தூக்குடா தூக்கு.. கோவையில் சிலிண்டர் அபேஸ் .. பட்ட பகலில் பைக்கில் பறந்த சில்வண்டுகள்
கோவை: கோவை ரோஸ் கார்டன் பகுதியில் இண்டேன் கேஸ் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனம் சார்பில், வீடுகளுக்கு சிலிண்டர்களை வினியோகிக்க அப்பகுதியில் மொத்தமாக ஒரு இடத்தில் இறக்கி வைப்பது வழக்கமாகும். நேற்று வழக்கம் போல், சிலிண்டர்களை வீடு ஒன்றின் முன் இறக்கி வைத்திருந்தனர். அப்போது பைக்கில் வந்த நபர்கள் இருவர், சிலிண்டரை திருடி தப்பி உள்ளார்கள். இது தொடர்பாக அந்த நிறுவனம் சார்பில் கோவை கடைவீதி போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டு இருக்கிறது.
கோவை மாநகரத்தை பொறுத்தவரை தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய நகரம் ஆகும்.இங்கு சுமார் 30 லட்சம் மக்கள் வசிக்கிறார்கள். தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படும் கோவை, தொழில் நகரமாக திகழ்கிறது. கோவையில் ஏராளமான தொழில் நிறுவனங்கள் உள்ளன. கோவையின் சுற்று வட்டார பகுதிகள் வெளியூர், வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களைச் சேர்ந்த பல லட்சக்கணக்கான தொழிலாளர்கள் தொழில் செய்தும், தொழிலாளர்களாகவும் கூட்டமாகவும், குடும்பத்தினருடனும் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் கோவை மாநகரில் திருட்டுச் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது . அதில் தங்க நகை, பணம், இருசக்கர வாகனம், ஹெல்மெட், பெட்ரோல், வாகனங்களில் உதிரி பாகங்களைத் தொடர்ந்து பழங்களை அடுக்கி வைத்து இருக்கும் குடைகள், பாக்ஸ்கள் மட்டும் இன்றி தற்பொழுது சிலிண்டரையும் அலேக்காக அபேஸ் செய்யும் சம்பவமும் அரங்கேறி வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகிறார்கள்.
கோவை உக்கடம் ரோஸ் கார்டன் பகுதியில் நேற்று காலை இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் இண்டேன் கேஸ் என்ற தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான சிலிண்டர்கள் அப்பகுதி வீடுகளுக்கு விநியோகம் செய்வதற்கு ஒரு இடத்தில் அடுக்கி வைத்து இருந்தனர்.
இந்நிலையில் அந்த பகுதிக்கு இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் சிலிண்டர்கள் அடுக்கி வைத்து இருந்ததை பார்த்து அங்கும், இங்கும் நோட்டமிட்டு அலேக்காக சிலிண்டர் ஒன்றை தூக்கிக் கொண்டு அபேஸ் செய்து இரு சக்கர வாகனத்தில் சென்றனர். அது அப்பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த சி.சி.டி.வி கேமராவில் பதிவாகி உள்ளது.
அந்த காட்சிகள் தற்பொழுது வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் அச்சம் அடைந்து உள்ளனர். இது தொடர்பாக அந்த நிறுவனம் சார்பில் கோவை கடைவீதி போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது. அதன் பேரில் சிலிண்டரை திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள். சிசிடிவி கேமரா இருப்பது தெரியாமல் திருடிய நபர்கள் எளிதாக சிக்க வாய்ப்பு உள்ளது. வாகன எண் வைத்தும், முகத்தின் அடையாளங்களை வைத்தும், அவர்கள் எந்த வழியாக சென்றார்கள் என்பதை பல்வேறு சிசிடிவி காட்சிகள் மூலம் கண்டுபிடித்துவிட முடியும் என்பதால், குற்றவாளிகள் விரைவில் சிக்குவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது.
-
கியாஸ் தட்டுப்பாடு.. இண்டக்ஷன் அடுப்பு பயன்படுத்துவோருக்கு மின்சார வாரியம் முக்கிய அறிவிப்பு -
கோவை வடக்கில் அண்ணாமலை.. வானதி சீனிவாசனுக்கு பதில் களம் இறங்க போகிறாரா? -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு!












Click it and Unblock the Notifications