புதருக்குள் ஓடி ஒளிந்த புவனேஸ்வரி.. தூக்கி வீசி குத்தி கொன்ற யானை.. அதிர வைக்கும் டிரெக்கிங் மரணம்!
டிரக்கிங் சென்ற பெண்ணை மிதித்தே கொன்றுள்ளது காட்டு யானை
Recommended Video
கோவை: உயிரை கையில் பிடித்துக் கொண்டு.. புதருக்குள் ஓடி ஒளிந்துள்ளார் புவனேஸ்வரி.. ஆனால் அப்போதும் பின்னாடியே விரட்டி சென்ற காட்டு யானை, துதிக்கையாலேயே புவனேஸ்வரியை துதிக்கையிலேயே தூக்கி வீசி குத்தி கொன்றுள்ளது!
கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ளது பாலமலை வனப்பகுதி.. பரந்து பிரிந்து காணப்படும் இந்த காட்டு பகுதிக்கு அடிவாரத்தில் குஞ்சூர்பதி என்ற கிராமம் உள்ளது.
இந்த கிராமத்தில் இருந்து மாங்குழி வழியாக ஒரு சிலர் பாலமலைக்கு அடிக்கடி டிரக்கிங் எனப்படும் மலையேற்றத்தில் ஈடுபடுவார்கள்.. இதற்கு வனத்துறை சார்பில் எந்த அனுமதியும் தரப்படவில்லை.. எனினும் வார விடுமுறை நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காட்டுப்பகுதியில் டிரக்கிங்கில் ஈடுபட்டு வருகிறார்கள்.

புவனேஸ்வரி
அதன்படி புவனேஸ்வரி என்பவரும் இந்த டிரக்கிங் செய்வதில் ஆர்வம் மிக்கவராம்.. கேரளாவை சேர்ந்தவர் இவர்.. கோவையில் இப்போது வசித்து வருகிறார்.. 40 வயதாகிறது.. சங்கரா கண் ஆஸ்பத்திரியில் நிர்வாக பிரிவு அதிகாரி... இவரது கணவர் பிரசாந்த் ஒரு பிசனஸ் மேன்.. இரும்பு கடை வைத்து நடத்துகிறார்.

பாலமலை
நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை என்பதால், கணவர், நண்பர்கள் என 8 பேரை அழைத்துகொண்டு பாலமலைக்கு காரில் வந்து இறங்கினார் புவனேஸ்வரி. எல்லோரும் சேர்ந்து நடந்து சென்று கொண்டிருந்தபோதுதான், திடீரென ஒரு காட்டு யானை அவர்களை வழிமறித்துள்ளது. ஆளுக்கு ஒரு பக்கம் பயந்து தலை தெறித்து சிதறி ஓடினர்.

கூச்சலிட்டனர்
அப்போது புவனேஸ்வரியால் ஒரு அளவுக்கு மேல் ஓடமுடியவில்லை என்பதால், பக்கத்தில் இருந்த ஒரு புதரில் ஓடி ஒளிந்துள்ளார். அங்கும் துரத்தி சென்ற யானை, துதிக்கையிலேயே புவனேஸ்வரியை தூக்கி வீசி குத்தி கொன்றுள்ளது. இது கணவர், நண்பர்கள் கண்முன்னாடியே நடந்துள்ளது.. அவர்கள் அனைவரும் பதறி போய் கத்தி கூச்சலிட்டனர்.. அந்த சத்தத்தை கேட்டதும்தான் யானை அங்கிருந்து நகர்ந்துள்ளது.

விசாரணை
உருக்குலைந்து இறந்து கிடந்த மனைவியை கண்டு அலறி அழுதார் பிரசாந்த்.. இவர்தான வனத்துறை, போலீசுக்கும் தகவல் தந்துள்ளார்.. இதையடுத்து விரைந்து வந்த போலீசார் புவனேஸ்வரியின் சடலத்தை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்துள்ளனர். புவனேஸ்வரிக்கு எப்போதும் இப்படி டிரக்கிங் செல்வது பிடிக்குமாம்.. வாரத்துக்கு ஒரு வனப்பகுதியைத் தேர்ந்தெடுத்து அங்கு டிரக்கிங் சென்று வருவாராம்.. அப்போதும் கணவர், நண்பர்களை அழைத்து கொண்டுதான் செல்வாராம்.. அந்த பகுதிகளில் வாக்கிங்கும் செல்வார் என்கிறார்கள்.

நடவடிக்கை
இப்படித்தான் குரங்கணியில் அனுமதி பெறாமல் டிரக்கிங் செய்ய போய்.. 23 பேர் உயிரிழந்தனர்.. மீண்டும் அப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வனத்துறையினர் அனுமதியின்றி இப்படி மலையேறுவதும், வாக்கிங் போவதும் தவறு என்று தெரிந்தும் ஒருசிலர் தொடர்ச்சியான தவறுகளை செய்வது வருந்தத்தக்கது என்றும், ரோந்து பணி சென்று இப்படி மலையேற்றம் செய்பவர்களை தடுத்து நிறுத்த வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications