என் பொண்ணு இறந்தது எப்படி.. சொல்லுங்க சார்? ஈஷாவில் யோகா பயிற்சி பெற்ற சுபஸ்ரீயின் தாய் கண்ணீர்
கோவை: ஜக்கி வாசுதேவ் நடத்தி வரும் ஈஷா யோகா மையத்தில் யோகா பயிற்சிக்காக சென்ற சுபஸ்ரீ உயிரிழந்து இருக்கும் நிலையில், சுபஸ்ரீ எப்படி உயிரிழந்தார் என்பதையாவது அரசு தங்களிடம் தெரிவித்தால், துக்கம் விசாரித்தவர்களிடமாவது கூறுவேன் என்று உருக்கமாக பேசி இருக்கிறார்.
கோவை மாவட்டம் வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் அமைந்து இருக்கிறது ஜக்கி வாசுதேவின் ஈஷா யோகா மையம். பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி பல அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என ஏராளமானோர் இந்த மையத்துக்கு சென்று வந்து உள்ளார்கள்.
இந்த யோகா மையத்தை சுற்றிலும் பல்வேறு மர்மங்களும் குற்றச்சாட்டுகளும் உள்ளன. ஏராளமானோர் மர்மமான முறையில் உயிரிழந்து இருப்பதாகவும் புகார்கள் வருகின்றன. இந்த நிலையில்தான் ஈஷா யோகா மையத்தில் பூதாகரத்தை கிளப்பி உள்ளது சுபஸ்ரீயின் மரணம்.

பயிற்சிக்கு சென்ற சுபஸ்ரீ
கடந்த டிசம்பர் 18 ஆம் தேதி காலை திருப்பூர் மாவட்டம் அவினாசியை சேர்ந்த சுபஸ்ரீ என்ற பெண் ஜக்கி வாசுதேவியின் ஈஷா யோகா மையத்தில் யோகா பயிற்சியில் ஈடுபடுவதற்காக சென்று இருக்கிறார். இந்த நிலையில் சுபஸ்ரீயின் கணவர் பழனிகுமார் அவரை வீட்டுக்கு அழைத்து செல்ல ஈஷா யோகா மையத்திற்கு சென்று உள்ளார்.

திரும்பி வராத சுபஸ்ரீ
ஆனால், அவர் பயிற்சி முடிந்து ஈஷா மையத்தில் இருந்து வெளியில் வராததால் அவரது கணவர் பழனிகுமார் அதிர்ச்சியடைந்து இருக்கிறார். வரவேற்பு அறையில் உள்ளவரிடம் தனது மனைவி சுபஸ்ரீயை காணவில்லை என தெரிவித்து இருக்கிறார். அங்கு பொருத்தப்பட்ட சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தபோது கால் டாக்ஸியில் சுபஸ்ரீ ஏறி சென்றது தெரியவந்தது.

சிசிடிவி காட்சி
கால் டாக்ஸி ஓட்டுநரை அழைத்து பழனிகுமார் விசாரணை மேற்கொண்டபோது இருட்டுப்பள்ளம் அருகே சுபஸ்ரீயை இறக்கிவிட்டு சென்றது தெரியவந்து இருக்கிறது. இந்த நிலையில் அந்த பகுதியில் பெண் ஒருவர் வெள்ளை நிற உடை அணிந்து பதற்றத்தோடு ஓடிச்செல்வதை போன்ற காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

சடலமாக வந்த சுபஸ்ரீ
இதையடுத்து ஆலாந்துறை காவல் நிலையத்தில் பழனிகுமார் புகாரளித்து உள்ளார். போலீசார் 6 தனிப்படைகளை அமைத்து சுபஸ்ரீயை தேடி வந்தனர். இந்த நிலையில் செம்மேடு பகுதியை சேர்ந்த கோவிந்தரான் என்பவரின் தோட்டத்தில் இருக்கும் ஒரு கிணற்றில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மிதப்பதாக ஆலாந்துறை போலீசாருக்கு தகவல் கிடைத்து உள்ளது.

சுபஸ்ரீ தாய் பேட்டி
போலீஸ் அழைத்ததன் பேரில் அங்கு சென்ற பழனிகுமார், கிணற்றில் கிடந்தது சுபஸ்ரீயின் உடல்தான் என்பதை உறுதி செய்தார். இதனை தொடர்ந்து பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அவரது உடல் இறுதிச்சடங்கு நடைபெற்றது. இந்த நிலையில் சுபஸ்ரீயின் தாய் செய்தியாளர்களை சந்தித்து தனது மகளின் மர்ம மரணம் குறித்து கண்ணீர் மல்க விளக்கம் அளித்தார்.

சுபஸ்ரீ ஏன் இறந்தார்?
"எனது மகள் சுபஸ்ரீ கோழை இல்லை. அவள் தைரியமான பெண். தானாக போய் தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு அவர் கோழை கிடையாது. என் மகள் எப்படி இறந்தார் என்பதை அரசால் கண்டுபிடிக்க இயலவில்லை. இனியாவது விசாரணை செய்து தெரிவியுங்கள். துக்கம் விசாரிக்க வருவோரிடம் எப்படி சுபஸ்ரீ இறந்தார் என்பதையாவது நான் சொல்வேனே. என்னால் எந்த பதிலையும் சொல்ல முடியவில்லை. எனக்கு தெரியாது என்றே சொல்லி வருகிறேன்." என்றார்.
-
அண்ணா நகர் சிறுமி வழக்கு.. தினமும் விசாரணை நடத்தி விரைந்து முடிக்க ஐகோர்ட் உத்தரவு! -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு?












Click it and Unblock the Notifications