என் மகளை கொன்ற வினோத்தை நான் பாக்கணும்.. ஏன் வெட்டினேன்னு கேக்கணும்.. தாயின் குமுறல்!
ஆணவ கொலையால், மகள் உடலை வாங்க மறுத்து பெற்றோர் போராட்டம் நடத்தினர்
Recommended Video
கோவை: "என் மகளை கொன்ற வினோத்தை நான் பாக்கணும்.. ஏன் என் மகளை வெட்டினேன்னு நான் கேக்கணும்" என்று ஆணவக்கொலை விவகாரத்தில் மகளை பறிகொடுத்த தாய் கண்ணீர் விட்டு கூறியுள்ளார்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் கனகராஜ் என்பவர் அதே பகுதியில் வசிக்கும் தர்ஷினி ப்ரியா என்ற 17 வயது என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார்.
இருவரும் வேறு வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால், கனகராஜின் அண்ணன் வினோத் இதற்கு பலமான எதிர்ப்பு தெரிவித்தார்.

படுகொலை
இந்நிலையில் 2 தினங்களுக்கு முன்பு தம்பி கனகராஜை, வினோத் அரிவாளால் வெட்டி கொலை செய்தார். இதனை தடுக்க முயன்ற அவரது காதலி தர்ஷினி ப்ரியாவும் அரிவாளால் வெட்டினார்.

வினோத்
இதையடுத்து சரணடைந்த வினோத் மீது கொலை, கொலை முயற்சி, வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது. போலீசார் வினோத்தை கோவை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் கோவை சிறையில் அடைத்தனர்.

உயிரிழப்பு
அரிவாள் வெட்டில் படுகாயமடைந்த தர்ஷினி உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று அவர் உயிரிழந்தார். இதனால் ஆத்திரமடைந்த பெண்ணின் குடும்பத்தினர், இந்த சம்பவத்தில் தொடர்புடைய கந்தவேலு, சின்ராஜ் உள்பட 3 பேரை கைது செய்ய வேண்டும் என்று சொல்லி, தர்ஷினியின் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கண்ணீர்
அப்போது பேசிய பெண்ணின் தாய் அமுதா, "என் மகளை கொன்ற வினோத்தை நான் பாக்கணும்.. ஏன் என் மகளை வெட்டினேன்னு நான் கேக்கணும். இவங்களுக்கு தூக்கு தண்டனை இல்லேன்னாலும் பரவாயில்லை... ஆயுசு முழுக்க ஜெயில்லயே இருக்கணும்" என்று கண்ணீர் விட்டு கூறினார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications