ரிசர்வ் வங்கிக்கே ட்விஸ்ட்.. கோவையில் ஒரே பொய்யில் கோடிகளை சம்பாதித்த கிருஷ்ணகிரி தொழில் அதிபர்
கோவை: சதுரங்க வேட்டை படத்தில் இரிடியம், மண்ணுளி பாம்பு போன்ற விஷயங்களை கூறி ஏமாற்றுவார்கள்.. அப்படியான மோசடி தான் கோவையில் தொழில் அதிபர் உள்பட பல்வேறு நபர்களை ஏமாற்றி உள்ளார். சுமார் 5.50 கோடி மோசடி நடந்துள்ளது. இதில் அறிய வேண்டிய முக்கியமான விஷயம் என்னவென்றால், வழக்கமான மோசடி போல் அல்லாமல், ரிசர்வ் வங்கி பெயரிலேயே விபூதி அடித்துள்ளார்கள்.ரிசர்வ் வங்கியின் அதிகாரி போல பேசி, முதலீடு செய்யலாம் என்று கூறி நம்ப வைத்து கோடிகளில் ஏமாற்றி உள்ளார்கள். ரிசர்வ் வங்கி மூலம் இரிடியம் விற்பதாகக் கூறி கோவை தொழில் அதிபரை ஏமாற்றியது எப்படி என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்
பிரபல ஒளிப்பதிவாளர் நட்டி ஹீரோவாக நடித்த படம் சதுரங்கவேட்டை.அதில் பல்வேறு நபர்களை நட்டி ஏமாற்றுவது தான் கதையே. மக்கள் எப்படி எல்லாம் ஏமாறுகிறார்கள் என்பதை சதுரங்கவேட்டை படம் அப்பட்டமாக வெளிச்சம் போட்டு காட்டும். அதில் வரும் மோசடிகள் எல்லாம் ஏற்கனவே மக்கள் ஏமாந்த உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டுஇருக்கும். அந்த மோசடிகளை படத்தில் பார்த்தவர்கள் ஏமாற மாட்டார்கள். அப்படியான விழிப்புணர்வு படத்தில் இருக்கும்.

ஏமாறுபவர்கள் இருக்கும் வரை
ஆனால் அந்த படத்தில் ஒரு உண்மையை கூறுவார்கள். ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றிக்கொண்டுதான் இருப்பார்கள் என்று கூறியிருப்பார்கள். அது உண்மை என்பதாகவே இன்றும் இருக்கிறது. சதுரங்க வேட்டை படத்தில் வரும் மோசடிகள் தான்.. ஆனால் ஏன் எதற்கு எப்படி என்று கேள்விகள் எழுப்பாமல், பகுத்தறிவுடன் சிந்திக்காமல் மக்கள் ஏமாறுகிறார்கள். அவர்களை ஏமாற்ற சதுரங்க வேட்டை பாணி தான்..ஆனால் சின்னதாய் திருப்பி போட்டு ஏமாற்றி கோடிகளைசம்பாதிக்கிறார்கள். அப்படி நடந்த ஒரு மோசடி பற்றி பார்ப்போம்.
கோவையில் நடந்துள்ளது
கோவை என்பது தொழில்களின் நகரம். சிறு குறு தொழில் அதிபர்கள் அதிகம் உள்ள ஊர் என்றால் அது கோவை தான்.இங்கு தொழில் அதிபர் திருமூர்த்தி (வயது 50) உட்பட பல்வேறு நபர்களிடம் ரிசர்வ் வங்கி மூலம் இரிடியம் விற்பதாகக் கூறி ரூ.5.5 கோடி மோசடி நடந்திருக்கிறது. இது தொடர்பாக கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர்.
ஆறு பேர் கைது
இந்த மோசடி தொடர்பாக பீகாரைச் சேர்ந்த சோனு குமார் துபே (34), ஆஷிஷ் குமார் (25), கோபால் சேகர் (38), தெலுங்கானாவைச் சேர்ந்த ஜார்ஜ் தாமஸ் (53), ஜார்க்கண்ட்டைச் சேர்ந்த குல்ஷன் தரத் (41) பெங்களூருவைச் சேர்ந்த சீனிவாசன் (43) ஆகிய 6 பேரை போலீசார் அண்மையில் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டிருந்தன
ரிசர்வ் வங்கியில் இரிடியம்
கைதானவர்கள் கோவையைச் சேர்ந்த தொழில் அதிபர் திருமூர்த்தியை ஏமாற்றியது எப்படி என்பது குறித்து போலீசாரிடம் விளக்கம் அளித்துள்ளனர். அந்த தகவல்களை போலீசார் கூறினார்கள். அவற்றை இப்போது பார்ப்போம். கிருஷ்ணகிரியைச் சேர்ந்த தொழில் அதிபரான செந்தில்குமார் என்பவர், கோவையைச் சேர்ந்த தொழில் அதிபரான திருமூர்த்திக்கு அறிமுகம் ஆகியிருக்கிறார். செந்தில்குமார் கோவை தொழில் அதிபர் திருமூர்த்தியிடம் நான் ரிசர்வ் வங்கி மூலம் இரிடியத்தில் முதலீடு செய்தேன்.. அதை வெளிநாடுகளில் விற்பனை செய்தேன். அதில் எனக்கு பலமடங்கு லாபம் கிடைத்திருக்கிறது.
பல மடங்கு லாபம்
இதற்காக குறிப்பிட்ட தொகையை கொடுத்து ரிசர்வ் வங்கியில் இரிடியத்தில் முதலீடு செய்தால் போதும். இரிடியத்துக்கு வெளிநாட்டில் நல்ல மதிப்பு உள்ளது. சில மாதங்களில் முதலீடு செய்த பணம் பலமடங்காக மாறிவிடும் என்று தெரிவித்தாராம். முதலில் திருமூர்த்தி அதை சுத்தமாக நம்பவில்லை. இதையடுத்து அவரிடம் குல்ஷன் தரத் என்பவர் பேசியிருக்கிறார். அவர் ரிசர்வ் வங்கியில் வெளிநாட்டு நாணயத்துறை பிரிவில் அதிகாரியாக பணியாற்றி வருவதாக கூறியுள்ளார். ரிசர்வ் வங்கியில் இரிடியத்தில் முதலீடு செய்தால் கண்டிப்பாக அதிக லாபம் கிடைக்கும் என்று தெரிவித்தாராம்
டெல்லி சென்றுள்ளார்
ஆனாலும் அதை அவர் நம்பவில்லை. இதையடுத்து அவர் திருமூர்த்தியை டெல்லிக்கு வரவழைத்து உள்ளார். பின்னர் அவரை ஒரு அலுவலகத்துக்கு அழைத்துச்சென்று, இதுதான் எனது அலுவலகம் என்று கூறினாராம். அத்துடன் ரிசர்வ் வங்கியில் பணியாற்றுவது போன்ற அடையாள அட்டையையும் காட்டி உள்ளார்.
ரிசர்வ் வங்கி முத்திரை
நேரில் சென்று பார்த்த பின்னர் அவருக்கு நம்பிக்கை ஏற்பட்டதாம். இதனால் முதலில் ரூ.10 லட்சம் முதலீடு செய்து உள்ளார். இதற்காக அவரிடம் பயோ மெட்ரிக் மூலம் ரேகைகளை சேகரிப்பது உள்ளிட்ட ஆவணங்களை பெற்றுள்ளார்கள். அத்துடன் அவருக்கு ரிசர்வ் வங்கியில் இரிடியம் மீது ரூ.10 லட்சத்துக்கு முதலீடு செய்ததற்காக போலியான ரசீதும் கொடுத்துள்ளார்கள். அதில் ரிசர்வ் வங்கி முத்திரையும் இடம்பெற்று இருந்தது. இதனால் அவருக்கு சந்தேகம் ஏற்படவில்லை.
பணம் பல மடங்கு வந்துள்ளது
பின்னர் சில நாட்கள் கழித்து திருமூர்த்தியை தொடர்பு கொண்ட குல்ஷன் தரத், நீங்கள் முதலீடு செய்த பணம் பல மடங்காக மாறிவிட்டது. அதை நீங்கள் உடனடியாக பெற்றுக்கொள்ளலாம் என்று கூறினாராம். வெளிநாட்டில் இருந்து பணம் வருவதால் செயலாக்க கட்டணம் உள்ளிட்டவை செலுத்த வேண்டும். அதை உடனடியாக செலுத்துங்கள் என்று கூறி உள்ளார். அதை நம்பிய அவர் பல்வேறு தவணைகளில் ரூ.40 லட்சம் செலுத்தி உள்ளார். அதன் பின்னர் அவருக்கு அந்த பணத்தை திரும்ப கொடுக்காமல் காலம் கடத்தி வந்துள்ளார்.
ரிசர்வ் வங்கி
இதனால் சந்தேகம் அடைந்த திருமூர்த்தி, இது தொடர்பாக தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் தகவல் சேகரித்தார். அப்போதுதான் அவருக்கு அது மோசடி என்பதும், ரிசர்வ் வங்கி அதிகாரி போன்று நடித்து தன்னிடம் ரூ.50 லட்சம் மோசடியில் ஈடுபட்டதும் திருமூர்த்திக்கு தெரியவந்துள்ளது. உடனே அவர் இது குறித்து சென்னை சி.பி.சி.ஐ.டி. போலீசில் புகார் செய்தார். கிருஷ்ணகிரியைச் சேர்ந்த தொழில் அதிபரான செந்தில்குமார் இதுபோன்று பலரிடம் மோசடி செய்ததும் அவருக்கு தெரியவந்தது.
கிருஷ்ணகிரிக்கு மாற்றம்
எனவே இந்த புகார் கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு மாற்றப்பட்டது. அதன்பேரில்தான் சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்து 6 பேரை கைது செய்து உள்ளனர். எனவே இதுபோன்று யாராவது கூறி பணம் முதலீடு செய்ய சொன்னால் முதலீடு செய்யக்கூடாது என்று போலீசார் எச்சரித்துள்ளனர்.
-
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க!












Click it and Unblock the Notifications