கொங்குமண்டலம் அதிமுகவின் கோட்டை என்கிற மாயை தகர்வது தெரிந்துவிட்டதோ? கமல்
கோவை: கோவையில் மக்கள் நீதி மய்யத்தின் போஸ்டர் கிழிக்கப்பட்ட சம்பவத்தால் கொதித்து போன கமல், அதிமுகவிற்கு பயம் வந்துவிட்டதா என்ற ரீதியில் ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார்.
மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் இந்த தேர்தலில் இதுவரை இல்லாத அளவு விஸ்வரூபம் எடுத்துள்ளார். ஆளும் அதிமுகவை கடுமையாக விமர்சித்து வருகிறார்.
அத்துடன் புதிய புதிய திட்டங்களை முன்வைத்து வருகிறார். சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவ்வாக இருக்கும் கமல்ஹாசன், கோவையில் போஸ்டர் கிழிக்கப்பட்ட சம்பவத்திற்கு ஆளும் அதிமுகவை கடுமையாக விமர்சித்து வருகிறார்.

நன்றி
கமலை வரவேற்பதற்காக கோவை விமான நிலையப் பகுதியில் வைக்கப்பட்டிருந்த விளம்பரப் பதாகை மற்றும் சுவரொட்டிகள் கிழிக்கப்பட்டன. இது தொடர்பாக கமல் பேசுகையில், மக்கள் நீதி மய்யத்துக்கு இலவச விளம்பரம் தேடி கொடுத்ததற்காக அமைச்சர்களுக்கும், கோவை மாநகராட்சிக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதாக கூறினார்.

மக்கள் பணியில் காட்டுங்கள்
இது போன்ற போஸ்டர் கிழிப்பு வேலைகளில் காட்டும் அக்கறையை மக்கள் பணியில் காட்டினால் தன்னை போன்றவர்கள் அரசியலுக்கே வந்திருக்க வேண்டியதில்லை எனத் தெரிவித்தார்.

அதிமுகவின் கோட்டை
கமல் வெளியிட்டுள்ள ட்விட் பதிவில், "கோவை மக்களின் வரவேற்பு வழக்கமான ஆர்ப்பாட்டத்தோடு இருக்க, அரசின் வரவேற்பு ஆபாசமானதாக உள்ளது.
போலீஸை வைத்தே கொடிக்கம்பங்களை வெட்டி வீழ்த்துவது,பேனர்களைச் சிதைப்பது, போஸ்டர்களைக் கிழிப்பது தொடர்கிறது. கொங்குமண்டலம் அதிமுகவின் கோட்டை என்கிற மாயை தகர்வது ஆளுங்கட்சிக்குத் தெரிந்துவிட்டதோ?

பேனர்களை அவிழ்க்க
காவல் துறைக்குப் பல சோலிகள் இருக்கின்றன. நான் செல்லும் இடமெல்லாம் கொடிகளை அகற்ற, போஸ்டரைக் கிழிக்க, பேனர்களை அவிழ்க்க அவர்களைப் பயன்படுத்த வேண்டியதில்லை மாண்புமிகுக்களே" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications