திடீர் திடீர்னு உருளுதாம் சாயுதாம்.. ஜிடி நாயுடு மேம்பாலத்தில் ஓடிய பள்ளி வேனின் டயரால் பரபரப்பு
கோவை: தமிழ்நாட்டின் நீளமான பாலம் என்ற பெயர்பெற்ற கோவை ஜிடி நாயுடு மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த பள்ளி வேனில் இருந்து பின்பக்க டயர் கழன்று ஓடிய சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை மாவட்டத்தின் முக்கியப் பகுதியாக அவிநாசி சாலை உள்ளது. திருப்பூர், ஈரோடு, சேலம் உள்ளிட்ட பிற மாவட்டங்களுடன் கோவை மாநகரை இணைப்பது அவிநாசி சாலை தான். அங்கு ஏராளமான கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், தொழிற்சாலைகள், ஐடி நிறுவனங்கள், விமான நிலையம் ஆகியவை உள்ளன. இதனால் அந்தப் பகுதி எப்போதுமே பரபரப்பாக காணப்படும்.

போக்குவரத்து நெரிசலை எளிமைப்படுவதற்காக அங்கு மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று பொது மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை வைத்து வந்தனர். கடந்த அதிமுக ஆட்சியில் உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் பகுதி வரை சுமார் 10.10 கி.மீ தொலைவுக்கு உயர்மட்ட மேம்பாலம் அமைக்கப்படும் என்று அறிவித்தனர். இதற்காக சுமார் ரூ.1,700 கோடி ஒதுக்கப்பட்டு கடந்த 2020 ஆம் ஆண்டு பணிகள் தொடங்கின.
நீளமான பாலம்
தமிழ்நாட்டின் நீளமான பாலம் என்ற பெயரை பெற்ற இந்த பாலத்தின் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தன. முதலமைச்சர் ஸ்டாலின் ஏற்கனவே இந்த பாலத்தை மேலும் 5 கி.மீ தொலைவுக்கு நீலாம்பூர் வரை நீட்டிக்கப்படும் என்று அறிவித்துவிட்டார். அவிநாசி சாலை உயர்மட்ட மேம்பால பணிகள் நிறைவடைந்த நிலையில், அக்டோபர் 9 ஆம் தேதி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இந்த பாலத்தை திறந்து வைத்தார்.
இந்த மேம்பாலம் திறந்து வைக்கப்பட்டதையடுத்து பொதுமக்கள் சிரமமின்ற பயணங்களை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், கோவை ஜிடி நாயுடு மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த பள்ளி வேனில் இருந்து பின்பக்க டயர் கழன்று ஓடிய சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
என்ன டயரை காணோம்
கோவை மாவட்டம், ஜிடி நாயுடு மேம்பாலம் மீது பள்ளி வேன் சென்று கொண்டிருந்தது. அப்போது, திடீரென அந்த வேனிலிருந்து பின்பக்க சக்கரம் கழன்று பின்பக்கமாக ஓடியுள்ளது. இதனை அறியாத வேன் ஓட்டுநர் பள்ளி வேனை இயக்கியபடி இருந்துள்ளார். அப்போது, திடீரென வேன் சக்கரம் இல்லாத பகுதியில் சரிந்து நிற்பதைப் பார்த்த ஓட்டுநர் உடனடியாக வேனை சாலையோரம் பாதுகாப்பாக நிறுத்தினார்.
மேம்பாலத்தில் பரபரப்பு
பிறகு வாகனத்தை சோதனை செய்தபோது டயர் இல்லாதது கண்டுபிடிக்கப்பட்து. சக்கரம் எங்கு சென்றது என்பது தெரியாமல், நீண்ட நேரமாக ஓட்டுநர் தேடிய நிலையில், சுமார் 1 கிலோ மீட்டர் தொலைவில் கிடந்த சக்கரம் கண்டுபிடிக்கப்பட்டது.
பிறகு, அந்த சக்கரம் வேன் இருந்த இடத்துக்கு உருட்டிக் கொண்டு வரப்பட்டது. இந்த சம்பவத்தால் மேம்பாலத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. எனினும், ஓட்டுநரின் சாமர்த்தியத்தால் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டதால் மக்கள் நிம்மதி அடைந்தனர்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications