மதுக்கரை அருகே தண்டவாளத்தை கடந்த மக்னா யானை.. சட்டென வந்த ரயில்.. அடுத்த நொடி பதைபதைப்பு சம்பவம்
கோவையில் ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற மக்னா யானை நூலிழையில் உயிர் தப்பியது.
கோவை: கோவையில் ரயில் வரும் நேரத்தில் தண்டவாளத்தை கடக்க முயன்ற மக்னா யானை நூலிழையில் தப்பிய காட்சிகள் வெளியாகி பதைபதைக்க வைக்கிறது.
தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட எல்லையான ஒகேனக்கல், தேன்கனிக்கோட்டை, மாரண்டஹள்ளி, பென்னாகரம் வனப்பகுதியில் இருந்து மக்னா எனும் ஒற்றை காட்டு யானை வனப்பகுதிக்கு செல்லாமல் அட்டகாசம் செய்து வருகிறது.
விவசாயப் பயிர்களை சேதப்படுத்தி வந்தது. தொடர்ந்து யானையை வனத்துறையினர் கண்காணித்து வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர். ஆனாலும் மீண்டும் மீண்டும் ஊருக்குள் புகுந்து விவசாய பயிர்களை சேதப்படுத்தி கொண்டிருந்தது.

மக்னா யானை
இதைத் தொடர்ந்து கடந்த மாதம் 5ஆம் தேதி அந்த மக்னா யானையை கும்கி யானையின் உதவியுடன் மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது. இதையடுத்து 6ஆம்தேதி கோவை- பொள்ளாச்சி அருகே டாப்சிலிப் வனச்சரகத்துக்குள்பட்ட வரகழியாறு வனப்பகுதியில் விடுவிக்கப்பட்டது. அந்த யானையை வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.

10 நாட்கள்
கடந்த 10 நாட்களாக வனப்பகுதிக்குள் சுற்றி வந்த மக்னா சேத்துமடை பகுதிக்கு சென்றது. அங்குள்ள கிராம பகுதிக்குள் நுழைந்தது. மக்னா தொடர்ந்து ஒரு இடத்தில் இல்லாமல் பாதையை மாற்றிக் கொண்டே இருந்தது. இந்த நிலையில் பொள்ளாட்சியில் இருந்து பாலக்காடு சாலையை கடந்த யானை கடந்த 25 ஆம் தேதி காலை மதுக்கரை வனப்பகுதிக்கு வந்தது. தென்னை தோப்பு, ஓடை மற்றும் விவசாய பயிர்கள் வழியாக சென்ற மக்னா யானையை பத்திரமாக பிடிக்க தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.

மதுக்கரை
இந்த நிலையில்தான் அந்த மக்னா யானை மதுக்கரை அருகே உள்ள ரயில் தண்டவாளத்தில் ஏறி கடக்க முயன்றது. அப்போது கேரளா செல்லக் கூடிய எக்ஸ்பிரஸ் ரயில் அதிவேகமாக வந்து கொண்டிருந்தது. இதை கண்ட வனத்துறையினர் யானை மீது ரயில் மோதாமல் இருக்க சப்தம் எழுப்பியும் பட்டாசுகளை வெடித்தும் விரட்டுவதற்கு முயற்சித்தனர்.

அதிர்ஷ்டவசம்
அப்படியும் நகராமல் அது பாட்டுக்கு டிராக்கில் சென்று கொண்டிருந்தது. யானைக்கு எதுவும் நிகழக் கூடாதே என வனத்துறையினர் பதற்றத்தில் இருந்தனர். ஆனால் ரயில் யானை அருகே வருவதற்கு நொடி பொழுதின் போது டிராக்கைவிட்டு கடந்து சென்றது. இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. மேலும் யானை ரயிலில் மோதி அடிப்படாமல் இருக்க போராடிய வனத்துறையினருக்கு பாராட்டுகள் குவிகின்றன.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications