பாலியல் வன்கொடுமை.. கொள்ளை.. பக்கா ஸ்கெட்ச் போட்ட கங்காதேவி.. காதலன் சொன்ன வார்த்தையால் விபரீதம்
கோவை: கோவை மாவட்டம் சோமனூரில் முகநூலில் பழகிய காதலனுடன் ஓடுவதற்காக கொள்ளை நாடகம் போட்ட பெண் பியூட்டிஷியன், விஷயம் போலீசாரின் விசாரணையில் அம்பலம் ஆகும் என்று பயந்து தற்கொலை செய்து கொண்டார்
முன்னதாக பார்லருக்கு வந்த 3 பேர் தன் மனைவியை பாலியல் வன்கொடுமை செய்து,கட்டி போட்டு 19 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்றுவிட்டதாக கருமத்தம்பட்டி போலீசில் புகார் பியூட்டிஷியன் கங்காதேவி என்பவரின் கணவன் புகார் கூறினார்.
புகார் குறித்து போலீசார் தீவிரமாக விசாரிக்க தொடங்கியிருந்தனர். நகைகளை கொள்ளையடித்து சென்ற காதலன் தன்னை மாட்டிவிட்டுவிடுவாரோ என்று பயந்து தற்கொலை செய்து கொண்டிருக்கிறார் அந்த பெண்.

சோமனூர் கங்காதேவி
கோவை மாவட்டம் சோமனூரை சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மனைவி கங்காதேவி (வயது 37). பியூட்டி பார்லர் நடத்தி வந்தார். இவர் கடந்த 6ம் தேதி பியூட்டி பார்லருக்கு சென்றவர் இரவு வீடு திரும்பவில்லை. அங்கு சீனிவாசன் சென்று பார்த்தபோது கை, கால்கள் கட்டப்பட்டு மயங்கிய நிலையில் பார்லரில் கிடந்திருக்கிறார்.

கருமத்தம்பட்டி போலீஸ்
அவரை மீட்டு வீட்டிற்கு அழைத்து வந்து விசாரித்தார். அப்போது, பார்லருக்கு வந்த 3 பேர் பாலியல் வன்கொடுமை செய்து,கட்டி போட்டு 19 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்றுவிட்டதாக கூறியிருக்கிறார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த சீனிவாசன், கருமத்தம்பட்டி போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிராக விசாரிக்க தொடங்கினர்.

மதுரை காதலன்
இந்தநிலையில் கங்காதேவி கடந்த புதன்கிழமை திடீரென வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது செல்போனை போலீசார் கைப்பற்றி அதில் இருந்த எண்கள் மூலம் விசாரிக்க தொடங்கினார்கள். அப்போது, மதுரை மாவட்டம் காமராஜர்நகரை சேர்ந்த முத்துபாண்டி (வயது 41) என்பவருடன் கள்ளத் தொடர்பில் இருந்தது தெரியவந்தது.

முகநூலில் காதல்
இதையடுத்து ஊட்டியில் இருந்த முத்துப்பாண்டியை போலீசார் கைது செய்தனர். போலீசார் அவரிடம் நடத்திய விசரணையில் சென்னையில் மனைவியை பிரிந்து வேலை இல்லாமல் இருந்தேன். கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன்பு, எனக்கும், கங்காதேவிக்கும் முகநூலில் பழக்கம் ஏற்பட்டது.

வாக்குமூலம்
கங்காதேவி நண்பர்கள் மூலம் எனக்கு பல்லடத்தில் ஒரு மில்லில் வேலை வாங்கி தந்தார் இதன்பின், அடிக்கடி பியூட்டி பார்லருக்கு சென்று கங்காதேவியை சந்தித்து பேசி வந்தேன். இந்தநிலையில் நானும், கங்காதேவியும் சேர்ந்து வாழ நினைத்தோம். இதற்காக நகை கொள்ளை போனதாக நாடகமாட முடிவு செய்தோம். அதன்படிதான் நான் நாடகமாடி நகையுடன் ஊட்டிக்கு வந்துவிட்டேன். போலீசார் விசாரித்தது பற்றி அவர் என்னிடம் சொன்னார். ''என்னை மாட்டிவிட்டு விடாதே'' என்று நான் கூறினேன். அந்த விரக்தியில் கங்காதேவி தற்கொலை செய்து கொண்டிருக்கிறார் என்று முத்துபாண்டி போலீசிடம் கூறியுள்ளார். அவரிடம் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications