கோவையில் 43 ஆண்டுகளுக்கு பிறகு மீட்கப்பட்ட ரூ.10 கோடி ஆக்கிரமிப்பு நிலம்.. உணர்த்தும் பெரிய பாடம்
கோவை: கோவையில் கடந்த சில நாட்களாக ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்பதில் அதிகாரிகள் அதிரடி காட்டி வருகிறார்கள். அண்மையில் சிங்காநல்லூரில் திருச்சி சாலை உள்ளிட்ட பகுதிகளில் சாலை ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்டன. தற்போது அடுத்ததாக சரவணம்பட்டி ராமகிருஷ்ணாபுரம், வடவள்ளி வி.என்.ஆர். நகர் ஆகிய பகுதிகளில் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தை கட்டிடங்கள் கட்டி ஆக்கிரமிக்கப்பட்டிருந்தன. அந்த இடத்தை அதிகாரிகள் மீட்டனர். அதன்மதிப்பு ரூ.11 கோடி என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழ்நாட்டில் சென்னைக்கு அடுத்தபடியாக பெருநகரான கோவையில் தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள், ஐடி நிறுவனங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 15 ஆண்டுகளில் கோவை மாநகரத்தில் ஐடிதொழிலும், தொழிற்சாலைகளும், உள்கட்டமைப்பும் மிகப்பெரிய அளவில் வளர்ந்துள்ளது. குறிப்பாக ஐடி துறையில் ஏற்பட்ட அசுர வளர்ச்சி அந்த நகரத்தில் பல ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கொடுத்துள்ளது. இதன் காரணமாக பலரும் கோவையில் இடம் வாங்குவதிலும், வீடு கட்டுவதிலும் ஆர்வம் காட்டுகிறார்கள். இதனால் கோவை மாநகரம் மற்றும் கோவையின் புறநகர் பகுதிகளில் நிலத்தின் மதிப்பு பல மடங்கு உயர்ந்துவிட்டது. இதன் காரணமாக பல இடங்களில் அரசு நிலங்கள் ஆக்கிரமிக்கப்படுகின்றன. அப்படி ஆக்கிரமிக்கப்படும் இடங்களை அடையாளம் கண்டு மீட்கும் பணியில் மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டு வருகிறார்கள்.

அந்த வகையில் கோவை மாநகராட்சிக்கு சொந்தமான இடங்களை ஆக்கிரமித்து உள்ளவர்களின் பட்டியலை எடுத்து நகரமைப்பு திட்ட அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கி அடுத்தடுத்து மீட்டு வருகிறார்கள். சரவணம்பட்டி ராமகிருஷ்ணாபுரம், வடவள்ளி வி.என்.ஆர். நகர் ஆகிய பகுதிகளில் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தை கட்டிடங்கள் கட்டி ஆக்கிரமித்து இருந்ததாக தகவல்கள் வெளியானது. இது குறித்து மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் உத்தரவின்பேரில் நகரமைப்பு திட்ட அதிகாரி குமார் தலைமையில் உதவி நகரமைப்பு திட்ட அதிகாரி மகேந்திரன் உள்ளிட்ட அதிகாரிகள் அங்கு சென்று ஆய்வு செய்ததுடன், ஆக்கிரமிப்பு கட்டிடங்களை பொக்லைன் எந்திரம் உதவியுடன் இடித்து அகற்றினார்கள்.
இதேபோல் வி.என்.ஆர்.நகரில் கடந்த 1981-ம் ஆண்டு நகர ஊரமைப்பு துறையால் ஒதுக்கப்பட்ட மாநகராட்சிக்கு சொந்தமான ரூ.10 கோடி மதிப்பிலான ஒரு ஏக்கர் 13 சென்ட் இடத்தில் அமைக்கப்பட்டு இருந்த சலூன் கடை, சிறிய கோவில் ஆகியவற்றை அதிகாரிகள் இடித்து அகற்றினர். முன்னதாக
அங்கு இருந்த கோவில் ஒன்றை இடிக்க ஒரு வார காலம் அவகாசம் கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால் அதை அகற்ற வில்லை. இதையடுத்து 43 ஆண்டுகளுக்கு பிறகு அந்த ஆக்கிரமிப்பு இடம் மீட்கப்பட்டுள்ளது.
இதேபோல் சரவணம்பட்டி -சத்தி சாலை விளாங்குறிச்சி ரோட்டில் ரூ.1 கோடி மதிப்பிலான 4 சென்ட் இடத்தில் அமைக்கப்பட்டு இருந்த கடைகள் இடித்து அகற்றப்பட்டு நிலம் மீட்கப்பட்டிருக்கிறது. ஒட்டுமொத்தமாக ரூ.11 கோடி மதிப்பிலான ஒரு ஏக்கர் 17 சென்ட் இடத்தை கோவை மாநகராட்சி அதிகாரிகள் மீட்டனர். அங்கு கோவை மாநகராட்சிக்கு சொந்தமான இடம் என்று அறிவிப்பு பலகை வைத்தார்கள். ஒரு நிலத்தை 43 ஆண்டுகள் கழித்து அதிகாரிகள் மீட்டுள்ளனர். இதன் மூலம் எத்தனை வருடங்கள் ஆக்கிரமிப்பில் இருந்தாலும் நகரங்களில் அரசு நிலத்திற்கு பட்டா வாங்கவே முடியாது என்பது உறுதியாகி உள்ளது. அதேநேரம் அரசு நத்தம் புறம்போக்கு என்று வகைப்படுத்தியுள்ள இடங்களில் மட்டுமே பட்டா வாங்க முடியும் என்பதும் அண்மைக்காலங்களில் அரசின் நடவடிக்கையில் அறிய முடியும்.
-
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
Magaram: சிகரத்தில் ஏறப்போகும் மகர ராசியினர்.. எதிர்பாராத அதிர்ஷ்டம் காத்திருக்கு -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்! -
ஈரானிடம் மண்டியிடும் அமெரிக்கா.. கச்சா எண்ணெய் மீதான தடையை நீக்க முடிவு.. அடிபணிந்த டிரம்ப் -
VCK: 10+1 கேட்டு விசிக விடாபிடி! திருமாவளவன் பிடிவாதத்தின் பின்னணி என்ன? இறங்கி வரும் ஸ்டாலின்?












Click it and Unblock the Notifications