கொரோனாவுக்கு பின் அதிகரிக்கும் மாரடைப்பு.. மா.சுப்பிரமணியன் சொன்ன காரணம்..ஆராய்ச்சி செய்ய வேண்டுகோள்
கொரோனாவுக்கு பின் மாரடைப்பு நோய் அதிகரிப்பதாக மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
கோவை: கொரோனாவிற்கு பின் மாரடைப்பு நோய் அதிகரித்து வருவதாகவும், இதுகுறித்த ஆராய்ச்சி மேற்கொள்ள வேண்டுமென இதய சிகிச்சை நிபுணர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளதாகவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மேலும் தமிழ்நாடு முழுவதும் ஹெல்த் வாக்கிங் திட்டத்தை தொடங்க முதலமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
இந்திய இருதய அறுவை சிகிச்சை சங்கத்தின் 69வது வருடாந்திர கருத்தரங்கம் கோவையில் நடைபெற்று வருகிறது. 3 நாட்கள் நடைபெறும் இந்த கருத்தரங்கத்தை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் துவக்கி வைத்தார்.
இந்த மருத்துவ கருத்தரங்கில் உலகம் முழுவதும் இருந்து 1,200க்கும் அதிகமான இதய அறுவை சிகிச்சை நிபுணர்கள் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டுள்ளனர். இதில் இதய அறுவை சிகிச்சையில் உள்ள புதுமைகள், இதய அறுவை சிகிச்சை குறித்த அனுபவங்களை பகிர்ந்துகொள்ளும் தளமாக கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அமைச்சர் மா.சுப்பிரமணியன்
இந்த கருத்தரங்கின் முக்கிய உரையை உலக சுகாதார அமைப்பின் முன்னாள் தலைமை விஞ்ஞானி மருத்துவர் செளமியா சுவாமிநாதன் வழங்கினார். அவர் கொரோனா பரவலை இந்தியா கையாண்டதும், அதன் மூலம் கற்றுக் கொண்ட பாடங்களும் என்ற தலைப்பில் பேசினார். இதன் பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசுகையில், நாளை 2023-24ம் ஆண்டுக்கான மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையினர் மானிய கோரிக்கையின் போது அறிவிக்கப்பட வேண்டிய புதிய திட்டங்கள் குறித்து மருத்துவ வல்லுநர்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் கலந்தாலோசனைக் கூட்டம் நடக்க உள்ளது.

முதலிடம்
தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகள் போட்டி போட்டுக் கொண்டு இதய அறுவை சிகிச்சையில் பங்களிப்பு அளித்து வருகின்றன. 2008க்கு பிறகு முதலமைச்சர் காப்பீடு திட்டத்தில் இந்தியாவிலேயே தமிழ்நாடு தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. இருதய மாற்று அறுவை சிகிச்சை உட்பட பல மாற்று அறுவை சிகிச்சையில் தமிழகம் தொடர்ந்து பல ஆண்டுகளாக முதலிடத்தில் உள்ளது.

ஹெல்த் வாக்கிங் திட்டம்
புற்றுநோய் சிகிச்சையில் மிக சிறப்பாக பங்களித்து வரும் ஜப்பான் சென்று, அந்நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சர் உட்பட உயர் அதிகாரிகளுடன் உதவியுடன் நேரடியாக அந்த சிகிச்சையை முறைகளையும் பார்த்து வந்துள்ளோம். அந்நாட்டில் செயல்படுத்தி வரும் ஹெல்த் வாக்கிங் (Health walking) என்ற திட்டம் மாரடைப்பை குறைக்க அவசியம்.

மாரடைப்பு நோய் அதிகரிப்பு
இதன் அடிப்படையில் தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களிலும் ஹெல்த் வாக்கிங் (Health walking) திட்டத்தை கொண்டு வர முதல்வரிடம் கோரிக்கை வைத்து செயல்படுத்த உள்ளோம். கொரோனாவிற்கு பிறகு மாரடைப்பு நோய் அதிகரித்து வருவதால் ஆராய்ச்சி மேற்கொள்ள வேண்டுமென இதய சிகிச்சை நிபுணர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளோம். இளைஞர்களிடையே உடற்பயிற்சி தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நாள்தோறும் நான் ஓடி வருகிறேன் என்று தெரிவித்தார்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications