பிரபல நடிகை மிரண்டுட்டாங்க.. யாரந்த கோவை செல்வி? வசமா மாட்டிக்கிட்ட தோழி.. கோயம்புத்தூர் பரபரப்பு
கோவை: பிரபல நடிகையின் வீட்டில் நடந்த திருட்டு சம்பவம் குறித்து கோவை போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி வருகிறார்கள்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரபல நடிகை அதுல்யா ரவி.. இவர் குறுகிய மிக மிக காலகட்டத்தில் டப்ஸ்மாஷ், குறும்படம் போன்றவற்றில் நடித்ததுடன், பெரிய ஹீரோக்களுக்கு ஈடாகவும் பிரபலமானார்..

அவர் நடித்த பல குறும்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதால், சமுத்திரக்கனி நடித்த "ஏமாளி" படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. பிறகு, காதல் கண்கட்டுதே படம் அதுல்யாவிற்கு மிகப்பெரிய அடையாளத்தை ஏற்படுத்தி தந்த நிலையில், நாடோடிகள்2, "கேப்மாரி" உள்ளிட்ட படங்களில் அடுத்தடுத்து நடித்து பிஸியான நடிகையாகிவிட்டார்.
இவரது சொந்த ஊர் கோவை ஆகும். வடவள்ளி அவுத்தி மருத்துவமனை மருதம் சாலையில் உள்ள வீட்டில், தன்னுடைய அம்மா விஜயலட்சுமியுடன் வசித்து வருகிறார் அதுல்யா ரவி..
2 ஆயிரம் திருட்டு: இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு, இவரது வீட்டில் ரூ.2 ஆயிரம் பணம் திருடு போய்விட்டது.. இதனை தேடி பார்த்தபோதுதான், அதுல்யா ரவியின் பாஸ்போர்ட்டும் காணாமல் போயிருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அதுல்யா ரவியின் தாய் விஜயலட்சுமி, வீடு முழுவதும் பாஸ்போர்ட் மற்றும் பணத்தை தேடி பார்த்தும் கிடைக்கவில்லை. அதனால், வடவள்ளி போலீசில் இதுகுறித்து புகார் அளித்தார். போலீசாரும் இதுகுறித்து வழக்குப்பதிவுசெய்து விசாரணையை மேற்கொண்டு வந்தனர்.
அப்போதுதான், இவர்களது வீட்டில் வேலை பார்க்கும் செல்வி என்பவர் மீது சந்தேகம் ஏற்பட்டது.. தொண்டாமுத்தூர் அடுத்த குளத்துபாளையத்தை சேர்ந்தவர் செல்வி.. 46 வயதாகும் செல்வியிடம் விசாரித்தபோது, முன்னுக்குப்பின் முரணாக அவர் பதில் தந்தார்..
விசாரணை: இதையடுத்து, போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியதில், தன்னுடைய தோழியுடன் சேர்ந்து பணம் மற்றும் பாஸ்போர்ட்டை திருடியதை ஒப்புக்கொண்டார்... 40 வயதான சுபாஷினி என்ற தோழியையும், செல்வியையும் போலீசார் கைது செய்துள்ளனர். இவர்களிடமிருந்து ரூ.1500 பறிமுதல் செய்யப்பட்டுவிட்டது.
இப்போது பாஸ்போர்ட்டை எங்கே வைத்திருக்கிறார்கள் என்ற விசாரணை நடந்து வருகிறது. வீட்டில் வேலை செய்யும் செல்வியே இதனை திருடியிருந்தது, நடிகை தரப்புக்கு அதிர்ச்சியை தந்து வருகிறதாம்..!!
மோசடி: சில மாதங்களுக்கு முன்புகூட, அதுல்யா ரவி பெயரில் மோசடி ஒன்று நடந்தது.. ட்விட்டர், இன்ஸ்டாகிராமில் தனது பெயரில் அக்கவுண்ட் வைத்துள்ளார் அதுல்யா ரவி. ஆனால், இவரது பெயரிலேயே, யாரோ சிலர் போலியாக அக்கவுண்ட் ஆரம்பித்து, திரைபிரபலங்களுக்கு தனிப்பட்ட முறையில் மெசேஜ்களை அனுப்பியிருக்கிறார்கள்..
சம்பந்தப்பட்டவர்கள், அதுல்யா ரவியை தொடர்பு கொண்ட பிறகே, தனது பெயரில் யாரோ போலி அக்கவுண்ட் தொடங்கி பிரபலங்களுக்கு தனிப்பட்ட முறையில் செய்தி அனுப்பியது அவருக்கு தெரிய வந்தது.
அலர்ட்: இதுகுறித்து போலீசில் புகார் தந்த அதுல்யா ரவி, "என் பெயரில் யாரோ போலி அக்கவுண்ட் தொடங்கி, எனக்கு தெரிந்த திரை பிரபலங்களுக்கு தனிப்பட்ட முறையில் செய்தி அனுப்புகிறார்கள். இது ரொம்ப மோசமான செயல். இதுபற்றி புகார் அளித்துள்ளேன். நான் பேஸ்புக்கிலேயே இல்லை" என்று எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி












Click it and Unblock the Notifications