அதிமுகவில் குடும்ப அரசியல்.. எடப்பாடிக்கு மகன், மாப்பிள்ளைதான் எல்லாம்.. குண்டை வீசிய செங்கோட்டையன்
கோவை: திமுகவில் மட்டுமல்ல, அதிமுகவிலும் குடும்ப அரசியல் தான் என்றும், எடப்பாடி பழனிசாமிக்கு மகன், மாப்பிள்ளை தான் எல்லாம் என செங்கோட்டையன் பேசியுள்ளார். கோவையில் செய்தியாளர்களை சந்தித்த செங்கோட்டையன், நான் எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்து அதிமுக வெற்றி பெற வேண்டும் என்ற ஒரே நிலைப்பாட்டில் நான் இருந்து கொண்டு இருக்கிறேன் என்றும் கூறினார்.
கோவை விமான நிலையத்தில் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

எடப்பாடியின் மகன், மாப்பிள்ளை, மைத்துனர்
"எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்து ஒரே நிலைப்பாட்டில் நான் இருந்து கொண்டு இருக்கிறேன். இன்றைக்கு வருகிற பிரச்சினைகளை பார்க்கும் போது திமுகவில் மட்டும் குடும்ப அரசியல் இல்லை. இன்று இவருடைய (எடப்பாடி) அரசியலிலும் மகன், மாப்பிள்ளை, மைத்துனர் போன்றவர்களின் தலையீடுகள் இருக்கிறது என்பது நாடறிந்த உண்மை.
அரசியலில் பல்வேறு கருத்துகள் பரிமாறினாலும் கூட, இந்த இயக்கத்திற்காக எம்.ஜி.ஆர், ஜெயலலிதா காலத்தில் இருந்து இன்று வரையிலும் அதிமுக வலிமை பெற வேண்டும். அதிமுக நாளை வெற்றி பெற வேண்டும் என்றுதான் நான் பணிகளை மேற்கொண்டு வருகிறேன்.
ஏமாற்றக் கூடாது
தன்னால் முடியாததை முடியும் என்று சொல்லி, தன்னையும் ஏமாற்றிக்கொண்டு, மற்றவர்களையும் ஏமாற்றக் கூடாது என்பதுதான் தத்துவம்," என்று தெரிவித்துள்ளார். திமுகவில் குடும்ப அரசியல் இருப்பதாக அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சித்து வருகின்றன.
திமுகவிற்கு எதிரான பிரதான ஆயுதமாக குடும்ப அரசியலையே எதிர்க்கட்சிகள் முன்வைத்து வரும் சூழலில், அதிமுகவிலும் குடும்ப அரசியல் நடப்பதாக முன்னாள் அமைச்சரும் மூத்த அரசியல் தலைவருமான செங்கோட்டையன் வைத்திருக்கும் குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
10 நாள் கெடு விதித்தார்
அதிமுகவில் மூத்த நிர்வாகியாகவும் கட்சியின் நிறுவனர் எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்தே முக்கிய பிரமுகராக விளங்கிய செங்கோட்டையன், கடந்த வெள்ளிக்கிழமை அதிமுகவில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் கட்சியில் இணைக்க வேண்டும் என்றும், அதற்காக கட்சி தலைமைக்கு 10 நாள் கெடு விதிப்பதாகவும் செங்கோட்டையன் கூறியிருந்தார்.
அதிரடியாக நீக்கப்பட்ட செங்கோட்டையன்
செங்கோட்டையன் இந்த கருத்தை வெளிப்படுத்திய சில நாட்களில் அவரது கட்சி பதவி பறிக்கப்பட்டது. ஆதரவாளர்களின் பதவியும் பறிக்கப்பட்டது. இதற்கிடையே பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 118வது ஜெயந்தி விழா மற்றும் குருபூஜைக்கு முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வத்துடன் ஒரே காரில் சென்றதும், பின்னர் அங்கு டிடிவி தினகரன், சசிகலாவை சந்தித்து பேசியதும் அதிமுகவில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து, கட்சியின் மூத்த நிர்வாகிகளை அழைத்து பேசிய பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, செங்கோட்டையனை அதிமுகவில் இருந்து நீக்க முடிவு எடுத்தார். கட்சியின் கொள்கை, குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கட்சியின் சட்டத்திட்டங்களுக்கு மாறுபட்டு, கட்சியின் ஒழுங்குமுறை குலையும் வகையில் நடந்து கொண்டதாலும் செங்கோட்டையன் அதிமுகவில் இருந்து நீக்கப்படுகிறார்.
வழக்கறிஞர்களுடன் செங்கோட்டையன் ஆலோசனை
கட்சியில் இருப்பவர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களுடன் எவ்வித தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என்றும் எடப்பாடி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருந்தார். அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டதையடுத்து எடப்பாடி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வரும் செங்கோட்டையன், கட்சியின் மூத்த நிர்வாகியான தன்னை நீக்குவதற்கு முன்பாக விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியிருக்க வேண்டும் என்றும், நீக்கப்பட்டதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர இருப்பதாகவும் கூறினார். இது தொடர்பாக வழக்கறிஞர்களுடன் செங்கோட்டையன் ஆலோசனை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.
-
பனையூர் பக்கம் திரும்பும் ரராக்கள்.. காலியாகும் அதிமுக கூடாரம்? எடப்பாடி பழனிசாமி முக்கிய மீட்டிங்! -
“எந்த ரீல்ஸ் மூலம் தவெக வென்றதோ அதன் மூலமே நாமும் வெற்றி பெறுவோம்”.. அதிமுகவினருக்கு எடப்பாடி ஆர்டர் -
அவர் வரலாறு தெரியுமா.. சந்தர்ப்பவாத அரசியல்வாதி.. ஆதவ் அர்ஜுனாவை வெளுத்த கேபி முனுசாமி -
பனையூரில் மெகா சம்பவம் ரெடி.. முதல்வர் விஜய்யின் பிறந்தநாளில் தவெகவில் இணையும் மாஜி அமைச்சர்கள்! -
களத்தில் இறங்கிய எடப்பாடி.. தவெக அரசை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு! -
சனிக்கிழமை தோறும் ஆள்பிடிக்கும் விஜய்.. அதிமுக மாஜி அமைச்சர் ஆர்பி உதயகுமார் கடும் டென்ஷன் -
ராஜினாமா செய்து தவெகவில் சேர்ந்த 4 அதிமுக எம்எல்ஏக்களுக்கு சிக்கல்.. நோட்டீஸ் அனுப்பியது ஏன்? சபாநாயகர் விளக்கம் -
திமுகவின் கோட்டையை சிதறடித்த தவெக.. சென்னை அதிமுக நிர்வாகிகளை தூக்கும் அறிவாலயம்.. பின்னணி! -
கருகுது இரட்டை இலை.. திமுகவுக்கு தாவும் சி.விஜயபாஸ்கர்? பெரிய பொறுப்புடன் வரவேற்கும் மு.க.ஸ்டாலின்! -
“தீயசக்தி, தீர்ந்துபோன சக்தி.. கூப்புக்காலம் கூடிக்கொண்டே போகும்” - திமுக, அதிமுகவுக்கு தவெக பதிலடி! -
“கரண்ட்டே இல்ல.. விவசாயிகளை ஏமாற்றும் அறிவிப்பை வெளியிட்டுள்ளார் விஜய்” - எடப்பாடி கடும் தாக்கு! -
செங்கோட்டையன் தந்த ஸ்வீட் தகவல்.. பட்டா வாங்குவதில் இனி இந்த 'டார்ச்சர்' இல்லை! அடடா வெறும் 15 நாளா?












Click it and Unblock the Notifications