கோவை "புரட்சி!" எஸ்கலேட்டர், லிப்ட்! அடையாளம் தெரியாமல் ஹைடெக்காக மாற போகும் உக்கடம் பஸ் நிலையம்
கோவை: கோவை உக்கடம் பஸ் நிலையத்தில் சாலையை கிராஸ் செய்ய லிப்ட், எஸ்கலேட்டர் உள்ளிட்ட வசதிகள் செய்ய ரூ 20 கோடி நிதி கேட்டு கோவை மாநகராட்சி தமிழக அரசிடம் அறிக்கை சமர்ப்பித்துள்ளது.
கோவை உக்கடம் பேருந்து நிலையத்தில் இருந்து பழனி, திண்டுக்கல், பாலக்காடு உள்ளிட்ட ஊர்களுக்கு பல்வேறு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. உக்கடம்- ஆத்துப்பாலம் சாலையில் நிலவும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க மாநில நெடுஞ்சாலைத் துறையின் சார்பில் பிரம்மாண்டமான மேம்பாலம் கட்டப்பட்டது.

கோவையில் மொத்தம் 7 இடங்களில் பஸ்நிலையங்கள் உள்ளன. சத்தி சாலையில் உள்ள ஆம்னி பஸ் ஸ்டாண்ட் புதுப்பிக்கப்பட்டுள்ளது. சிங்காநல்லூர் பஸ் நிலையத்தை புதுப்பிக்க ரூ. 10 கோடி கேட்கப்பட்டுள்ளது.
அது போல் உள்ளூர் திட்ட குழும நிதியில் ரூ 30 கோடியில் புதுப்பிக்க விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யும் பணியும் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் உக்கடம் பஸ் நிலையத்தை புதுப்பிக்கவும் தமிழக அரசு ரூ 20 கோடி ஒதுக்கியுள்ளது.
இதற்காக திட்ட அறிக்கையை கோவை மாநகராட்சி தயாரித்துள்ளது. இது தமிழக அரசிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தற்போது பேருந்து நிலையம் செயல்படும் இடம் மற்றும் செல்வபுரம் புறவழிச்சாலையில் மேம்பாலம் இறங்கும் இடம் அருகே காலியாக இருக்கும் இடம் என இரு இடங்களில் உக்கடம் பேருந்து நிலையம் அமைய போகிறது.
இந்த நிலையில் சாலையை கடக்க மிகவும் சிரமமாக உள்ளது. வயதானவர்கள், உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள், குழந்தைகள் சாலையை கடக்கும் போது தடுமாறுகிறார்கள். இதனால் ஒரு முனையில் இருந்து மற்றொரு முனைக்கு செல்ல சப் வே போல் எஸ்கலேட்டர், லிப்ட் வசதியுடன் கூடிய பாலம் அமைக்கப்படுகிறது.
மெட்ரோ ரயில் நிலையம் அமைக்க ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் மீதமுள்ள இடத்தில் பாலம் கட்டப்படும். மெட்ரோ ரயில் நிறுவனத்திடம் ஆலோசனை செய்து எஸ்கலேட்டர் அமைப்பது உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படும்.
அது போல் பொள்ளாச்சி, பாலக்காடு மார்க்கமாக செல்லும் பேருந்துகள் உக்கடம் பேருந்து நிலையத்தில் இருந்து சுங்கம் புறவழிச்சாலையை கடந்து வெளியே வருகின்றன. அந்த சமயத்தில் செல்வரம் புறவழிச்சாலை, டவுன்ஹால், ஆத்துப்பாலம் பகுதியில் இருந்து மேம்பாலத்தின் கீழ் பகுதி வழியாக வந்து சுங்கம் புறவழிச்சாலை வழியாக செல்லும் வாகனங்களும் மோதிக் கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது.
அதாவது பேருந்து வருவது தெரியாத அளவுக்கு கண்ணை மறைக்கும்படியாக இருப்பதால் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளதால் ரவுண்டானா அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications