அதிமுகவில் இணையவில்லை.. எல்லாமே பொய்.. லாட்டரி மார்டின் மனைவி லீமா ரோஸ் பரபரப்பு விளக்கம்
கோவை: 2026 சட்டமன்ற தேர்தல் அறிவிப்பிற்கு குறுகிய காலமே உள்ளது. அரசியல் கட்சிகள் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். தேர்தல் என்றால் அரசியல் புள்ளிகள் கட்சி மாறுவது சாதாரணம் தான். பிரபல தொழிலதிபர் லாட்டரி மார்டின் மனைவி லீமா ரோஸ், அதிமுகவில் இணைந்ததாக ஒரு தகவல் பரவி வந்தது. சமீபத்தில் அவர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்திருந்தார். இந்நிலையில் தான் அதிமுகவில் இணைந்ததாக வரும் தகவல் போலியானது என்று லீமா ரோஸ் பரபரப்பு விளக்கமளித்துள்ளார்.
பிரபல லாட்டரி தொழிலதிபர் மார்ட்டினின் மனைவியும், இந்திய ஜனநாயக கட்சி நிர்வாகியுமாக இருப்பவர் லீமா ரோஸ். சமீபத்தில் இவர்களின் மகன் ஜோ சார்லஸ், லட்சிய ஜனநாயக கட்சி தொடங்கி புதுச்சேரி அரசியலில் கவனம் செலுத்தி வருகிறார். அவரின் மருமகன் ஆதவ் அர்ஜுனா தவெகவில் முக்கிய நிர்வாகியாக உள்ளார். முன்னதாக ஜோ சார்லஸ் மற்றும் லீமா ரோஸ் பாஜகவில் இருந்தனர்.

அதிமுகவில் இணைந்தாரா லீமா ரோஸ்
இந்நிலையில் லீமா ரோஸ் கடந்த சில நாட்களுக்கு முன்பு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்தார். இதுதொடர்பான புகைப்படங்கள் சமூகவலைதளத்தில் வெளியாகியிருந்தது. இதனால் அவர் அதிமுகவில் இணைந்துவிட்டார் என்று தகவல் பரவியது. சமூகவலைதளங்களிலும், சில ஊடகங்களிலும் லீமா ரோஸ் அதிமுகவில் இணைந்துவிட்டார் என்று செய்தி வெளியிட்டிருந்தனர். இது சமூகவலைதளங்களில் விமர்சனமாகியிருந்தது.
குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரும் ஆளுக்கு ஒரு கட்சியில் உள்ளனர் என்று விமர்சனமாகியிருந்தது. இருப்பினும் லீமா ரோஸ் அதிமுகவில் இணைந்தது பற்றி அவர் தரப்பிலோ அல்லது அதிமுக தரப்பிலோ அதிகாரபூர்வ செய்தி எதுவும் வெளியிடவில்லை. இதனால் அது உண்மையா, பொய்யா என்கிற குழப்பம் அரசியல் வட்டாரத்தில் நிலவி வந்தது.
பரபரப்பு விளக்கம்
இதுகுறித்து லீமா ரோஸ் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், "அனைவருக்கும் இனிய புத்தாண்டு மற்றும் அட்வான்ஸ் பொங்கல் நல்வாழ்த்துக்கள். லீமா ரோஸ் அதிமுக கட்சியில் இணைந்து விட்டதாக ஒரு உண்மைக்கு புறம்பான செய்தி சமூக ஊடகங்களிலும், செய்தித்தாள்களிலும் பரவி வருகிறது. அவர் இந்திய ஜனநாயக கட்சியின் மாநில இணை பொதுச் செயலாளராகவும், மூத்த முன்னோடி நிர்வாகிகளில் ஒருவராகவும் இருந்து தீவிரமாக கட்சி பணியாற்றி வருகிறார்.
தமிழகத்தில் மிகப்பெரிய தொழிலதிபராகவும், சமூக சேவகராகவும், ஆளுமை மிக்க தலைவராகவும் இருந்து வருகிறார். இந்திய ஜனநாயக கட்சி பாஜகவின் கூட்டணியில் அங்கம் வகித்திருக்கிறது. தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கின்ற கட்சிகளின் தலைவர்களை மரியாதை நிமித்தமாக சந்திப்பது வழக்கம்.
மரியாதை நிமித்தமாக
அதன் அடிப்படையில் கடந்த 9-01-2026 தேதி மரியாதை நிமித்தமாக அதிமுக பொதுச் செயலாளரும், தேசிய ஜனநாயக கூட்டணியின் தமிழக தலைவருமான மரியாதைக்குரிய எடப்பாடி பழனிச்சாமியை மரியாதை நிமித்தமாக சந்தித்தார். இதை பயன்படுத்தி சிலர் லீமாரோஸ் மார்டின் அதிமுகவில் இணைந்து விட்டதாக பரப்பப்படும் செய்தி உண்மைக்கு புறம்பானது ஆகும்" என்று கூறியுள்ளார்.
பாஜக தேசிய செயல் தலைவர் நிதின் நபின் நேற்று முன் தினம் கோவை வந்திருந்தார். பாஜக சார்பில் நேற்று வடவள்ளி பகுதியில் நடைபெற்ற கூட்டத்தில் அவர் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் லீமா ரோசும் பங்கேற்றார். இந்நிலையில் இந்திய ஜனநாயக கட்சி சார்பில் இன்று அவர்களின் கோவை அலுவலகத்தில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவிலும் லீமா ரோஸ் மார்ட்டின் கலந்து கொண்டார்.
-
அவரா? பெரிய தலைக்கட்டாச்சே! தவெகவுக்கு தாவும் ஜெயக்குமார்! எடப்பாடி அடுத்த தலைவலி! பரபர பாலிடிக்ஸ் -
ஒருகாலத்துல எப்படி இருந்த மனுஷன்? விழுப்புரத்தில் ஓரம் கட்டப்பட்ட சிவி சண்முகம்! கண்முன் 3 சான்ஸ்? -
யாரை நம்பி நான் பொறந்தேன்.. விரக்தியான எடப்பாடி! இலைக் கட்சியின் 10 மா.செ.க்கள் தவெகவுடன் பேச்சு? -
தப்பித்தது தம்பிரான் புண்ணியம்.. 21 அதிமுக எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை இல்லை! 4 பேருக்கு தான் சிக்கலே! -
காத்திருந்து காத்திருந்து..பனையூரில் பாழாய்ப் போன கனவுகள்! பதவி இல்லாமல் பரிதவிக்கும் ’தாவல்’ தலைகள்! -
அத்தனை பேரும் இன்ஸ்டாகிராம் வீடியோ போடுங்க.. ஐடி விங் கூட்டத்தில் ராஜ் சத்யனை வறுத்தெடுத்த எடப்பாடி! -
இனிமே சிங்கப் பாதை தான்..ஆக்ஷனுக்கு ரெடியான அதிமுக! திமிறி எழுந்த எடப்பாடி பழனிசாமி! கையில் லிஸ்ட்! -
ஐசியூவில் அதிமுக.. ஆபரேசனுக்கு தயாராவாரா எடப்பாடி? குறுக்கே ஆம்புலன்ஸோடு விஜய்! பரபர பாலிடிக்ஸ் -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு!












Click it and Unblock the Notifications