துடியலூருக்கு எப்படி போய் பிடிச்சீங்க? மூவரும் குற்றவாளிகளா? ஏன் யாருக்குமே காட்டல: கோவையில் வளர்மதி

Subscribe to Oneindia Tamil

கோவை: கோவையில் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், சுட்டுப் பிடிக்கப்பட்டவர்கள் உண்மை குற்றவாளிகளா? போலி குற்றவாளிகளா? 3 பேரையும் எப்படி பிடித்தார்கள்? துடியலூருக்கு போய் எப்படி பிடித்தார்கள்? அவர்களை யாருக்குமே காட்டவே இல்லையே? இதை தமிழக போலீசார் நிரூபிக்க வேண்டும் என்று அதிமுக மூத்த தலைவர் வளர்மதி காட்டமாக கூறியிருக்கிறார்.

கோவையில் மாணவி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து அதிமுக மகளிர் அணி சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிரடியாக அறிவித்திருந்தார்.

Coimbatore Thudiyalur Kovai

அதன்படி அதிமுக ஒருங்கிணைந்த கோவை மாவட்ட மகளிர் அணி சார்பில் இன்று கோவை செஞ்சிலுவை சங்கம் அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

கல்லூரி மாணவிக்கு நிகழ்ந்த பாலியல் வன்கொடுமையை கண்டித்தும், சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க தவறிய திமுக ஆட்சியை கண்டித்தும் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு அதிமுக மகளிர் அணி செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பா.வளர்மதி தலைமை தாங்கினார்.

துடியலூரில் எப்படி பிடிச்சீங்க?

அப்போது அவர் பேசும்போது, "கோவையில் கல்லூரி மாணவி பலாத்காரம் செய்யப்பட்டிருக்கிறார்.. அவரை பலாத்காரம் செய்தவர்கள் முள்புதரில் தூக்கி வீசியிருக்கிறார்கள்.. அப்போது அந்த பெண், "காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள்" என்று கதறியிருக்கிறார்.. ஆனாலும் அவர் குரல் யாருக்கும் கேட்கவில்லையா? அவர் கதறியும் வக்கிர புத்தி உள்ள அந்த கும்பல் அவரை விடாமல் சீரழித்துள்ளது.

இந்த சம்பவத்தை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமை நிலைய செயலாளர் வேலுமணி ஆகியோர் கண்டித்திருக்கிறார்கள்.. இந்த சம்பவத்தில் குற்றவாளிகளை கைது செய்ய கோரி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்த நிலையில், அதன்படியே தற்போது ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

யாருக்குமே காட்டவில்லை

இந்த சம்பவத்தில், துடியலூரில் 3 குற்றவாளிகளை சுட்டுப் பிடித்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். ஆனால், அவர்களை யாருக்குமே காட்டவில்லை. அவர்கள் உண்மை குற்றவாளிகளா? அல்லது போலி குற்றவாளிகளா? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.. எனவே, பாதிக்கப்பட்ட பெண் மூலம், போலீஸ் ஸ்டேஷனில் வைத்து அந்த குற்றவாளிகளை அடையாளம் காண செய்ய வேண்டும்.

பொள்ளாச்சி சம்பவத்தில் கவர்னரை சந்தித்து மனு கொடுத்த கனிமொழி எம்பி, இந்த சம்பவம் குறித்து எதுவுமே சொல்லவில்லை.. அதேபோல கம்யூனிஸ்ட் மற்றும் திமுக கூட்டணி கட்சிகள் யாருமே கண்டனம் தெரிவிக்கவில்லை.

ஸ்டாலின் போலீஸ்

எம்ஜிஆர், ஜெயலலிதா, எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் ஆட்சியில் இருந்த போலீசார் இப்போது கிடையாது.. இப்போது இருப்பது ஸ்டாலின் போலீஸ் தான்.. இதுவரை இந்த ஆட்சியில் மட்டுமே 4,150 குழந்தைகள் முதல் பெண்கள் வரை பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

கோவை மாநகரம் தொழில் நகரம் என்பதால்தான், இங்குள்ள ஏர்போர்ட்டிற்கு ஏராளமானோர் வந்து செல்கிறார்கள்.. அப்படிப்பட்ட விமான நிலையத்தின் அருகிலேயே இந்த சம்பவம் நடந்திருக்கிறது.. இதில் உண்மை குற்றவாளிகளை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டார்.

தப்பிச்சரலாம்னு நினைக்காதீங்க

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய வளர்மதி, அதே கேள்வியை மீண்டும் எழுப்பினார்.. "அந்த மூன்று பேரை எப்படி அடையாளம் கண்டீர்கள்? அதுவும் துடியலூருக்கு போய் எப்படி உடனே பிடித்தீர்கள்? பாதிக்கப்பட்ட பெண் மயக்க நிலையில் உள்ளபோது எப்படி குற்றவாளியை கைது செய்தீர்கள்? யாரையோ பிடித்துவிட்டு, இதில் தப்பித்து விடலாம் என்று மட்டும் நினைக்காதீர்கள்.

60 வயது பாட்டிக்கு பெப்பர் ஸ்ப்ரே கொடுக்க வேண்டிய நிலைமையில்தான் இந்த தமிழகம் இப்போது உள்ளது. அதிமுக சார்பாக மகளிருக்கு பல்வேறு விழிப்புணர்வுகளை கொடுத்து வருகிறோம்" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+