத்துசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- மது பாட்டில்களை சாலையில் போட்டுவிட்டு செல்கிறார்கள். வண்டிகள் பஞ்சர் ஆகிறது. இதையெல்லாம் கவனிக்க வேண்டிய பொறுப்பு எங்களுக்கு இருக்கிறதா? இல்லையா? இதற்கு மாற்றுவழி என்ன என்று யோசித்தால் பக்கத்து மாநிலங்களில் என்ன செய்கிறார்கள் என்று பார்த்தோம். அங்கே டெட்ரா பேக் என்ற குடுவையை பயன்படுத்துகிறார்கள்.

அதற்காக டெட்ரா பேக் உடனடியாக எடுத்துக் கொண்டு வந்து விடுகிறோம் என்று நாங்கள் சொல்லவில்லை. டெட்ரா பேக் இருக்கிறது.. வந்தால் மாற்றம் ஏற்படுமா? என்பதை ஆய்வு செய்கிறோம் என்று சொல்லிவிட்டு சொன்னேன். இது சரிபட்டு வராது.. என்று அன்பாக சொல்லலாமே.. ஏன் அந்த திட்டு திட்டுறீங்க.. நான் அப்படி அறிவிக்கவே இல்லை. இதெல்லாம் ஒரு ஆலோசனைதான். பேசுவதை முழுமையாக போடுங்கள்.
டெட்ரா பேக்கை பொருத்தவரை நாங்கள் இன்னும் ஆய்வில் தான் வைத்திருக்கிறோம். இன்னும் கொண்டு வரவில்லை. அனைத்து துறைகளிடமும் பேசிய பிறகுதான் இந்த திட்டம் கொண்டு வருவதற்கான வாய்ப்பு இருக்கும். மாறுபட்ட கருத்து வந்தால் சரியிருக்காது என்ற முடிவு வந்தால் மாற்று ஏற்பாடைத்தான் செய்வோம். 90 எம்.எல் விவகாரத்தில் கடுமையாக பேசுறாங்க..
நாங்கள் அதை கொண்டு வந்துவிட்டோமா.. எங்களுக்கு கிடைத்த செய்தியை சொன்னால் தப்பா நினைக்கிறாங்க.. இவைகள் எல்லாம் ஆய்வில் தான் இருக்கிறது. தொழிலாளர்கள் பிரச்சினைக்கு மட்டும் தான் முற்றுப்புள்ளி வைக்க ஏற்பாடு செய்து இருக்கிறோம். அதற்கு ஒரு முடிவை கொண்டு வந்து இருக்கிறோம். மற்றவை அனைத்தும் ஆய்வில்தான் இருக்கிறது. அதுவந்தாலும் வரலாம்.. வராமலும் போகலாம்.
90 எம்.எல் விவகாரத்தை பொருத்தவரை காலையில் குடிக்க வேண்டும் என்று எங்களிடம் சொல்கிறார்கள். காலையில் குடிப்பவர்களை பற்றி குடிகாரன் என்று சொன்னால் அதை என்னால் பொறுத்துக் கொள்ள முடியாது. மாலையில் அது வேற விஷயம்.. காலையில் கடுமையான வேலைக்கு போகிறவர்கள் தடுக்க முடியாமல் அதை அருந்துகிறார்கள். இதனை புரிஞ்சிக்கனுமா வேணாமா? மாற்று வழி என்ன என்று கண்டுபிடிக்க வேண்டும். இவ்வாறு அமைச்சர் முத்துசாமி பேசினார்.
-
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்கள் தனியார்மயமாகிறது? விஜய்யின் மாஸ்டர்பிளான்! கோட்டையில் பரபரப்பு! -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
கையை மீறி போகும் டாஸ்மாக் விவகாரம்.. நேரடியாக இறங்கிய விஜய்.. ஒரே நேரத்தில் 2 பிரச்சனைகளுக்குத் தீர்வு! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்!












Click it and Unblock the Notifications