அரசு ஊழியர்களே குறி இந்த 47 வயசு "பொண்ணுக்கு".. 3 கணவன், நிறைய காதலன், ஓவர் சொத்துகள்.. விழித்த கோவை
கோவை: திருமண மோசடிகள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டிருக்கிறது. இப்படிப்பட்ட மோசடிகளை செய்வது பெரும்பாலும் பெண்களாக இருப்பது அதிர்ச்சியை தந்து கொண்டிருக்கிறது.. வசதி படைத்தவர்களை குறித்து, திருமண மோசடி செய்வதும், அவர்களிடமிருந்து லட்சக்கணக்கில் கொள்ளை போவதுமான சம்பவங்களும் பெருகி கொண்டிருக்கிறது. குடும்ப மானம் கருதி பலரும் காவல்துறையை நாடாமல் விட்டுவிடும் நிலைமையும் உள்ளது.. இந்நிலையில், 24 வயது பெண், திருமண மோசடி தொடர்பாக போலீசுக்கு சென்று புகார் தந்துள்ளார். என்ன நடந்தது?
கூடுவாஞ்சேரி அருகே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மனைவியை இழந்த அரசு ஊழியர்களாக பார்த்து திருமணம் செய்து நகை, பண மோசடியில் ஈடுபட்ட பிரபல கல்யாண ராணியை நேற்று போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

காஞ்சிபுரம் மாவட்டம், கூடுவாஞ்சேரி அருகே உள்ளது ஆதனூர்.. இங்கு வசித்து வருபவர் பிரதீப்.. இவரது மனைவி பெயர் செசிலியா.. 24 வயதாகிறது.. ஆதனூர் பகுதியை சேர்ந்த வட்டார சுகாதார ஆய்வாளர் வனத்தையன் என்பவரின் மகள்தான் இந்த செசிலியா.
47 வயது பெண்மணி
இந்நிலையில், 2 நாட்களுக்கு முன்பு மணிமங்கலம் போலீஸ் ஸ்டேஷனில், கோவையை சேர்ந்த மடோனா என்ற 47 வயது பெண்மணி மீது செசிலியா பரபரப்பு புகார் ஒன்றை தந்தார்.. அந்த புகாரில் உள்ளதாவது:
"கடந்த 1993ம் ஆண்டு ஊட்டி, மஞ்சனக்கோரை பகுதியை சேர்ந்த வனத்துறை அதிகாரி மகேந்திரன் என்பவரை மடோனா திருமணம் செய்துள்ளார். அவர் இறந்த பிறகு, கடந்த 2014ம் ஆண்டு திருவள்ளூரை சேர்ந்த, மனைவியை இழந்து தனியாக வசித்த ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி கனகராஜ் என்பவரை மடோனா 2வதாக திருமணம் செய்துள்ளார். பின்னர் அவரை ஏமாற்றி நகை, பணத்தைப் பறித்துக் கொண்டு விவாகரத்து பெற்றுள்ளார்.
3வது கல்யாணம்
இதைத் தொடர்ந்து, கடந்த 2021ம் ஆண்டு மனைவியை இழந்து தனியே வசித்த ஆதனூர் பகுதியை சேர்ந்த வட்டார சுகாதார ஆய்வாளரும் எனது தந்தையுமான வனத்தையனை போலி ஆவணங்கள் மூலம் தேவாலய பாதிரியாரை ஏமாற்றி, குழந்தை இயேசு ஆலயத்தில் 3வதாக மடோனா திருமணம் செய்து மோசடியில் ஈடுபட்டுள்ளார்.
மேலும், தன்னுடைய தந்தையின் சொத்துகளை அபகரிக்கும் வகையில், அவரது குடும்பத்தினரை அடியாட்களுடன் வந்து மிரட்டி, வீட்டை உடைத்து ரகளையில் ஈடுபட்டுள்ளார். அவர்மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று வனத்தையனின் மகள் செலிலியா புகார் மனுவில் கேட்டுக் கேட்டுக் கொண்டிருந்தார்.
சொத்துக்கள் அபகரிப்பு
இந்த புகார் மனுவின் பேரில், மணிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மடோனாவையும் கைது செய்துள்ளனர்.. இவரிடம் நடத்திய விசாரணையில்தான் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
அதாவது, மனைவியை இழந்து தனியே வசிக்கும் ஆண்களுக்கு , அதிலும் குறிப்பாக அரசு ஊழியர்களுக்கு மட்டுமே மடோனா குறி வைப்பாராம்.. தனிமையில் வசித்து வரும் அரசு ஊழியர்களிடம் நெருங்கி பழகி, அவர்களையே திருமணம் செய்து கொண்டு நகை, பணம், சொத்துக்களை அபகரித்துவிடுவாராம்..
நிலுவையில் வழக்கு
மடோனாவின் இந்த மோசடியில் ஏராளமான அப்பாவி அரசு ஊழியர்கள் சிக்கியிருப்பதாக தெரிகிறது.. மடோனாவிடம் தொடர்ந்து விசாரித்தால்தான், அவர் எத்தனை பேரை திருமணம் செய்தார்? யார் யாரை ஏமாற்றி சொத்துக்களை அபகரித்தார் என்று தெரியவரும்.. கோவையை சேர்ந்த மடோனாவை போலீசார் கைது செய்துள்ளார்..
இந்த மடோனா மீது, ஏற்கெனவே அரசு கருவூலத்தை ஏமாற்றி பணம் பெற்றதாக ஊட்டி போலீசிலும் கேஸ் ஒன்று நிலுவையில் இருக்கிறதாம்..!!!
-
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்?












Click it and Unblock the Notifications