கோவை சாலைகளில் வந்த திடீர் மாற்றம்.. தட்டி தூக்கும் போலீஸ்! வெளியே போனால் இதை மட்டும் மறக்காதீங்க!

Subscribe to Oneindia Tamil

கோவை: நமது நாட்டில் சாலை விபத்துகள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், கோவை போலீசார் இப்போது அதிரடி நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளது. இதனால் கோவை போக்குவரத்தே பாதுகாப்பானதாக மாறப் போகிறது.

இந்தியாவில் சாலை விபத்துகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. கவனக்குறைவாக வாகனம் ஓட்டுவது, குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவது, சாலை விதிகளை முறையாக பின்பற்றாமல் இருப்பதே இதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது.

ஒவ்வொரு ஆண்டும் நமது நாட்டில் 1.5 லட்சம் பேர் விபத்தால் உயிரிழக்கிறார்கள். அதாவது ஒவ்வொரு நாளும் சராசரியாக 1130 விபத்துக்களில் 422 பேர் உயிரிழக்கின்றனர். ஒவ்வொரு மணி நேரம் 47 விபத்துகளில் 18 பேர் உயிரிழக்கிறார்கள்.

விபத்துகள்: சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளை குறைக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக, தமிழ்நாடு அரசு கொண்டு வந்த நம்மை காக்கும் 48 திட்டத்தின் மூலம் உரிய நேரத்தில் பலருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதன் மூலம் பலருக்கு உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளும் கணிசமாக குறைந்தே இருக்கிறது.

 How people are responding for Pillion riders Helmet rule in Kovai

இது ஒரு பக்கம் என்றால் டூ வீலரில் ஓட்டுபவர் மற்றும் பின்னால் அமர்ந்து செல்வோர் என இருவருமே ஹெல்மேட் போட வேண்டும் என்பதும் கட்டாயமாக்கப்பட்டு வருகிறது. முதலில் சென்னையில் இந்த விதி சில காலத்திற்கு முன்பு அமலுக்கு வந்தது. இதற்கிடையே இப்போது கோவையிலும் இதேபோன்ற விதியை கொண்டு வந்துள்ளனர். நேற்று 26ஆம் தேதி முதல் டூ வீலரில் பயணிக்கும் இருவருக்கும் ஹெல்மேட் கட்டாயம் என அறிவிக்கப்பட்டது.

வழக்கு இல்லை: ஹெல்மேட் அணியாமல் வருபவோரிடம் மோட்டர் வாகன சட்டப்படி 1000 ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. அதன்படி முதல் நாளான நேற்று பல இடங்களில் போலீசார் சோதனை செய்தனர், இருப்பினும், முதல் நாள் என்பதால் பெரும்பாலான இடங்களில் போலீசார் வழக்குப் பதிவு செய்யவில்லை.

ஒவ்வொரு சந்திப்பிலும் ஹெல்மெட் அணியாமல் சிக்கும் நபர்களிடம் ஹெல்மெட்டின் அவசியத்தை போலீசார் எடுத்துரைத்தனர். போலீசாரிடம் பலரும் தங்களுக்கு இந்த புது ரூல்ஸ் பற்றி தெரியாது என்றே கூறியுள்ளனர். இன்னும் சிலர் குறைந்த காலஅவகாசம் மட்டுமே இருந்ததால் ஹெல்மேட் வாங்க முடியவில்லை என தெரிவித்துள்ளனர். அவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பினர்.

எதனால் நடவடிக்கை: பள்ளி மாணவர்களை அழைத்து வரும் போது, அவர்களுக்கும் ஹெல்மேட் கட்டாயமா என பலருக்கும் கேள்வி எழுந்தது. யார் வந்தாலும் அவர்களின் பாதுகாப்பிற்கே ஹெல்மேட் அணிய சொல்வதால் அனைவரும் அணிய வேண்டும் என தெரிவித்தனர். சுப்ரீம் கோர்ட் நியமித்த சாலைப் பாதுகாப்புக் குழு அளித்த பரிந்துரையின் அடிப்படையிலேயே பின்னால் அமர்ந்து செல்வோருக்கும் ஹெல்மெட் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்..

முதல் நாளில் சில இடங்களில் மட்டுமே அபராதம் விதிக்கப்பட்டுள்ளது, ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டியதாக 300 பேரிடம் இருந்து, பின்னால் அமர்ந்து இருப்போர் ஹெல்மேட் அணியவில்லை என 180 பேரிடம் இருந்து என மொத்தம் 3 லட்ச ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. சாலை விபத்துக்களால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், வரும் நாட்களில் கோவையில் இருவரும் ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற விதியை கடுமையாக அமல்படுத்த மாநகர காவல்துறை முடிவு செய்துள்ளது.

அதிரடியில் இறங்கிய போலீஸ்: இதற்காக தானியங்கி முறையில் நம்பர் பிளேட்களை அடையாளம் காணும் ஏழு கேமராக்களை கோவை போலீசார் முக்கிய இடங்களில் வைத்துள்ளனர். இவை இணையம் மூலம் இணைக்கப்பட்டிருக்கும். கேமராக்களால் தானாகவே விதிமீறல்களைக் கண்டறிய முடியும்.. இருப்பினும் அவை சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்தில் உறுதி செய்யப்பட்ட பிறகே சலான் வழங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+