தமிழ்நாட்டின் முதல் "லுலு ஹைப்பர்" மார்க்கெட் கோவையில் திறந்தாச்சு.. சூட்டோடு சூடாக ஆரம்பிச்சிடுச்சே
கோவை: தமிழநாட்டின் முதல் லுலு ஹைப்பர் மார்க்கெட் கோவையில் இன்று திறக்கப்பட்டுள்ளது.. இதற்கான விற்பனையும் ஆரம்பமாகிவிட்டது.
தமிழக முதல்வர் ஸ்டாலின் கடந்த 2022ம் ஆண்டு மார்ச் மாத இறுதியில் 4 நாள் அரசு முறை பயணமாக துபாய் சென்றிருந்தார்.. அங்கு தொழிலதிபர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி தமிழ்நாட்டிற்கு முதலீடுகளையும் ஈர்த்திருந்தார்.

முதல்வர் ஸ்டாலின்: அதன் ஒரு பகுதியாக, சர்வதேச அளவில் பெரும் ஹைபர் மால்களை நடத்தி வரும், கேரளாவை சேர்ந்த தொழிலதிபர் யூசுப் அலிக்கு சொந்தமான லுலு இண்டெர்நேஷனல் குழுமம், தமிழ்நாட்டில் ரூ.3,500 கோடியை முதலீடு செய்ய ஒப்பந்தம் கையெழுத்தானது.
கேரளா மாநிலம் கொச்சின் உட்பட உலகில் 22 நாடுகளில் 230 பிரம்மாண்ட ஹைபர் மால்களை லுலு குழுமம் நடத்தி வருகிறது. இந்த நிலையில் இந்தியாவின் பல்வேறு முக்கிய நகரங்களில் மால்களை தொடங்கவும் திட்டமிட்டு இருக்கிறது. அதன்படி வரும் 2024 ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் கோவையில் புதிய மால் ஒன்றை தொடங்க லுலு குழுமம் முடிவு செய்தது..
என்ன காரணம்: இதற்கு காரணம், சென்னைக்கு அடுத்தபடியாக வளர்ச்சி பெற்று வருவது கோவைதான்.. தொழில்துறையாகட்டும், கல்வியாகட்டும், மருத்துவ துறையாகட்டும், அனைத்திலுமே கோவை முன்னேறி வருகிறது.. அதனாலேயே கோவையில் லுலு மால்களை கட்ட முடிவானது..
கோவை அவிநாசி சாலையில் உள்ள லட்சுமி மில்ஸ் வளாகத்தில், இதற்கான பணிகள் துரிதமாகவே நடந்தது.. லுலு ஹைப்பர் மார்க்கெட் 1.20 லட்சம் சதுர அடியில் மிக பிரம்மாண்டமாக கட்டி முடிக்கப்பட்டுள்ளது.. இன்றைய தினம் இந்த கட்டிடம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.. சிறப்பு விருந்தினராக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி ராஜா கலந்துகொண்டு, இந்த கட்டிடத்தை திறந்து வைத்துள்ளார்..

அசத்தல் திட்டம்: ஏற்கனவே, நிறைய டிபார்ட்மெண்ட் ஸ்டோர்கள், மால்கள் என பொதுமக்கள் ஷாப்பிங் செய்வதற்கு பல இடங்கள் கோவையில் இருந்தாலும், அனைத்து பொருட்களையும் ஒரே இடத்தில் அடக்குவதாக இந்த ஹைப்பர் மார்க்கெட் அமைந்துள்ளது. குறிப்பாக, வீட்டு உபயோக பொருட்கள், உணவுகள், காய்கறிகள், என்று அனைத்துமே இதற்குள் அடங்கிவிட்டன.. அத்துடன், சூட்டோடு சூட்டாக மதியமே விற்பனையும் தொடங்கியாகிவிட்டது..
இந்நிகழ்ச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய லூ.லூ நிறுவனத்தின் ஓனர் யூசூப் அலி, "தமிழக அரசுடன் 3500 கோடி ரூபாய்க்கு போடப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையின் முதல் நடவடிக்கையாக இந்த ஹைப்பர் மார்க்கெட் துவக்கப்பட்டிருக்கிறது.. இதில் எங்களுடைய சொந்த நிறுவன பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் ஏராளமானோருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட உள்ளது" என்றார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications