பிஎஃப் பணம்.. கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு 27ம் தேதி குட்நியூஸ்
கோவை: தொழிலாளர் அரசு காப்பீட்டு கழகம் (இ.எஸ்.ஐ.) கோவை துணை மண்டலம் சார்பில் இ.எஸ்.ஐ. திட்டத்தில் உள்ள பயனீட்டாளர்களுக்கு ஏதாவது குறை இருந்தால் அதை நிவர்த்தி செய்யும் வகையில் மாதந்தோறும் குறைதீர்க்கும் முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இ.எஸ்.ஐ., வருங்கால வைப்பு நிதியம் சார்பில் நிதி ஆப்கே நிகட் 2.0 என்ற பெயரில் குறைதீர்ப்பு முகாம் கோவை, நீலகிரி, திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் வருகிற 27-ந் தேதி நடைபெற உள்ளது.
மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் மதுரை தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் அதன் மண்டலத்துக்கு உட்பட்ட மாவட்டங்களில், நிதி உங்கள் அருகில் மற்றும் இ.எஸ்.ஐ.சி. சுவிதா சமகம் இணைந்து நடத்தும் குறைதீர்க்கும் முகாம் ஒவ்வொரு மாதமும் 27-ந் தேதி காலை 9 மணிக்கு நடைபெற உள்ளது.

வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தில் பதிவுபெற்ற தொழில் நிறுவனங்கள், சந்தாதாரர்கள், ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர்கள், வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தில் விலக்கு பெற்ற நிறுவனங்களில் உள்ள பி.எப்.டிரஸ்ட் சந்தாதாரர்களின் வருங்கால வைப்பு நிதி தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் வகையில் முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாம்களில் நிறுவன முதலாளிகள், ஒப்பந்ததாரர்களுக்கான ஆன்லைன் சேவைகள் பற்றிய செயல்முறைகளை அதிகாரிகள் விளக்குவார்கள்..
தொழிலாளர்களுக்கான ஆன்லைன் சேவைகள் பற்றியும் இபிஎப்ஓ அதிகாரிகள் விளக்குவார்கள். மேலும் இபிஎப் விலக்கு அளிக்கப்பட்ட நிறுவனங்களுடனான கலந்துரையாடல் நடைபெறுவதும் வழக்கம். மேலும் வைப்பு நிதி அலுவலகத்தின் புதிய முயற்சிகள், சீர்திருத்தங்கள் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம் ஆகும்.
அதேபோல் பிஎஃப் கணக்கு வைத்துள்ள உறுப்பினர்கள், ஓய்வூதியம் பெறுவோர் மற்றும் நிறுவன முதலாளிகளிடம் இருந்து வரும் குறைகளை நிவர்த்தி செய்யப்படும்.. ஓய்வூதியதாரர்களுக்கு மின்னணு வாழ்க்கைச் சான்றிதழ்களை சமர்ப்பித்தல், இ-நாமினேஷன் தாக்கல் செய்தல் மற்றும் ஒப்பந்ததாரர்களின் விவரங்களை பதிவேற்றம் செய்தல் உள்ளிட்ட சேவைகளும் உடனே மேற்கொள்ளப்படும். ஃபிஎப் பணம் தொடர்பான புகார்கள் குறித்து குறைதீர்க்கும் முகாமில் மனு கொடுத்தால் உடனடியாக நிவர்த்தி செய்யப்படுவதும் வழக்கம் ஆகும்.
இந்நிலையில் கோவை இ.எஸ்.ஐ. துணை மண்டல அலுவலகம் மற்றும் வருங்கால வைப்புநிதி உதவி ஆணையாளர் அங்குஷ்குண்டு வெளியிட்ட அறிவிப்பில் கூறுகையில், "தொழிலாளர் அரசு காப்பீட்டு கழகம் (இ.எஸ்.ஐ.) கோவை துணை மண்டலம் சார்பில் இ.எஸ்.ஐ. திட்டத்தில் உள்ள பயனீட்டாளர்களுக்கு ஏதாவது குறை இருந்தால் அதை நிவர்த்தி செய்யும் வகையில் மாதந்தோறும் குறைதீர்க்கும் முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இ.எஸ்.ஐ., வருங்கால வைப்பு நிதியம் சார்பில் நிதி ஆப்கே நிகட் 2.0 என்ற பெயரில் குறைதீர்ப்பு முகாம் கோவை, நீலகிரி, திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் வருகிற 27-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரை நடக்கிறது.
அதில் கோவை மாவட்டத்தில் மேட்டுப்பாளையம் மெட்ரோ மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடக்கிறது. நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி உட்காக் சாலையில் உள்ள செயின்ட் ஜோசப் கல்வியியல் கல்லூரியில் நடக்கிறது. அதுபோன்று திருப்பூரில் பல்லடம் கரைப்புதூர் கிராமம், பார்க் பள்ளி எதிரே லஷார்க் குளோபல் நிறுவனத்திலும், ஈரோட்டில் திண்டல் மாதிரு நகரில் உள்ள வேளாளர் கல்வியியல் கல்லூரியிலும் நடைபெறுகிறது.
பயனீட்டாளர்கள் குறைகள் ஏதேனும் இருப்பின் முகாமில் கலந்து கொண்டு தெரிவித்து நிவர்த்தி செய்து கொள்ளலாம். மேலும் இ.எஸ்.ஐ. காப்பீட்டாளர்கள் தங்கள் குறைகளை [email protected] என்ற இணையதள முகவரியிலும், வருங்கால வைப்புநிதி பயனாளர்கள் [email protected] என்ற இணையதள முகவரி மூலம் தெரிவிக்கலாம்" இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications