கோவையில் ஒரு அபிராமி.. கள்ள காதலுக்காக 4 வயது குழந்தையை துடிதுடிக்க கொன்ற தாய்
கோவை: தமிழ்நாட்டில் கொலை, கொள்ளை போன்றவற்றுடன் கள்ள காதல் விவகாரங்களும், அதற்காக நடைபெறும் கொலைகளும் அதிகரித்து கொண்டிருக்கின்றன. காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூரில் அபிராமி என்ற பெண் கள்ள காதல் விவகாரத்தில் தன் இரண்டு குழந்தைகளை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அபிராமிக்கு சாகும்வரை ஆயுள் தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
2018 ஆம் ஆண்டு நடைபெற்ற சம்பவத்துக்கு நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதே நாளில் கோவையில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது அபிராமியை போலவே, கோவை சித்தாள் வேலை பார்க்கும் பெண் கள்ள காதலுக்காக தன்னுடைய 4 வயது பெண் குழந்தையின் கழுத்தை நெரித்து கொடூரமாக கொலை செய்த சம்பவம் நடுநடுங்க வைக்கிறது.

கோவை மாவட்டம், இருகூர் பகுதியைச் சேர்ந்தவர் தமிழரசி (வயது 30). இவருக்கு ரகுபதி (வயது 35) என்பவருடன் திருமணமாகி, 4.5 வயதில் அபர்ணா ஶ்ரீ என்ற குழந்தை உள்ளது. தமிழரசிக்கும், ரகுபதிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழரசி கணவனை பிரிந்து குழந்தையுடன் தனியாக வசித்து வருகிறார்.
குழந்தை மரணம்
தமிழரசி, கட்டிட வேலைக்கு (சித்தாள்) சென்று வருகிறார். இந்நிலையில் நேற்று மதியம் அவரின் குழந்தை அபர்ணாஶ்ரீ திடீரென வாந்தி எடுத்து மயக்கம் அடைந்து விட்டதாக கூறி தமிழரசி 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுத்துள்ளார். ஆம்புலன்ஸ் மூலம் அபர்ணாவை கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதனை செய்ததில் ஏற்கனவே உயிரிழந்தது தெரிய வந்தது.
சந்தேகம்
4.5 வயது குழந்தை மரணமடைந்த தகவல் அவரின் குடும்பத்தினர் மற்றும் அக்கம் பக்கத்தினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனிடையே குழந்தை அபர்ணாஶ்ரீயின் உயிரிழப்பில் சந்தேகம் இருக்கிறது என்று தமிழரசியின் உறவினர்களும், அக்கம் பக்கத்தினரும் புகார் எழுப்பினார்கள். இதுதொடர்பாக சிங்காநல்லூர் காவல்நிலையத்தில் அவர்கள் புகார் எழுப்பினார்கள்.
கள்ள காதல்
இதையடுத்து காவல்துறையினரும் சந்தேகமடைந்து தமிழரசியிடம் விசாரணை நடத்தினார்கள். அதில் அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியுள்ளார். தமிழரசி கணவனை பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில், கட்டிட வேலையில் அவருக்கு வசந்த் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இது நாளடைவில் திருமணம் தாண்டிய கள்ள காதலாக மாறியுள்ளது.
கொலை சதி
கடந்த சில மாதங்களாக தமிழரசி வசந்த மிகவும் நெருக்கமாக இருந்துள்ளனர். தமிழரசியின் வீட்டுக்கு வசந்த் அடிக்கடி வந்து சென்றுள்ளார். அப்போதே உறவினர்கள், அக்கம் பக்கத்தினர் அவர் மீது சந்தேகமடைந்துள்ளனர். அவர்களின் உறவுக்கு குழந்தை அபர்ணாஶ்ரீ இடைஞ்சலாக இருந்துள்ளார். இதனால் குழந்தையை கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர்.
கழுத்தை நெரித்து
கடைசியில் தமிழிரசியே அபர்ணாஶ்ரீயின் கழுத்து நெரித்து கொலை செய்துவிட்டு, உடல்நிலை சரியில்லாமல் நாடகமாடியது தெரியவந்தது. குழந்தை அபர்ணாஶ்ரீ உயிரிழப்பு தொடர்பாக சிங்காநல்லூர் காவல்துறையினர் சந்தேக மரணம் பிரிவில் வழக்கு பதிவு செய்திருந்தனர். தற்போது அது கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது.
விசாரணை
குழந்தையின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குழந்தையை கொலை செய்துவிட்டு கள்ளக் காதலன் வசந்துடன் தமிழரசி சேர்ந்து வாழ திட்டமிட்டதும் காவல்துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதுதொடர்பாக காவல்துறையினர் தமிழரசியை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அதேபோல வசந்திடமும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications