கோவையில் தோல்விதான்.. ஆனால் இதை கவனிச்சீங்களா! திமுகவுக்கு இணையாக தபால் வாக்குகளை பெற்ற அண்ணாமலை!
கோயம்புத்தூர்: கோவை லோக்சபா தொகுதியில் பாஜகவின் அண்ணாமலை தோல்வியடைந்துள்ள நிலையில், அஞ்சல் வாக்குகளில் திமுக வேட்பாளருக்கு இணையான வாக்குகளை அவர் பெற்றிருக்கிறார்.
சமீபத்தில் நடந்து முடிந்த லோக்சபா தேர்தல் மிகுந்த கவனம் பெற்றிருந்தது. கடந்த 10 ஆண்டுகளாக மத்தியில் ஆட்சியில் இருந்த பாஜக கடும் விமர்சனங்களை எதிர்கொண்டு வந்திருந்தது. வட மாநிலங்களை விட தென் மாநிலங்களில்தான் பாஜக மீதான விமர்சனங்கள் அதிகமாகவும், கூர்மையாகவும் இருந்தன. இப்படி இருக்கையில் இந்த தேர்தலில் பாஜக மீண்டும் வெற்றி பெறுமா என்று எதிர்பார்க்கப்பட்டது.

அதே நேரம் தமிழகத்தின் லோக்சபா தேர்தல் முடிவுகளும் உன்னிப்பாக கவனிக்கப்பட்டன. குறிப்பாக தமிழகத்தின் கோவை தொகுதி மீது எதிர்பார்ப்பு அதிகரித்திருந்தது. இந்த தொகுதியில் பாஜக தமிழ் மாநில தலைவர் அண்ணாமலை போட்டியிட்டார். இவருக்கு எதிராக திமுக சார்பில் கணபதி ராஜ்குமாரும், அதிமுக சார்பில், சிங்கை ஜி.ராமச்சந்திரனும் களமிறக்கப்பட்டார்.
தேர்தல் முடிவில் திமுகவின் கணபதி ராஜ்குமார் 5,68,200 வாக்குகள் பெற்று அண்ணாமலையை விட 1,18,068 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அண்ணாமலை 4,50,132 வாக்குகள் பெற்று இரண்டாவது இடமும், சிங்கை ஜி.ராமச்சந்திரன் 2,36,490 வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டார். இந்த வெற்றியை திமுக வெகுவாக கொண்டாடி வருகிறது.
இதற்கு காரணம் அண்ணாமலையின் துடுக்கான பேச்சுதான். "நிச்சயமாக 2024 தேர்தலுக்குப் பிறகு கோபாலபுரத்தில் ஊழல் குடும்பத்தினர் சிறையில் இருப்பார்கள் என்பதற்கு மோடி கேரண்டி கொடுப்பார். தமிழகத்தின் 8 கோடி மக்களும் திமுக என்ற தீய சக்தியிடம் இருந்து காப்பாற்றப்படுவார்கள் என்பதற்கும் மோடி கேரண்டி கொடுப்பார். தேர்தலுக்கு பின் முற்றிலுமாக அது அகற்றப்படும். திமுகவில் வாரிசுகளுக்கு தான் வாய்ப்பளிக்கப்படுகிறது. அவர்கள் என்னதான் தலைகீழாக நின்றாலும் ஜூன் 4-ல் தேசிய ஜனநாயக கூட்டணி தான் வெல்லும்" என்றெல்லாம் பேசியிருந்தார்.
ஆனால் தேர்தல் முடிவுகள் திமுகவுக்கு சாதகமாக அமைந்தது. இந்நிலையில், கோவை தொகுதியில் திமுகவுக்கு நிகராக தபால் ஓட்டுகளை அண்ணாமலை பெற்றிருக்கிறார் என்கிற தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதாவது, கோவையில் மொத்தம் 7,132 அஞ்சல் வாக்குகள் பதிவாகியிருக்கிறது. இதில் கணபதி ராஜ்குமார் 2,772 வாக்குகளையும், அண்ணாமலை 2,524 வாக்குகளையும் பெற்றிருக்கின்றனர். இது ஏறத்தாழ திமுகவுக்கு நிகரான வாக்குகள்தான். இதை சோஷியல் மீடியாக்களில் பாஜகவினர் கொண்டாடி வருகின்றனர். அதேபோல அதிமுகவின் ராமச்சந்திரன் 887, நாதக வேட்பாளர் கலாமணி ஜெகநாதன் 270 அஞ்சல்வாக்குகளைப் பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்! -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
யாருங்க இந்த ஐடியாலாம் தருவது? தவெக விஜய் கொடுத்த வாக்குறுதியில்.. இருக்கும் பெரிய ஓட்டை! -
'ஜனநாயகன்' பட லீக்கில் என்ன நடந்தது.. தமிழக காவல்துறை முழு விளக்கம் -
சாத்தூரில் நயினார் வாங்கிய காத்து.. பாஜக தேசிய தலைவரையே கூட்டி வந்தும் கூட்டம் இல்லை -
ஆட்டம் ஆரம்பம்.. முதல் அடி தங்கம், வெள்ளி விலை.. இந்தியாவில் விடியும் முன்பே ஷாக்!












Click it and Unblock the Notifications