கோவை: கன மழையால் பேரூரில் இரண்டு மாடி வீடு இடிந்து விழுந்து விபத்து - 2 பேர் மரணம்
கோவை: கனமழை காரணமாக கோவை பேரூரில் நேற்றிரவு இரண்டு மாடி வீடு இடிந்து விழுந்தது. இதில் வீட்டில் இருந்த அனைவரும் இடிபாடுகளில் சிக்கினர். ஆறுபேர் மீட்கப்பட்ட நிலையில் அதில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது. கோவை, நீலகிரி மாவட்டங்களில் மழை தீவிரமடைந்துள்ளது. நேற்றிரவு பெய்த கனமழையால் கோவை பேரூர் செட்டிவீதியில் உள்ள இரண்டு மாடி வீடு இடிந்து விழுந்தது.

இந்த வீடு கண்ணன் என்பவருக்கு சொந்தமானதாகும். இந்த வீட்டில் முதல் தளத்தில், கண்ணன் தனது மனைவி ஸ்வேதா, ஆறு வயது குழந்தை தன்வீர் மற்றும் அவரது தாய் வனஜா, தங்கை கவிதா ஆகியோருடன் வசித்து வந்தனர்.
தரை தளத்தில் ஒரு குடும்பம் வாடகைக்கு வசித்து வந்தது. நேற்றிரவு பெய்த கன மழையில் பலத்த சத்தத்துடன் வீடு இடிந்து விழுந்தது. இதில் அருகில் இருந்த ஓட்டு வீடும் பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் இடிபாடுகளில் சிக்கியிருந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த மாவட்ட ஆட்சியர் ராஜாமணி, மாநகர காவல்துறை ஆணையர் சுமித்சரண் மீட்பு பணிகளை துரிதப்படுத்தினர். இடிபாடுகளில் சிக்கியிருந்த ஆறு வயது குழந்தை தன்வீர் மற்றும் 68 வயதான வனஜா ஆகிய இருவரும் மீட்கப்பட்டனர். இதனையடுத்து ஸ்வேதா, கோபல், கவிதா உள்ளிட்டவர்கள் மீட்கப்பட்டனர். இடிபாடுகளில் சிக்கியிருந்த ஆறுபேர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில் ஸ்வேதா, கோபால் ஆகிய இருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி












Click it and Unblock the Notifications