முதல் முகம்.. ஒரே வீடியோ.. மொத்த இதயமும் கரைந்து உருகிடுச்சு.. பூரித்த சுப்ரியா சாஹு.. கோவை கியூட்
கோவை: இணையத்தில் ஒரு யானை வீடியோ வைரலாகி கொண்டிருக்கிறது.. இதை பார்த்த பலரும் நெகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.. அப்படித்தான், வனத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாஹு ட்வீட் ஒன்றினை பதிவிட்டுள்ளார்.
பொள்ளாச்சி அடுத்துள்ள வால்பாறை பகுதியில், சமீபகாலமாகவே, நிறைய வனவிலங்குகள் நடமாட்டம் காணப்படுகிறது.. பக்கத்திலிருக்கும் காட்டுப்பகுதியை விட்டு வெளியேறி, திடீரென எஸ்டேட் பகுதிகளுக்குள் இந்த விலங்குகள் புகுந்து விடுகின்றன.
இப்படித்தான், 2 நாளைக்கு முன்பு, வால்பாறை பகுதியிலுள்ள பன்னிமேடு என்ற இடத்தில் ஒரு குட்டியானை சுற்றித்திரிந்துள்ளது.. தன்னுடைய அம்மாவை பிரிந்து, இந்த குட்டியானை அந்த பகுதியிலேயே சுற்றி சுற்றி வருவதாகவும், தாயை காணாமல் தவித்து வருவதாகவும் வனத்துறையினருக்கு தகவல் வந்தது.

குட்டி யானை: உடனே வனத்துறையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.. இந்த குட்டியானை பிறந்து, 4 மாதமாகியிருக்குமாம்.. யானை கூட்டத்துடன் வரும்போது, தன்னுடைய தாயை தவறுதலாக பிரிந்து வந்துவிட்டிருக்கலாம் என்கிறார்கள்.
அம்மாவை காணாமல், குட்டி யானை இங்குமங்கும் ஓடிக்கொண்டிருந்ததாம்.. தவிப்பில் ஒருவிதமான சத்தத்தையும் எழுப்பி கொண்டேயிருந்ததாம்.. இறுதியில் குட்டி யானையை பத்திரமாக மீட்ட வனத்துறையினர், சாப்பாடும், தண்ணீரும் தந்தனர்.
வனப்பகுதி: பிறகு, குட்டி யானையின் மீது மனித வாடை வராமல் இருக்க, ஆற்று நீரில் குளித்து வைத்தனர்.. அதற்கு பிறகு, குட்டி யானையை வனப்பகுதிக்குள் அழைத்து சென்று, யானை கூட்டத்தை தேடும் முயற்சியிலும் ஈடுபட்டனர். அந்த பகுதிகளில் ட்ரோன் கேமரா மூலம் கண்காணிப்பையும் மேற்கொண்டனர். இறுதியில், தாய் யானையையும் கண்டுபிடித்துவிட்டார்கள்.
இதையடுத்து, குட்டியானையை, அதன் தாயிடம் கொண்டுபோய் சேர்ப்பதற்காக, ஒரு வாகனம் ஏற்பாடு செய்தனர்.. அதில், இந்த குட்டியானையை ஏற்றிக்கொண்டு கிளம்பினார்கள்.. கிட்டத்தட்ட 5 மணி நேர போராட்டத்திற்கு பிறகு, தாய் யானை கூட்டத்தில் இந்த குட்டியானையை சேர்த்தார்கள்.. குட்டியின் சப்தத்தை கேட்டதுமே, மொத்தம் 11 யானைகள் மொத்தமாக ஓடி வந்தனவாம்.. 11 யானைகள் ஒன்றாக வருவதை பார்த்து வனத்துறையினர் பயந்துவிட்டார்களாம்.
தும்பிக்கை: ஆனால், குட்டியின் தும்பிக்கையை பிடித்து, தாய் யானை தரதரவென இழுத்து சென்றதுமே, மற்ற யானைகளும் அமைதியாகி பின்னாடியே செல்ல ஆரம்பித்துவிட்டனவாம். அம்மாவை காணாமல் அதுவரை தவித்து கொண்டிருந்த குட்டியானை, தாயை பார்த்த குஷியில் துள்ளியது.. மகிழ்ச்சியுடன் அம்மாவிடம் சேர்ந்துகொண்டது..
இதற்கெல்லாம் முக்கிய உதவியாக இருந்தது 'ட்ரோன்' கேமராக்கள்தானாம்.. ட்ரோன் கேமரா இல்லாவிட்டால், தாய் யானையை கண்டுபிடித்திருக்கவே முடியாது என்கிறார்கள் வனத்துறையினர்.
குட்டி யானை: தாயிடம் குட்டியை சேர்த்துவிட்டாலும்கூட, வனத்துறையினர் இந்த யானை கூட்டத்தை, தொடர்ந்து கண்காணித்தபடியே இருக்கிறார்கள். தாயும் - சேயும் சவுக்கியமாக இருக்கிறார்களாம்.. நேற்றுகூட கண்காணிப்பில் ஈடுபட்டபோது, குட்டியானையை வீடியோ எடுத்தார்கள்..
தனியார் டீ எஸ்டேட் ஒன்றில், அம்மா யானையின் மடியில், அந்த குட்டி யானை படுத்து கொண்டிருந்தது.. நீண்ட நேரமாக, குட்டி யானை நன்றாக தூங்கியது.. நீண்ட நேரம் தாயின் மடியில் ஓய்வு எடுத்தது.. தாயை பிரிந்த குட்டி யானையை வனத்துறையினர் மீண்டும் தாயுடன் சேர்த்து வைத்ததுமில்லாமல், மடியில் படுத்து குட்டி யானை தூங்கும் வீடியோவையும் வனத்துறையினர் இணையத்தில் வெளியிட்டுள்ளனர்.
பரவசம்: அதை பார்த்த பலரும் பரவசமாகிவிட்டனர்.. அதுபோலவே தமிழ்நாடு, சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாஹு தன்னுடைய ட்விட்டரில் இந்த வீடியோவை பகிர்ந்துள்ளார்.

''ஒரு படம், கோடி வார்த்தைகள் மதிப்புடையதாக இருக்கிறது" என்று நெகிழ்ந்து கூறியிருக்கும் சுப்ரியா சாகு, மீட்கப்பட்ட குட்டி யானை, தாயுடன் இணைந்ததுடன், தாயின் கரங்களில் நிம்மதியாக தூங்குகிறது என்றும், ஆனைமலை புலிகள் காப்பகத்தில் வனத்துறை ஊழியர்கள் இந்த படத்தை எடுத்ததாகவும், யானை கூட்டத்தின் பாதுகாப்பை உறுதி செய்ய, அவர்கள் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதாகவும் சுப்ரியா சாகு தெரிவித்துள்ளார்.
நிம்மதி : வனத்துறையினர் எடுத்த இந்த வீடியோதான், நேற்றிலிருந்து இணையத்தை வட்டமடித்து கொண்டிருக்கிறது.. தாயின் அன்பையும், குட்டியின் பாசப்பிணைப்பையும் கண்டு இணையவாசிகள் பூரித்து கருத்துக்களை பதிவிட்டு கொண்டிருக்கிறார்கள்.. ஆனால், அந்த குட்டி யானையோ, உலகம் மறந்து, தாயின் தும்பிக்கையில், கனத்த நம்பிக்கையுடனும், கவலை மறந்தும், நிம்மதியாக தூங்கி கொண்டிருக்கிறது...!!
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications