கோவையில் ரூ. 100 கோடி ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு.. இந்து சமய அறநிலையத் துறை அதிரடி நடவடிக்கை
கோவை: கோவை மாவட்டம், உக்கடத்தில் உள்ள வரசித்தி விநாயகர் திருக்கோயிலுக்குச் சொந்தமான ரூ. 100 கோடி மதிப்பிலான சொத்துகளை இந்து சமய அறநிலையத் துறை ஆக்கிரமிப்பிலிருந்து மீட்டு நடவடிக்கை எடுத்துள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படியும், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு அறிவுறுத்தலின்படியும், அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களுக்குச் சொந்தமான சொத்துக்கள் ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. அந்த வகையில், டிசம்பர் 8 ஆம் தேதி கோயம்புத்தூர் மாவட்டம், உக்கடம் வரசித்தி விநாயகர் கோயிலுக்குச் சொந்தமான ரூ. 100 கோடி மதிப்பிலான சொத்துகள் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்டு கோயில் வசம் சுவாதீனம் பெறப்பட்டுள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டம், உக்கடம், ஒப்பணக்கார வீதியில் அமைந்துள்ள லட்சுமி நரசிம்ம சுவாமி கோயிலின் உபகோயிலான வரசித்தி விநாயகர் கோயிலுக்குச் சொந்தமான 80 சென்ட் நிலத்தில் 4 குடியிருப்புகள் மற்றும் 18 வணிக கடைகளை அமைத்து ஆக்கிரமிப்பு செய்திருந்தனர். கோயிலுக்குச் சொந்தமான நிலத்தில் சட்டவிரோதமாக ஆக்கிரமிப்பு செய்திருந்தவர்களை வெளியேற்றிட கோவை மண்டல இணை ஆணையர், 2015 ஆம் ஆண்டில் சட்டப்பிரிவு 78 இன் படி ஆக்கிரமிப்பினை அகற்றிட உத்தரவிடப்பட்டது.
கோயில் ஆக்கிரமிப்பு
இந்நிலையில், ஆக்கிரமிப்பாளர்கள் இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் மற்றும் துறையின் செயலாளர் ஆகியோரிடம் செய்திருந்த மேல்முறையீடுகளும் தள்ளுபடி செய்யப்பட்டன. 2018 ஆம் ஆண்டில் ஆக்கிரமிப்பாளர் சரவணமூர்த்தி மற்றும் சிலர், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கை நடத்த மனுதாரர்கள் முன்வராததால் LDITOST LIGOLD சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கை தள்ளுபடி செய்து கோயில் நிர்வாகம் ஆக்கிரமிப்பை அகற்றிட நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டது.
அதைத்தொடர்ந்து, இந்து சமய அறநிலையத் துறை சட்டப்பிரிவு 78 மற்றும் 79 இன் கீழ் தொடரப்பட்ட வழக்கு மற்றும் உயர்நீதிமன்ற பேராணை உத்தரவுகளின்படி, கோவை மண்டல இணை ஆணையர் ரமேஷ் உத்தரவின்படி, உதவி ஆணையர்கள் கைலாஷமூர்த்தி, ரத்தினாம்பாள் ஆகியோர் முன்னிலையில் காவல்துறை உதவியுடன் திருக்கோயிலுக்கு சொந்தமான 80 சென்ட் நிலம் ஆக்கிரமிப்பிலிருந்து அகற்றப்பட்டு கோயில் வசம் சுவாதீனம் பெறப்பட்டது. இதன் தற்போதைய சந்தை மதிப்பு ரூ. 100 கோடியாகும்.
1063 நிலங்கள் மீட்பு
இதுவரை இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகக் கட்டுப்பாட்டிலுள்ள 1,063 திருக்கோயில்களுக்கு சொந்தமான ரூ. 8,230.55 கோடி மதிப்பிலான 8,024.43 ஏக்கர் திருக்கோயில் சொத்துகள் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்டுள்ளன. இந்நிகழ்வின்போது, இந்து சமய அறநிலையத்துறை துணை ஆணையர்கள் விஜயலட்சுமி, செந்தில்குமார், காவல் துறை துணை ஆணையர் கார்த்திகேயன், உதவி ஆணையர் முருகேசன், தனி வட்டாட்சியர் (ஆலய நிலங்கள்) பரமேஸ்வரி, செயல் அலுவலர், ஆய்வாளர்கள் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் உடனிருந்தனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications