அவதூறு வழக்கில் எடப்பாடி பழனிச்சாமிக்கு உரிய தண்டனை கிடைக்கும் - கே.சி.பழனிசாமி உறுதி
கோவை: ஜெயலலிதா கே.சி.பழனிசாமியை கட்சியில் இருந்து நீக்கியதாகவும், தெருவில் செல்பவர் என்றும் கூறியதாகவும் எடப்பாடி பழனிசாமி பேசிய நிலையில், இதுதொடர்பாக எடப்பாடி மீது கேசி பழனிசாமி தாக்கல் செய்த அவதூறு வழக்கில் அவருக்கு உரிய தண்டனை வழங்கப்படும் என்று நம்புவதாக கே.சி.பழனிசாமி தெரிவித்துள்ளார்.
கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் முன்னாள் அதிமுக நிர்வாகி கே.சி.பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீதான அவதூறு வழக்கு குறித்து கருத்து தெரிவித்தார். அப்போது அவர் பேசுகையில், கடந்த ஜூலை மாதம் விமான நிலையத்தில் எடப்பாடி பழனிச்சாமி அளித்த பேட்டியில், ஜெயலலிதா தன்னை கட்சியில் இருந்து நீக்கியதாகவும், தெருவில் செல்பவர் என்றும் கூறினார்.

இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அவதூறு வழக்கில், கீழமை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. 3 வாய்ப்புகள் அளிக்கப்பட்டும் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் ஆதாரம் தாக்கல் செய்யப்படாததால், உயர் நீதிமன்றம் குற்ற வழக்கு தாக்கல் செய்ய உத்தரவிட்டது.
தற்போது உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், எடப்பாடி பழனிச்சாமி தன்னை வேண்டுமென்றே அவதூறு செய்யும் வகையில் மீண்டும் பேசியதாக கே.சி.பழனிசாமி குற்றம்சாட்டினார். இதுதொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மற்றொரு அவதூறு வழக்கில், எடப்பாடி பழனிச்சாமிக்கு சம்மன் அனுப்பப்பட்டது.
ஆனால், சட்டமன்ற கூட்டத்தொடர் காரணமாக அவர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. அவரது வழக்கறிஞர் ஆஜராகி வாதாடினார். இந்த வழக்கில் உரிய தண்டனை வழங்கப்படும் என நம்புகிறேன் என்று கே.சி.பழனிசாமி தெரிவித்தார்.
-
எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்காதது ஏன் தெரியுமா? இதென்ன ட்விஸ்ட் ? மொத்த அதிமுகவை அள்ளுதே தவெக -
SP Velumani: எல்லாத்துக்கும் ஒரு லிமிட் இருக்கு..சீண்டிய எடப்பாடி சீறிய வேலுமணி..வழியனுப்பகூட வரலையே -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications