Gold smuggling: கேரளா அரசுப் பேருந்தில் அள்ள அள்ள வந்த தங்கம்.. விசாரணையில் அதிர்ச்சி
கோவை: கோவை மாவட்டம் வழியாக கேரளாவுக்கும், கேரளாவில் இருந்து கோவை வழியாக பிற மாநிலங்களுக்கும் ஹவாலா பணம், தங்க நகை கடத்துவது வழக்கம். இதனால் கோவை - கேரளா எல்லை எப்போதும் பரபரப்பாக காணப்படும். பொங்கல் பண்டிகை விடுமுறை காரணமாக ஊரே வெறிச்சோடி காணப்படும் நிலையில், உரிய ஆவணங்களின்றி கேரளாவில் இருந்து கோவைக்கு 415 கிராம் மதிப்பிலான தங்கநகை கேரளா அரசுப் பேருந்து மூலம் கடத்தி வரப்பட்டது. தங்கம் கடத்தி வந்த நபரை பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவை மாவட்டம் தமிழ்நாடு - கேரளா எல்லையை ஒட்டியுள்ளது. இதனால் அங்கு தமிழ்நாடு - கேரளா ஆகிய இரண்டு மாநிலங்களின் தாக்கமும் இருக்கும். கேரளாவைச் சேர்ந்த ஏராளமானோர் கல்வி, தொழில், வேலை வாய்ப்பு ஆகியற்றுக்காக கோவையில் வசித்து வருகிறார்கள். கடவுளின் நகரமான கேரளா இயற்கை வளங்களுக்கு நிறைந்தது. கேரளாவைச் சேர்ந்த பலர் வெளிநாடுகளில் வசிக்கிறார்கள்.

ஹவாலா,, தங்கம் கடத்தல்
வெளிநாடுகளில் இருந்து ஹவாலா மற்றும் தங்கம் கடத்தலுக்கு கோவையை பயன்படுத்தி வருகிறார்கள். ஹவாலா நெட்வொர்க் மற்றும் தங்கம் கடத்தலை கட்டுப்படுத்த கேரளாவில் நடவடிக்கைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. விமான நிலையம், பேருந்து மற்றும் ரயில் நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இதனால் பாலக்காடு, திருச்சூர், கொச்சி, மலப்புரம் உள்ளிட்ட பகுதிகளில் ஹவாலா பணம் மற்றும் தங்கம் கடத்தி செல்ல கோவை வழித்தடத்தை பயன்படுத்துகிறார்கள். கோவையில் இருந்து கேரளா செல்வதற்கு வாளையார், வேலந்தாவளம், பொள்ளாச்சி மீனாட்சிபுரம், ஆனைகட்டி ஆகிய 4 வழிகள் உள்ளன. இவற்றில் வாளையாறு தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியிருப்பதால் அதை அதிகம் பயன்படுத்துகிறார்கள்.
அரசு பேருந்தில் தங்கம்
பேருந்தில் கடத்துவது, உடைக்குள் மறைத்து வைப்பது, கார் மற்றும் பைக் ஆகியவற்றில் ரகசிய அறை அமைத்து பணம், தங்கம் கடத்துவது வாடிக்கையாகிவிட்டது. சமீபகாலமாக அந்த நெட்வொர்க்கில் இருப்போர் அடிக்கடி சிக்கி கைது செய்யப்பட்டு வருகிறார்கள். தமிழ்நாடு - கேரளா காவல்துறை இணைந்து கடத்தலை கட்டுப்படுத்து பல நடவடிக்கைகள் எடுத்தும் தீர்வு கிடைக்கவில்லை.
இந்நிலையில் கேஜி சாவடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, வாளையார் சோதனை சாவடியில் நேற்று கேரளா மாநிலம் திருச்சூரில் இருந்து கோவை வந்த அரசு பேருந்தை நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அதில் ஜாய் (54) என்கிற நபரிடம் இருந்து 415 கிராம் மதிப்பிலான தங்க மோதிரம் கண்டறியப்பட்டது. உரிய ஆவணங்கள் இல்லால் தங்க நகை மறைத்து வைத்தது தெரியவந்தது. அந்த நகை அவரிடமிருந்து மீட்ட காவல்துறையினர், வருமானவரித்துறையிடம் ஒப்படைத்தனர்.
விசாரணை
முதல்கட்ட விசாரணையில் நகையை கடத்தி வந்த ஜாய் திருச்சூரில் நகைப்பட்டறை வைத்துள்ளார். 415 கிராம் மதிப்பிலான தங்க நகைகளை கோவை மாவட்டத்தில் உள்ள சிறு கடைகளுக்கு விற்பனைக்காக எடுத்து சென்றதாக கூறியுள்ளார். காவல்துறையினர் ஜாயையும் வருமானவரித்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். அவரிடம் வருமானவரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications