Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னை, தேனி, மதுரை உள்பட பல்வேறு ஊர்களில் இருந்து கோவைக்கு அரசு பேருந்தில் வருவோருக்கு குட்நியூஸ்

Subscribe to Oneindia Tamil

கோவை: கோவையில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு சொகுசு பஸ்கள் விடப்பட்டு வருகிறது. குறிப்பாக மதுரை, தேனி, திருச்சி, சேலம் உள்பட பல்வேறு பகுதிகளுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. இந்நிலையில் கோவை அரசு பேருந்துகளில் முன்பதிவு செய்பவர்களுக்கு 'லிங்க் டிக்கெட்' என்ற புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் என்ன நன்மை என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.

தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய தொழில் நகரமான கோவையில், மதுரை, தேனி, திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர், சேலம், தர்மபுரி, சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருச்சி, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்பட பல்வேறு மாவட்ட மக்கள் பணிபுரிகிறார்கள்.

bus chennai

தீபாவளி, பொங்கல், ஆயுத பூஜை, சுதந்திர தினம், குடியரசு தினம், விநாயகர் சதுர்த்தி, தமிழ் புத்தாண்டு, ரம்ஜான், கிறிஸ்துமஸ் உள்பட பல்வேறு பண்டிகை காலங்களிலும் , வார இறுதி நாட்களிலும், பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை விடப்படும் நாட்களிலும், சுபமுகூர்த்த நாட்களிலும், ஏராளமான மக்கள் சொந்த ஊருக்கு சென்று வருவார்கள். இவர்களின் வசதிக்காக கோவையில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு சொகுசு பஸ்கள் விடப்பட்டு வருகிறது. இதில் சென்னை, மதுரை, தேனி, திருச்சி, சேலம், திருநெல்வேலி உள்பட பல்வேறு பகுதிகளுக்கு சிறப்பு பஸ்கள் அதிக அளவில் இயக்கப்பட்டு வருகிறது. இதில் முக்கிய பஸ்களில் முன்பதிவு செய்து கொள்ளும் வசதிகளும் இருக்கின்றன. இந்த வசதியை பலர் பயன்படுத்தி வருகிறார்கள்.

இந்நிலையில் கோவை அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் வெளியூரில் இருந்து கோவை வர அரசு பஸ்களில் முன்பதிவு செய்பவர்களுக்கு புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சொகுசு பஸ்கள் மற்றும் சாதாரண பஸ்களில் முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு புதிதாக 'லிங்க் டிக்கெட்' என்ற புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. இதன்படி அரசு பஸ்களில் பிற பகுதியில் இருந்து கோவை வர முன்பதிவு செய்யும்போது, கோவையில் இருந்து எந்த பகுதிக்கு செல்ல வேண்டுமோ அந்த பகுதிக்கு செல்ல டவுன் பஸ்களிலும் சேர்த்து டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம். இந்த புதிய வசதிக்கு பயணிகளிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இது குறித்து போக்குவரத்துக்கழக அதிகாரிகள் கூறும் போது, சென்னை, மதுரை, உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து கோவைக்கு வர பயணிகள் முன்பதிவு செய்யும் வசதி கொண்ட அரசு பஸ்சில் முன்பதிவு செய்பவர்களுக்குதான் இந்த லிங்க் டிக்கெட் வசதியை அறிமுகம் செய்திருக்கிறோம். இதன்படி கோவையில் இருந்து ஒருவர் அரசு பஸ்சில் பிற பகுதிகளுக்கு செல்லவோ அல்லது பிற பகுதிகளில் இருந்து கோவை வர முன்பதிவு செய்யும்போது, இந்த லிங்க் டிக்கெட்டை அதனுடன் சேர்த்து முன்பதிவு செய்து கொள்ள முடியும்.

இந்த வசதியை பஸ்சை விட்டு இறங்கிய பின்னரோ அல்லது பஸ்சில் ஏறுவதற்கு முன்னர் 3 மணி நேரத்துக்குள் டவுன் பஸ்களில் மட்டுமே பயன்படுத்தி கொள்ள முடியும். குறிப்பாக கோவையில் உள்ள காந்திபுரம், உக்கடம், சிங்காநல்லூர் ஆகிய பஸ் நிலையங்களுக்கு வருவதற்கு இந்த டிக்கெட்டை பயன்படுத்தலாம். இந்த புதிய வசதிக்கு வரவேற்பு அதிகமாக உள்ளது. இந்த டிக்கெட்டுக்கு அதிகபட்சமாக ரூ.30 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த வசதியை பயணிகள் பயன்படுத்தலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+