சாணக்கியர்! சிறையில் இருந்தே கோவையில் சொல்லியடித்த செந்தில் பாலாஜி! அண்ணாமலையை வீழ்த்தியது எப்படி?
கோயம்புத்தூர்: 2024 லோக்சபா தேர்தலில் வாக்கு எண்ணிக்கை இன்று நடத்தப்பட்டு முடிவுகள் வெளியாகி வருகின்றன. இங்கே மாஜி அமைச்சர் செந்தில் பாலாஜி சிறையில் இருந்தபடியே பல்வேறு தேர்தல் பணிகளை செய்தது குறிப்பிடத்தக்கது.
கோவை லோக்சபா தொகுதி மிக கடுமையான போட்டி உள்ள தொகுதி ஆகும். . கோவை தொகுதி பாஜக வேட்பாளராக அண்ணாமலை களமிறக்கப்பட்டார். ஏற்கனவே கோவை லோக்சபா தொகுதி வேட்பாளராக திமுக சார்பாக கணபதி ராஜ்குமார் களமிறக்கப்பட்டார். பலரின் பெயர்கள் இதற்காக சுற்றி வந்த நிலையில் சர்ப்ரைஸாக கணபதி ராஜ்குமார் போட்டியிடுகிறார்.

அதிமுகவின் கோவை நாடாளுமன்ற வேட்பாளராக சிங்கை ராமச்சந்திரன் போட்டியிடுகிறார். ராமச்சந்திரன் கோவிந்தராசு என்றும் அழைக்கப்படும் சிங்கை ஜி. ராமச்சந்திரன் அந்த கட்சியின் சர்ப்ரைஸாக களமிறக்கப்பட்டார்.
கடும் போட்டி: இங்கே கடும் போட்டி நிலவிய நிலையில் திமுக வேட்பாளர் கணபதி 341769 வாக்குகள் பெற்றுள்ளார். அண்ணாமலை 271994 வாக்குகள் பெற்று 69775 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைய உள்ளார். 200844 வாக்குகள் பெற்று சிங்கை மூன்றாம் இடம் பிடித்துள்ளார்.
அண்ணாமலை: பாஜக கோயம்புத்தூர் வேட்பாளர் அண்ணாமலை லோக்சபா தேர்தலின் போது செய்தியாளர் சந்திப்பு ஒன்றில், ஜெயிலில் இருந்து கொண்டு ஒருவர் கதை, திரைக்கதை வசனம் எழுதுகிறார். அவர் எழுதிய கதையைதான் இங்கு வந்திருக்கும் அமைச்சர்கள் பேசி வருகிறார்கள். சிறையில் இருந்தபடியே செல்போனில் அமைச்சர்களுடன் பேசி வருகிறார் செந்தில் பாலாஜி. சிறையில் இருந்து கொண்டே தங்கம், பணம் கொடுத்து மக்களின் வாக்குகளை பெற்றுவிடலாம் என நினைக்கிறார்கள்.
ஆனால் அது இந்த முறை நடக்காது. எவ்வளவு தங்க சுரங்கத்தையே திமுகவினர் தோண்டி எடுத்து கொண்டு வந்தாலும் மக்கள் அதற்கெல்லாம் அசரமாட்டார்கள். அவர்கள் தெளிவாக இருக்கிறார்கள். ஜூன் 4ஆம் தேதி சாமானியனின் குரல் மூலம் யார் வெல்வார்கள் என தெரியவரும். எங்களுக்கு 60 சதவீத வாக்குகள் கிடைக்கும். ஆனால் நான் வாக்குக்கு பணம் கொடுக்க மாட்டேன். இவ்வாறு அண்ணாமலை தெரிவித்தார்.
அரசியல் வட்டார தகவல்; அண்ணாமலையின் இந்த பேட்டி குறித்து அரசியல் வட்டாரத்தில் இருந்து நமக்கு வந்த தகவலில், அண்ணாமலை வேண்டுமென்றால் செந்தில் பாலாஜிக்கு எதிராக சிறை துறையில் புகார், தேர்தல் ஆணையத்தில் புகாரை கொடுக்கட்டும் . செந்தில் பாலாஜி பற்றி பேசும் அண்ணாமலை அதை புகாராக கொடுக்கட்டும்.. செந்தில் பாலாஜி இன்னும் ஒரு போர்ஸ் ஆக கோவை கரூரில் இருக்கிறார்.
அதனால் அண்ணாமலை இப்படி பேசுகிறார். செந்தில் பாலாஜி சிறையில் இருந்து ஐடியா கொடுத்தால் அதில் என்ன தவறு. இதை எல்லாம் பார்த்தால் அண்ணாமலை செந்தில் பாலாஜிக்கு பயப்படுகிறார் என்று தானே அர்த்தம். செந்தில் பாலாஜிக்கு பயந்துதான் அவரை உள்ளே போட்டுள்ளீர்கள் என்று அர்த்தம். ஏன் பயப்படுகிறீர்கள்,
செந்தில் பாலாஜி திமுகவிற்காக பாடுபட்டுள்ளார். கட்சியை வளர்த்துள்ளார். அங்கே கட்சியை முன்னேற்றி உள்ளார். அவர் இருக்கிற கட்சியில் நேர்மையாக இருக்கிறார். அந்த கட்சிக்காக உழைக்கிறார். தலைமையை அவர் சிறப்பாக கவனிக்கிறார் என்று திமுக வட்டாரத்தினர் நம்மிடம் பேசி உள்ளனர்.
செந்தில் பாலாஜி சிறையில் இருந்தபடியே தேர்தலில் என்னென்ன செய்ய வேண்டும், எப்படி யுகங்களை வகுக்க, வார்டு வாரியாக எப்படி பணிகளை செய்ய வேண்டும் என்று கோவையிலும் கரூரிலும் பாடம் எடுத்து இருக்கிறார் என்று திமுக வட்டாரத்தினர் தெரிவிக்கின்றனர். அவர் அங்கே செய்த பணிகளே திமுக வெற்றிக்கு முக்கிய காரணம் என்கிறார்கள்.
-
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில்












Click it and Unblock the Notifications