மாட்டுக்கறி சாப்பிடுவியா நீ.. புர்காவில் 'ஷூ' வை துடைக்க வைத்து மாணவிக்கு டார்ச்சர்! கோவையில் பகீர்!
கோவை: கோவையில் இஸ்லாமிய சமுதாயத்தை சேர்ந்த மாணவியிடம் மாட்டுக்கறி சாப்பிடுவதை சுட்டிக்காட்டி பள்ளியில் 2 ஆசிரியர்கள் டார்ச்சர் செய்த நிகழ்வு போலீஸ் புகார் வரை சென்றிருக்கிறது.
கோவை துடியலூர் பகுதியில் உள்ள என்.ஜி.ஓ. நகர் அரசுப் பள்ளியில் முக்தர் என்பவரின் மகள் படித்து வருகிறார். இவரிடம் ஆசிரியர்கள் அபிநயா என்பவரும், ராஜ்குமார் என்பவரும் மாட்டுக்கறி சாப்பிடுவியா நீ , அப்ப உனக்கு திமிர் அதிகமாக தான் இருக்கும் எனக் கூறி மாணவி அணிந்திருந்த புர்கா மூலம் ஷூவை துடைக்க வைத்ததாக மாணவியின் பெற்றொர் தரப்பில் புகார் தெரிவிக்கப்படுகிறது. ஆசிரியர் ராஜ்குமார், மாணவியை வாடி போடி என அழைத்ததுடன் 2 மாதமாக மிரட்டி வந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இது குறித்து பெற்றோர் தரப்பில் பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் புகார் அளித்த போது, இதெல்லாம் ஒரு விஷயமே இல்லை, நான் பார்த்துக் கொள்கிறேன், நீங்க புறப்படுங்க என பதில் அளித்ததாகவும் ஆனாலும் சம்பந்தப்பட்ட அந்த 2 ஆசிரியர்களையும் அழைத்து தலைமை ஆசிரியர் கண்டிக்கவே இல்லை எனக் கூறியும் போலீஸ் நிலையத்திற்கு சென்றுள்ளார்கள் மாணவியின் பெற்றோர். இதையடுத்து மாணவிக்கும், பெற்றொருக்கும் தைரியம் அளித்த காவல்துறையினர் நீங்க எப்போதும் போல் பிள்ளையை பள்ளிக்கு அனுப்பி வைங்க, ஏதாவது பிரச்சனை வந்தால் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் எனச் சொல்லியிருக்கிறார்கள்.
அதன் பேரில் முக்தர் தனது மகளை மீண்டும் பள்ளிக்கு அனுப்பிய நிலையில், தீபாவளி முடிந்து 2 நாட்களில் மீண்டும் வேதாளம் முருங்கை மரம் ஏறிய கதையாக, அபிநயா, ராஜ்குமார் ஆகிய 2 ஆசிரியர்களும் மாட்டுக்கறி சாப்பிடுவதை எல்லோர் முன்னிலையிலும் சுட்டிக்காட்டி தகாத வார்த்தைகளில் திட்டியதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் இந்த விவகாரத்தில் நியாயம் வேண்டி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்துக்கு சென்ற மாணவியின் பெற்றோர், பள்ளியில் தங்கள் மகளுக்கு என்னவெல்லாம் நடந்தது என்பது பற்றி மனு அளித்துள்ளனர்.
இதனிடையே இந்த விவகாரம் பள்ளிக்கல்வித்துறை உயர் அதிகாரிகளின் கவனத்திற்கும் சென்றிருக்கிறது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications