கயிற்று கட்டில் மேல் தூங்கிய குழந்தை மாயம்.. கிணற்றில் பிணமாக மிதந்ததால் அதிர்ச்சி
கிணற்றுக்குள் இருந்து பெண் குழந்தை சடலமாக மீட்கப்பட்டுள்ளது
கோவை: கயித்து கட்டில்மேல தூங்கி கொண்டிருந்த குழந்தை எப்படி மாயமானதோ தெரியவில்லை.. வீட்டின் கிணற்றில் பிணமாக மீட்கப்பட்டுள்ளது பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கோவை அன்னூர் கரியகவுண்டனூரை சேர்ந்த தம்பதி கனகராஜ் - காஞ்சனா. கனகராஜ், ஜேசிபி வாகனம் வாடகைக்கு விடும் தொழில் செய்கிறார். இவர்களுக்கு இரண்டரை வயதில் ஒரு பெண் குழந்தை.. பெயர் அம்ருதா!
விளாங்குறிச்சியில் தோட்டத்துப் பகுதியில் காஞ்சனாவின் பெற்றோர் வீடு உள்ளது. இங்கு நேற்றிரவு இவர்கள் தங்கி இருந்தனர். இவர்களது வீட்டிற்கு உறவினர்கள் சொந்தக்காரர்கள் வந்திருக்கிறார்கள். எல்லோரும் சேர்ந்து சாப்பிட்டு, படுக்க போனார்கள்.

தூங்க சென்றனர்
தம்பதி இருவரும் குழந்தையுடன் வீட்டுக்கு உள்ளே தூங்கினார்கள். வந்திருந்த சொந்தக்காரர்களில் சிலர் வீட்டிற்கு வெளியே கயிற்று கட்டிலில் தூங்கியுள்ளனர். இன்று அதிகாலை இரண்டரை மணிக்கு, குழந்தைக்கு பால் கொடுத்துவிட்டு திரும்பவும் தூங்க வைத்துள்ளார் காஞ்சனா.

காணவில்லை
காலை நாலரை மணிக்கு காஞ்சனா எழுந்து பார்த்தபோது குழந்தையை காணோம். எங்காவது விளையாடி கொண்டிருப்பாளோ என்று வீட்டுக்கு வெளியே வந்து பார்த்தால், அங்கும் இல்லை. இதனால் அந்த தெரு உள்ளிட்ட எல்லா பகுதிகளிலும் குழந்தையை தேடி அலைந்தனர்.

பாழடைந்த கிணறு
அதேபோல, வீட்டிலிருந்து 500 மீட்டர் தூரத்தில், கருவேலங்காட்டுப் பகுதியில் வந்தும் தேடினார்கள். அப்போது, பாழடைந்த கிணற்றில் குழந்தை அம்ருதா கிடப்பதை கண்டு கதறி துடித்தனர். கயிறு கட்டி குழந்தையை தூக்கினார்கள். அம்ருதா கண்ணே திறக்கவில்லை.. இதனால் மயங்கி இருக்கிறாள் என்று ஆஸ்பத்திரிக்கு தூக்கி கொண்டு ஓடினார்கள். ஆனால், குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் சொல்லி விட்டனர்.

விசாரணை ஆரம்பம்
வீட்டுக்கு உள்ளே தூங்கி கொண்டிருந்த குழந்தை எப்படி இருந்தது? ஒருவேளை விளையாட வந்திருந்தாலும், இவ்வளவு தூரம் வந்திருக்க முடியுமா? அல்லது குழந்தையை யாராவது கிணற்றில் வீசி விட்டார்களா? அல்லது குடும்ப தகராறா? என்ன காரணம்? என்றெல்லாம் இதுவரை தெரியவில்லை. ஆனால் துருதுருன்னு விளையாடிட்டு இருந்த குழந்தை, கிணற்றில் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது பற்றி பீளமேடு போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
-
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications