ரெட் அலர்ட்.. மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு.. பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
கோவை: கோவைக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. தொடர் மழை பெய்து வரும் நிலையில், பில்லூர் அணை நிரம்பியுள்ளது. அணையின் பாதுகாப்பு கருதி விநாடிக்கு 16 ஆயிரம் கன அடி உபரி நீர் வெளியேற்றப்படுவதால் பவானி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. பாதுகாப்பு கருதி கரையோரப் பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கேரளா மாநிலத்தில் தென்மேற்குப் பருவமழை தொடங்கியுள்ளது. இதனால், பல்வேறு பகுதிகளில் கன மழை கொட்டித் தீர்த்து வருகிறது. கேரளா மற்றும் தமிழக எல்லைப் பகுதிகளான கோவை, நீலகிரி, நெல்லை, தென்காசி, குமரி, தேனி, திண்டுக்கல், திருப்பூர் மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் கடந்த 2 நாட்களாக மழை கொட்டி வருகிறது.

கோவை, நீலகிரிக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. கொட்டித் தீர்க்கும் மழையால் அணைகள், நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் உள்ள பில்லூர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான நீலகிரி மற்றும் கேரளத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பலத்த பெய்து வருகிறது. பருவ மழை தொடங்கியுள்ள நிலையில் அணைக்கான நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 100 அடி கொள்ளளவு கொண்ட பில்லூர் அணையின் நீர் மட்டம் நேற்று காலை 78 அடியாக இருந்தது.
இந்நிலையில், நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக ஒரே நாளில் அணையின் நீர்மட்டம் 8 அடி உயர்ந்து இன்று 25 ஆம் தேதி காலை 86 அடியாக உயர்ந்தது. தொடர் மழையால் அணையின் நீர் மட்டம் மீண்டும் கிடுகிடுவென உயரத் தொடங்கி இன்று நள்ளிரவு அணை அதன் முழு கொள்ளளவான 100 அடியை நெருங்கியது.
இதனால் அணையின் பாதுகாப்பு கருதி அதன் நீர்மட்டத்தை 97.5 அடியாக நிலை நிறுத்தி பராமரிக்கப்பட்டு வருகிறுத. அணைக்கு வரும் நீர் விநாடிக்கு 16 ஆயிரம் கன அடி நீர் அப்படியே உபரி நீராக பவானி ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இதனால், பவானி ஆற்றில் நீரின் வேகம் அதிகரித்துள்ளதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, பொதுமக்களின் பாதுகாப்பு கருதி பவானி ஆற்றங்கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஆற்றின் கரையோரப் பகுதியான மேட்டுப்பாளையம் மற்றும் சிறுமுகை பகுதி மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும், ஆற்றில் இறங்கி குளிக்கவோ, மீன் பிடிக்கவோ, பரிசல் மூலம் ஆற்றை கடக்கவோ முயற்சிக்க கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேட்டுப்பாளையம் வருவாய்த் துறை, காவல் துறை மற்றும் நகராட்சி நிர்வாகம் சார்பில் கண்காணிப்புப் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
-
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்! -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
யாருங்க இந்த ஐடியாலாம் தருவது? தவெக விஜய் கொடுத்த வாக்குறுதியில்.. இருக்கும் பெரிய ஓட்டை! -
'ஜனநாயகன்' பட லீக்கில் என்ன நடந்தது.. தமிழக காவல்துறை முழு விளக்கம் -
சாத்தூரில் நயினார் வாங்கிய காத்து.. பாஜக தேசிய தலைவரையே கூட்டி வந்தும் கூட்டம் இல்லை -
ஆட்டம் ஆரம்பம்.. முதல் அடி தங்கம், வெள்ளி விலை.. இந்தியாவில் விடியும் முன்பே ஷாக்!












Click it and Unblock the Notifications