வால்பாறை சுற்றுலாப் பயணிகளுக்கு இபாஸ் கட்டாயம்.. நவம்பர் 1 முதல் அமலுக்கு வரும் புதிய விதிமுறை
கோவை: உயர் நீதிமன்ற உத்தரவின்படி ஊட்டி, கொடைக்கானல் போல வால்பாறை மலைப்பகுதிக்கும் இ பாஸ் முறை அமல்படுத்தப்படவுள்ளது. வருகிற நவம்பர் 1 ஆம் தேதி முதல் வால்பாறை வரும் சுற்றுலா பயணிகள் தங்களின் வாகனங்களுக்கு இ பாஸ் பெற வேண்டும் என்று கோவை மாவடிட ஆட்சியர் அறிவித்துள்ளார். அவரின் அறிவிப்பில் இதுகுறித்து மேலும் சில முக்கிய தகவல்களை கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் நீலகிரி மாவட்டம் ஊட்டி, திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக கோவை மாவட்டம் வால்பாறை மலைப் பகுதிக்கு அதிகளவு சுற்றுலா பயணிகள் வருகை தருகிறார்கள். ஏற்கனவே ஊட்டி, கொடைக்கானல் பகுதிகளுக்கு செல்ல தமிழ்நாடு அரசிடம் இ பாஸ் பெறுவது கட்டாயம் என்ற நடைமுறை அமலில் உள்ளது.

வால்பாறைக்கு இ பாஸ்
இதேபோல வால்பாறைக்கும் இ பாஸ் முறையை அமல்படுத்த வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் கடந்த மாதம் உத்தரவிட்டிருந்தது. இதுகுறித்து கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி கோவை மாவட்டம், வால்பாறைக்கு வருகிற சுற்றுலா பயணிகளுக்கு வருகிற நவம்பர் 1 ஆம் தேதி முதல் (1.11.2025) இபாஸ் நடைமுறை அமல்படுத்தப்படுகிறது.
அதன்படி நவம்பர் 1 ஆம் தேதி முதல் வால்பாறைக்கு வரும் அனைத்து சுற்றுலாப் பயணிகளும், தங்களின் வாகனங்களுக்கு இ பாஸ் பெற வேண்டும். வால்பாறைக்கு செல்ல இ பாஸ் பெற https;//www.tnepass.tn.gov.in/home என்கிற இணையதளத்தின் வாயிலாக மக்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் சுற்றுலா பயணிகள் எளிதில் இ பாஸ் பெறுவதற்கும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
பிளாஸ்டிக்கு தடை
மக்கள் சிரமம் இல்லாமல் இ பாஸ் பெறுவதற்காக, கோவை மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆழியார் சோதனை சாவடியிலும், கேரளாவில் இருந்து கோவை வரும்போது, சோலையார் இணை இடதுகரை (மழுக்குப்பாறை வழி) சோதனை சாவடியிலும் நேரடியாக பதிவு செய்து இ பாஸ் பெற்றுக் கொள்ளலாம். அதேநேரத்தில் சுற்றுலா பயணிகள் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை எடுத்து செல்ல அனுமதி இல்லை.
வால்பாறை வரும் சுற்றுலா பயணிகள், இ பாஸ் பெற்று வருவதை கண்காணிப்பதற்காக வருவாய்த்துறை, உள்ளாட்சித்துறை, காவல்துறை, வனத்துறை ஆகிய துறைகளைச் சேர்ந்த அலுவலர்கள் இணைந்த குழுவினர் மேற்சொன்ன ஆழியார் மற்றும் சோலையார் ஆகிய இரண்டு சோதனைச் சாவடிகளிலும் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
உள்ளூர் மக்களுக்கு
வால்பாறை தாலுகாவில் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பதிவு முகவரி கொண்ட சொந்த பயன்பாட்டு வாகனங்களான இரு சக்கரம், நான்கு சக்கரம், சுற்றுலா வாகனம் உள்ளிட்ட அனைத்து வாகனங்கள் https;//www.tnepass.tn.gov.in/home என்கிற இணையதளம் சென்று உள்ளுர் இ பாஸ் (Localite Pass) என்ற இணைப்பில் ஒருமுறை மட்டும் பதிவு செய்தால் போதுமானது.
எனவே கோவை மாவட்டம், வால்பாறைக்கு வரும் சுற்றுலா பயணிகள் தங்கள் வாகனங்களுக்கு நவம்பர் 1 ஆம் தேதி முதல் இ பாஸ் பெற்று பயணிக்க வேண்டும்." என்று கூறியுள்ளார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications