தமிழகமே திரும்பிப் பார்க்கப் போகுது.. சூடுபிடிக்கும் தேர்தல் களம் - துரை வைகோ முக்கிய அறிவிப்பு
கோவை: திருச்சியில் தமிழகமே திரும்பிப் பார்க்கக் கூடிய மாநாட்டை செப்டம்பர் 15ஆம் தேதி நடத்த உள்ளோம். தேர்தல் வரக்கூடிய காலம் என்பதால் எங்களுடைய கட்டமைப்பை வலுப்படுத்தவுள்ளோம் என்று மதிமுக துணை பொதுச் செயலாளர் துரை வைகோ தெரிவித்துள்ளார்.
திருப்பூரில் நடைபெறும் செயல்வீரர் கூட்டத்தில் பங்கேற்பதற்காக மதிமுக துணை பொதுச் செயலாளர் துரை வைகோ விமானம் மூலம் கோவை வந்தடைந்தார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது: காவல் நிலையத்தில் அஜித்குமார் இறந்த சம்பவத்தில் காவல் துறை அதிகாரிகள் கைது செய்யப்பட்டு, தமிழக அரசின் நடவடிக்கை எடுத்துள்ளது. வரக்கூடிய காலங்களில் இது போன்ற நிகழ்வுகள் நடக்காத வண்ணம் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுதான் எங்களுடைய நிலைப்பாடு.

எங்களைப் பொறுத்தவரை எங்களுடைய இயக்கம் குறைந்தபட்ச அங்கீகாரம் பெற வேண்டும். அந்த அங்கீகாரத்தைப் பெறுவதற்கு குறிப்பிட்ட சீட்டை பெற வேண்டும் என்பது எங்களுடைய ஆசை. ஆனால் இறுதி முடிவு எடுப்பது இயக்கத்தின் தலைமை. அதேசமயம் நாங்கள் இத்தனை சீட்டை எதிர்பார்க்கிறோம் டிமாண்ட் ஆக வைக்கிறோம் என்ற தவறான சித்தரிப்பு இருந்தது. ஆனால் இறுதி முடிவு கூட்டணியுடன் பேசி தலைமை தான் முடிவு எடுக்கும்.
அனைத்து ஜனநாயக இயக்கங்களுக்கும் மாறுபட்ட கருத்துக்கள் இருக்கும். பாமக கட்சிக்குள் இருப்பதை நிர்வாகிகளும், தொண்டர்களும் பேச வேண்டும் நாம் அதைப் பற்றி பேசக்கூடாது. அது நன்றாக இருக்காது. இயக்கத்தில் இருக்கக்கூடிய பிரச்சனைகளை அந்த இயக்கத்தின் தோழர்கள் தான் தீர்த்து வைக்க வேண்டுமே தவிர வெளிநபர்கள் எதையும் சொல்ல முடியாது.
ரயில்வே கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும். சீனியர் சிட்டிசன்களுக்கு வழங்கப்பட்ட சலுகைகளை மீண்டும் வழங்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் வலியுறுத்தியுள்ளோம். ஒன்றிய அமைச்சரை தனிப்பட்ட முறையில் சந்தித்தபோதும் அதைப்பற்றி கூறியுள்ளோம். பாஜக ஆளுகின்ற மாநிலங்கள் இல்லாமல் இதர மாநிலங்களுக்கு உரிய நிதியை வழங்குவதில்லை என்று ஒரு குற்றச்சாட்டு இருக்கிறது. அது ஓரளவு உண்மைதான்.
பள்ளிக் கல்வித் துறையில் மும்மொழி கொள்கைக்கு உடன்படாததால் அவர்கள் நிதியை அளிக்கவில்லை. இதனால் பல்வேறு அடிப்படை பாதிப்புகளை சந்தித்து வருகிறோம். இது சம்பந்தமாக துறை சார்ந்த அமைச்சர்களிடமும் எங்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. மாணவர்களிடம் அரசியல் செய்யக் கூடாது என்பது தான் எங்களுடைய நிலைப்பாடு.
ஒவ்வொரு கட்சியும் கூட்டணி கட்சிகளும் நாங்கள் ஜெயிப்போம் என்று கூறுவது வழக்கமான ஒன்றுதான். வாக்காளர்கள் தான் தேர்தல் முடிவுகளை தீர்மானிக்கிறார்கள். தமிழக அரசின் பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் அவர்களால் முடிந்ததை செய்து இருக்கிறார்கள். ஓரிரு குறைகள் உள்ளது இருப்பினும் அவர்களது தேர்தல் வாக்குறுதிகளை ஓரளவிற்கு நிவர்த்தி செய்துள்ளார்கள். வரக்கூடிய தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது.
செப்டம்பர் 15ஆம் தேதி திருச்சியில் தமிழகமே திரும்பிப் பார்க்கக் கூடிய மாநாட்டை நடத்த உள்ளோம். தேர்தல் வரக்கூடிய காலம் என்பதால் எங்களுடைய கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும். பூத் கமிட்டிகள் அமைப்பது உட்பட ஏழு மண்டலங்களில் செயல்வீரர் கூட்டம் வைக்கப்பட்டுள்ளது. மூன்றாவது மொழியை கற்றுக் கொள்வதை ஏன் எதிர்க்கிறீர்கள் என்று தமிழக பாஜக தலைமை கேட்கிறது. அவர்களிடம் இரண்டு வருடத்திற்கு முன்பே மூன்றாவது மொழி எந்த மொழியாக வேண்டுமானாலும் இருந்து கொள்ளட்டும் என்று கூறினோம்.
மூன்றாவது மொழியாக மாணவர்கள் எந்த மொழியை வேண்டுமானாலும் தேர்ந்தெடுத்து படிக்கலாம். மூன்றாவது மொழி இந்திய மொழியாகத்தான் இருக்க வேண்டும் என்று கூறுவது தவறு. 2009 இல் இலங்கை போர் முடிந்ததை தொடர்ந்து தமிழக மீனவர்களை இலங்கை அரசு கைது செய்வது என்பது தொடர்ந்து வருகிறது. பலரும் இறந்துள்ளனர். இதனால், மீனவர்கள் குழந்தைகளை மீனவத் தொழிலுக்கு அனுப்ப வேண்டாம் என்று நினைக்கிறார்கள்.
அடுத்த தலைமுறை இந்த மீனவத் தொழிலே செய்ய முடியாது என்கின்ற நிலைமை தற்பொழுது ஏற்பட்டுள்ளது. இதற்கான நிரந்தர தீர்வை ஒன்றிய அரசுதான் கொண்டுவர முடியும். மீனவர்களுக்கு தற்போது வரை நிரந்தர தீர்வு என்பது கிடைக்கவில்லை. இதற்குரிய நிரந்தர தீர்வை ஒன்றிய அரசு கொண்டு வர வேண்டும். அது எந்த அரசாக இருந்தாலும் சரி. கடந்த காலங்களில் நடந்த தவறு என குறிப்பிடுவதை விட்டுவிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
-
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே!












Click it and Unblock the Notifications