சில்லு சில்லாக உடைந்த பிளான்.. "கருப்பு ஆட்டுக்கு"ஆப்பு வைத்த ஸ்டாலின்.. இதை நோட் பண்ணீங்களா?
கோவை: கோயம்புத்தூரில் நடந்த திமுக முப்பெரும் விழாவில் முதல்வர் ஸ்டாலின் முக்கியமான விஷயம் ஒன்றை அடித்து கூறி இருக்கிறார்.
கோவையில் திமுகவின் முப்பெரும் விழா நேற்று நடந்தது. இந்த விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின், உடன்பிறப்புகளாலும், கொள்கைத் தோழமைக் கட்சிகளாலும் தான் இந்த வெற்றி சாத்தியமானது. உடன்பிறப்புகளுக்கும் - தமிழ்நாட்டு மக்களுக்கும் இந்த வெற்றியை காணிக்கை ஆக்குகிறேன். தேர்தல் பிரச்சாரத்தில் சிறுபான்மையினருக்கு எதிராக வெறுப்பு பேச்சுக்களை பேசினார்கள், தமிழர்கள் குறித்து அவதூறு பரப்பினார்கள்; வாட்ஸ் ஆப்பில் பொய்ச் செய்திகளை பரப்பினார்கள்.

இவ்வளவும் செய்தும் பாஜக பெரும்பான்மை பெறவில்லை. இப்போது அவர்கள் பெற்றிருப்பது வெற்றியல்ல; தோல்விதான். பாஜகவிற்கு அதிக பெரும்பான்மை இருந்தபோதே, வாதங்களால் தமிழ்நாட்டை திரும்பிப் பார்க்க வைத்தவர்கள் நமது எம்.பிக்கள். இப்போது, மக்களுக்கான நமது குரல் நாடாளுமன்றத்தில் இன்னும் வலுவாக ஒலிக்கப் போகிறது.
நாடாளுமன்ற உறுப்பினர்களே... நாங்களும், தமிழ்நாட்டு மக்களும் உங்கள் தோளில் ஏற்றி வைத்திருக்கும் இந்தக் கடமைகளுக்காக - தமிழ்நாட்டு உரிமைகளுக்காக, நாடாளுமன்றத்தில் உரக்கப் பேசுங்கள். பலம் பொருந்திய எம்.பி.க்கள் சேர்ந்து, பலவீனமான மைனாரிட்டி பாஜக அரசை - பாசிச பாதையில் செல்லாமல் தடுங்கள்.
ஸ்டாலின் பேச்சு: ஒற்றுமை உணர்வுடன் - கொள்கை திறத்துடன் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் செயல்பட வேண்டும். நம்முடைய உறுப்பினர்கள்தான் பா.ஜ.க.வை கொள்கை - கோட்பாடுகள் ரீதியாக அம்பலப்படுத்தினார்கள். கொள்கைரீதியாக அவர்களுடைய வகுப்புவாதத்தை, எதேச்சாதிகாரத்தை, பாசிசத்தை விமர்சிக்கின்ற பாணியை இந்திய நாடாளுமன்றத்தில் தொடங்கி வைத்தவர்கள் நம்முடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள்தான்;
சமூகநீதிக்காக இந்திய நாடாளுமன்றத்தில் அதிகமாக உரிமைக்குரல் எழுப்பியது மூலமாக, இந்திய அரசியல் செல்ல வேண்டிய பாதையைத் தமிழ்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் போட்டுக் கொடுத்தார்கள். எட்டு முறை தமிழ்நாட்டிற்கு வந்து பிரதமர் கட்டமைத்த பிம்பத்தை, அருமைச் சகோதரர் ராகுல் காந்தி ஒரே ஒரு ஸ்வீட் பாக்ஸ் கொடுத்து 'Close' செய்துவிட்டார்! அன்றைக்கு அவர் வழங்கிய இனிப்பு நம்முடைய எதிர்க்கட்சியினரின் கணிப்புகளைப் பொய்யாக்கியது!
இந்தியா கூட்டணித் தலைவர்கள் அனைவருக்கும் நடைபெறும் பாராட்டு விழா இது! இந்தியா கூட்டணி தொண்டர்கள் அனைவருக்கும் நடைபெறும் பாராட்டு விழா இது, என்று ஸ்டாலின் பேசினார்.
முக்கியமான விஷயம்: இந்த பேச்சில் திமுக - காங்கிரஸ் கூட்டணியை முதல்வர் ஸ்டாலின் உறுதி செய்துள்ளார். தமிழ்நாட்டில் சிலர் காங்கிரஸ் - திமுக கூட்டணி உடையும் என்று வாதங்கள் வைத்த நிலையில் ஸ்டாலின் ராகுலை பாராட்டி திமுக - காங்கிரஸ் இடையிலான உறவை ஸ்டாலின் உறுதி செய்துள்ளார்.
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை சமீபத்தில் காங்கிரஸ் பொதுக்குழு கூட்டத்தில் பேசுகையில் , நாம் சார்ந்து இருக்கப் போகிறோமா? சுயமாக இருக்கப் போகிறோமா? இன்னும் எத்தனை காலம் சார்ந்தே இருக்கப் போகிறோம்? நமது இயக்கத்திற்கு வரலாறு உண்டு; எவ்வளவு காலம் சார்ந்திருப்போம் என்பதற்கு விடை உங்களிடம் உள்ளது
'நாம் எந்த திசையில் செல்லப் போகிறோம்? எவ்வளவு காலம் பிறரை சார்ந்திருக்க முடியும்?' தனியாக போட்டியிடுவது பெரிய குற்றம் இல்லை; தமிழகத்தில் காங்கிரஸ் தனித்து போட்டியிட்டு 20 சதவீதம் வாக்குகளை பெற்றது; கட்சி கட்டமைப்பை வலிமைப்படுத்த வேண்டும், என்று கூறி இருந்தார்.
பதிலடி: இதற்கு பதிலடி கொடுத்த ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், தமிழகத்தில் இன்று 40-க்கு 40 வென்றிருக்கிறோம் என்றால் அதற்கு காரணம் திமுக.. ஆசை இருக்கலாம் ஆனால் பேராசை இருக்கக் கூடாது.. எதிரியை ஒழிக்காமல், எப்படி அந்த இடத்தை பிடிப்பீர்கள் என்று யோசியுங்கள்; ஆசை இருக்கலாம், பேராசைக் கூடாது ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் பதிலடி கொடுத்தார்.
கருப்பு ஆடு: காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையின் சமீபத்திய பேச்சுக்கள் திமுகவினர் சிலரை அப்செட் ஆக்கி உள்ளதாம். அதன்படி காங்கிரசில் கருப்பு ஆடு இருப்பதாக திமுகவினர் சிலர் நம்புகின்றனர்.
செல்வப்பெருந்தகை: அதன்பின் செல்வப்பெருந்தகையும் பின்னர் காங்கிரஸ்- திமுக கூட்டணியை உறுதி செய்யும் விதமாக பேசினார்.
திமுக - காங்கிரஸ் கூட்டணியை முறித்து அதிமுகவுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்பது தான் காங்கிரசில் சில கருப்பு ஆடுகளுக்கு கொடுக்கப்பட்டுள்ள அசைன்மெண்ட். கூட்டணியை உரசல் இல்லாமல் 5 ஆண்டுகளுக்கும் மேலாக கொண்டு செல்லும் முதலமைச்சரை இழிவுபடுத்தும் விதமாக இப்படி செய்ய கூடாது.
காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையை மறைமுகமாக சிலர் வழி நடத்துகிறார்கள். அவர் திமுக கூட்டணியை உடைக்க பார்க்க கூடாது என்று திமுகவினர் குமுறி உள்ளனர். இப்படிப்பட்ட நிலையில்தான் திமுக - காங்கிரஸ் கூட்டணியை உறுதி செய்யும் விதமாக ஸ்டாலின் பேசி உள்ளார்.
-
ராஜ்யசபா சீட்.. ஓகே சொன்ன விஜய்! 3 மாதங்களில் 2 எம்பிக்கள்! கணக்கு போட்டு தூக்கிய காங்கிரஸ்! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
திமுக தொண்டர்களுக்கு டபுள் ட்ரீட்.. கருணாநிதியின் 103வது பிறந்தநாள் விழாவில் ஸ்டாலின் மெகா விழா -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா -
இந்த லட்சணத்துல உங்களுக்கு பொ.செ பதவி வேற வேணுமா? தேர்தல் தோல்விக்குப் பின் ஸ்டாலின் ஆவேசம் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
Ilaiyaraja Birthday: ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! இளையராஜாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து












Click it and Unblock the Notifications