விவசாயிகளுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்.. இப்போ சொன்னா வெளியில் தெரிந்துவிடும் - இபிஎஸ் சூசகம்
கோவை: விவசாயிகள் கேட்காத கோரிக்கைகள் நிறைய எங்களிடம் இருக்கின்றது, அதையும் செய்வோம். இப்பொது சொன்னால் வெளியில் தெரிந்துவிடும் என்று அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் நடத்த கலந்துரையாடல் கூட்டத்தில் தெரிவித்தார்.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் "மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்" என்கிற சுற்றுப் பயணத்தை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்குகிறார். இந்நிகழ்ச்சியை முன்னிட்டு, மேட்டுப்பாளையத்துக்கு எடப்பாடி பழனிசாமி வருகை புரிந்துள்ளார். முன்னதாக, வனபத்திரகாளியம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் தேக்கம்பட்டி பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் விவசாயிகள், நெசவாளர்கள் மற்றும் செங்கல் உற்பத்தியாளர்களுடன் கலந்துரையாடினார்.

அப்போது, விவசாயிகள், நெசவாளர்கள், செங்கல் உற்பத்தியாளர்கள் மத்தியில் எடப்பாடி பழனிச்சாமி பேசியதாவது: மத்திய அரசுக்கு அனுப்பிய அவினாசி அத்திகடவு திட்டம் மத்திய அரசால் திருப்பி அனுப்பப்பட்டது. இதையடுத்து, மாற்று திட்டமாக அவினாசி அத்திகடவு திட்டம் அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்டது.
விவசாயிகள் மனம் குளிரும் அளவிற்கு பாசனம் பெறும் வகையில் அவினாசி அத்திகடவு திட்டம் ஆட்சிக்கு வந்தவுடன் விரிவாக செயல்படுத்தப்படும். ஆயிரம் கோடி மதிப்பீட்டில் திட்டமிடப்பட்ட அந்த திட்டம் இந்த ஆட்சியில் கைவிடப்பட்டது. விவசாயிகளின் ஆதரவுடன் மீண்டும் ஆட்சிக்கு வரும்போது விவசாயிகளின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்.
விவசாயிகளுக்கான ஏரி, குளங்கள் அதிமுக ஆட்சியில் தூர்வாரப்பட்டது. ஒரு சொட்டு நீர் கூட வீணாகமல் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. உள்ளாட்சித் துறை மூலமும் தூர்வாரப்பட்டது. இந்த ஆட்சியில் தூர்வாரும் பணியை கிடப்பில் போட்டுவிட்டனர். அவினாசி அத்திக்கடவு பழைய திட்டத்தில் பவானி அணை நிரம்பிய பின்புதான் தண்ணீர் எடுக்க முடியும். அதை செயல்படுத்த 15 வருடம் ஆகும்.
தொட்டிபாலம், டனல் போன்றவை அமைக்க வேண்டும். வனத்துறை அனுமதி வேண்டும், மத்திய அரசு அனுமதி வேண்டும் என இப்படி பல பிரச்சனைகள் இருந்தன. ஆனால், எப்படியாவது விவசாயிகளுக்குத் தண்ணீர் கொடுக்க வேண்டும் என்பதற்காக அதிமுக ஆட்சியில் சிறப்புக் குழு அமைத்து அவினாசி அத்திக்கடவு திட்டம் மாற்று திட்டமாக செயல்படுத்தபட்டது.
நான் விவசாயி, இன்றைக்கும் விவசாயம் செய்து கொண்டிருக்கின்றேன். அதனாலதான் என்னை யாரும் எதுவும் செய்ய முடியவில்லை. இந்தியாவிலயே சொட்டு நீர் பாசனத்திற்கு அதிக நிதியை அதிமுக ஆட்சியில் பெற்றுக் கொடுத்தோம். கால்நடை துறைக்காக அதிமுக ஆட்சியில் உருவாக்கப்பட்ட ஆராய்ச்சி மையம் பூட்டிக் கிடக்கின்றது. இதுபோன்ற பல திட்டங்கள் முடங்கி இருக்கின்றன.
மும்முனை மின்சாரம் விவசாயிகளுக்கு அதிமுக ஆட்சியில் கொடுக்கப்பட்டது, இப்போது அதற்கும் கட்டுப்பாடு வந்துவிட்டது. வண்டல் மண் எடுப்பதற்கும் இந்த ஆட்சியில் இப்போது விடுவதில்லை. எதிர்காலத்தில் விவசாயிகளின் எதிர்பார்ப்பிற்கு மேல் விவசாயத்துக்கு அனைத்தும் செய்யப்படும். வனத் துறைக்கு அருகில் இருக்கும் பயிர்கள் வன விலங்குளால் பாதிக்கப்படுவதை தடுக்க நடவடிக்கைகள் அதிமுக ஆட்சியில் எடுக்கப்பட்டது.
செங்கல் சூளை தொடர்பான கோரிக்கைகள் அதிமுக ஆட்சி அமைந்தவுடன் கண்டிப்பாக நிறைவேற்றப்படும். அரசியல் பேசக்கூடாது என நினைத்தேன்,
ஆனால் திமுக ஆட்சியில் 4 முறை கட்டண உயர்வால் நெசவாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் கோரிக்கைகள் பரசீலித்து நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
கேரளாவில் இருந்து தண்ணீர் உரிமையை பெறுவது உள்ளிட்டவை குறித்தும் பேசப்படும். சுத்தமான நீர் கிடைக்கப்பெற வேண்டும். நதிகளைப் பாதுகாக்க 11 ஆயிரம் கோடி நிதி கிடைத்துள்ளது. இதற்கு அதிமுக ஆட்சியில் எடுக்கப்பட்ட நடவடிக்கைதான் காரணம். விவசாயிகள் கேட்காத கோரிக்கைகள் எங்களிடம் இருக்கின்றது. அதையும் செய்வோம், இப்பொது சொன்னால் வெளியில் தெரிந்துவிடும் என்றார்.
-
பாம்புக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் என்ன வித்தியாசம்? நாஞ்சில் சம்பத் ஒற்றை கேள்விக்கு அதிமுக நறுக் -
பாஜக உள்ளே புகுந்துருச்சு ப்ரோ.. ஆண்டுக்காண்டு அதிகரிக்கும் சீட் எண்ணிக்கை! 20ஐ 27ஆக்கிய அமித் ஷா! -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி..40 கேட்ட பாஜகவுக்கு 27! ஒரே நாளில் முடிந்த டீலிங்..கெத்து அதிமுக! -
மாப்ள எடப்பாடி தான்.. ஆனா சட்டை அமித் ஷாவோடது! ’ஷா’ அசைவுக்கு ஆடும் பழனிசாமி! போட்டுத் தாக்கிய ஐபி! -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்?












Click it and Unblock the Notifications