வியாபாரியை மிரட்டி லஞ்சம் : பொறிவைத்து பிடித்த லஞ்ச ஒழிப்பு துறையினர்: 2 போலீஸார் கைது
கோவை வியாபாரிடம் பணம் பறித்த 2 பேர் கைதாகி உள்ளனர்
கோவை: வியாபாரியை மிரட்டி பணம் பறித்த 2 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்..!
கோவை மாவட்டம் மணியகாரம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் அய்யப்பன்.. இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் உபயோகப்படுத்தப்பட்ட ஆயிலை வாங்கி, கட்டிட பயன்பாடுகளுக்கு விற்பனை செய்து வருகிறார்.

கோவை மாவட்ட உணவுப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவில் பணியாற்றும் தலைமைக் காவலர் ராஜ்குமார் என்பவர், ஜயப்பனை சில தினங்களுக்கு முன்னர் அணுகி தனக்கு மாதந்தோறும் 1000 ருபாயும், 2000 ருபாயும் லஞ்சமாக தர வேண்டும் என அவரிடம் வலியுறுத்தியுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த அவர், கோவை மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு இது குறித்து தகவல் தெரிவித்தார். மேலும் லஞ்சம் தராவிட்டால் ஆயில் கடத்துவதாக தன் மீது வழக்குப்பதிந்து கைது செய்து விடுவேன் என மிரட்டல் விடுப்பதாகவும் கூறியுள்ளார்.

இதனையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் ரசாயனம் தடவிய 2000 மதிப்புள்ள பணத்தாளை புகார்தாரரான அய்யப்பனிடம் கொடுத்து அனுப்பினர். அவர், அந்த தொகையை வாங்கிக் கொண்டு, கீரணத்தம் பகுதியில் உள்ள உணவுப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு ஸ்டேஷனுக்குச் சென்று, அங்கிருந்த தலைமைக் காவலர் ராஜ்குமாரிடம்,மற்றும் உதவி ஆய்வாளர் இருளப்பனிடம் கொடுத்துள்ளார்.
அவர்கள் அந்த தொகையை வாங்கி வைத்த போது, மறைந்து இருந்து கண்காணித்த கூடுதல் எஸ்.பி. திவ்யா தலைமையிலான லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் ராஜ்குமாரையும், பிடித்து கைது செய்தனர். அவர்களிடம் தொடர் விசாரணை மேற்கொண்ட நிலையில் இருவரும் கோவை லஞ்ச ஒழிப்பு நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டனர். இவர்களை 15 நாள் ரிமாண்ட் செய்து லஞ்ச ஒழிப்பு நீதிமன்ற பொறுப்பு நீதிபதி செல்லதுரை உத்தரவிட்டார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications